Wednesday, May 28, 2014

உப்பு நெல்லிக்காய் / Uppu Nellikkai

நெல்லிக்காய் சீசனில் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. மிக அருமை.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய் - கீரியது -3 அல்லது தேவைக்கு.
உப்பு - 3 டீஸ்பூன்.

செய்முறை:
நெல்லிக்காயை நன்கு அலசி இரண்டு கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.ஆறியவுடன் அத்துடன் கீரிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பாட்டிலில் வைத்து ஒரு நாள் வெயிலில் வைக்கவும்.
ஒரிரு நாள் கழித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.கை படாமல் ஸ்பூன் வைத்து எடுக்க வேண்டும்.இல்லையெனில் பூஞ்சனம் பிடித்து விடும்.
அதில் இருக்கும் தண்ணீரை டேஸ்ட் செய்து விட்டு  தண்ணீர் குடித்தாலும் வாய் எல்லாம் இனிக்கும்.
பழைய சாதம்,மோர் சாதம்,பருப்பு சாதத்துடன் சாப்பிட சூப்பர்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா..! ஜிவ்...!

priyasaki said...

பார்க்கவே வாயூறுது.நெல்லிக்காய் கிடைத்தால் கண்டிப்பா செய்துடுவேன் ஆசியா.நன்றி.

மனோ சாமிநாதன் said...

அருமையான குறிப்பு ஆசியா!

நெல்லிக்காயை கீறி விட்டு [வேக வைக்காமல்] கொஞ்சம் சீனி தூவி அதன் மேல் சில கீறிய நெல்லிக்காய்களை வைத்து வெய்யிலில் வைத்து விடுவார் எங்கள் உறவினர். இரண்டு நாட்களில் நெல்லிக்காய் சாறும் சீனியும் சேர்ந்த கலவையை குடிப்பார். அமிர்தமாக இருக்கும்.

Shama Nagarajan said...

super akka

Priya Suresh said...

My mouth is watering akka, uppu nellikkai superaa irruku.