Sunday, May 11, 2014

வெஜ் சோமாஸ் / Veg Somas


தேவையான பொருட்கள்;-
மேல் மாவு பிசைந்து எடுக்க:-
மைதா - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பட்டர் அல்லது எண்ணெய் சூடு செய்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர்  - தேவைக்கு.

உள்ளே வைக்க காய்கறி மசாலா செய்ய:
கேரட் - 1
உருளை - 1
பச்சை பட்டாணி - ஒரு கை பிடியளவு
முட்டை கோஸ் கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லியிலை - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

பரிமாறும் அளவு  - 2 - 4 நபர்கள்

செய்முறை:


 மாவுடன் சூடு செய்த எண்ணெய் அல்லது பட்டர் சேர்த்து விரவவும்.தேவைக்கு உப்பு தண்ணீர் சிறிது சேர்த்து பூரி  மாவு போல் பிசைந்து எடுக்கவும். சம அளவில் சிறிய உருண்டைகளாக பிரித்து எடுக்கவும்.
 உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து மசித்துக் கொள்ளவும்.மற்ற காய்கறிகளிகளை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்,காய்கறிகள் எல்லாம் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி வதக்கவும்.
 மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
 கலந்து விட்டு மல்லி இலை சேர்க்கவும்.
 மாவு உருண்டைகளுக்கு தக்கபடி இதனையும் ஆற விட்டு பிரித்து வைக்கவும்.

 சோமாஸ் அச்சில் மாவை பூரி போல மெலிதாக வட்டமாக விரித்து அதில் வைக்கவும்.
 காய்கறி மசாலாவை எடுத்து  வைக்கவும்

 மூடவும், அழுத்தவும். எடுத்து வைக்கவும்.இப்படியே அத்தனை மாவு உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,அடுப்பை மிதமாக சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.

நன்கு பொன்னிறத்தில் சுட்டு எடுக்கவும்.
அப்படியே சும்மாவே சாப்பிடலாம் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.

சுவையான காய்கறி சோமாஸ் ரெடி. 

இது போல் சிக்கன், மட்டன் கீமா சேர்த்தும் சோமாஸ் செய்யலாம்.ஸ்நாக்ஸ்,  டிஃபனாகவும்  சாப்பிட அருமையாக இருக்கும்.

6 comments:

priyasaki said...

வாவ்..ஆசியா.இதை நாங்க பற்றிஸ் என்போம். நானும் இப்படித்தான் செய்வேன்.எங்க வீட்டின் பேவரிட். நிச்சயம் செய்துபார்க்கிறேன்.நன்றி பகிர்விற்கு.

Shama Nagarajan said...

drooling akka

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் குறிப்பு அருமை, ஆசியா.

Jaleela Kamal said...

என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்,அவன் இங்கிருந்தவரை காலை டிபனுக்கு இதான் அடிக்கடி செய்வேன்..
எங்க வீட்டில் அனைவரும் பிடித்த ஸ்னாக்ஸ் மற்றும் டிபன்.இப்ப இத பார்த்த தும் இபப்வ் ஏ செய்ய்னும் போல இருக்கு.

Farin Ahmed said...

Somas looks really super akka

Snow White said...

நானும் இதே முறையில் தான் செய்வேன் அக்கா ... ரொம்ப நல்லா இருக்கு