Friday, June 6, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 19 - திருமதி தஸ்னீம் பாத்திமா - பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு / Guest Post - Bachelor's Chicken Kuttu

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.தஸ்னீம் பாத்திமா.சுறுசுறுப்பான  இல்லத்தரசி.நெல்லை மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்.கணவர் பீர் முஹம்மது அபுதாபியில் பணியில் உள்ளார்.அலாவுதீன்,அல்ஃபியா என்ற அழகான இரண்டு குழந்தைகள் என்று தன் சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார். 

தன் குழந்தைகள் படத்தை ஃப்ரஃபைல் படமாக அனுப்பியிருக்கிறார்.
 செல்லங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

இவர் இன்று நம்முடன் பகிரவிருக்கும் குறிப்பு பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு.
சுலபமாக வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் வைத்து செய்து அசத்தியிருக்கிறார். பேச்சிலர்ஸ் மட்டுமல்ல அனைவரும் செய்து சுவைக்க வேண்டிய ருசியான ஈசியான குறிப்பு.


தேவையா பொருட்கள்;
சிக்கன் துண்டுகள் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
தக்காளி அரைத்தது - 2 பெரியது (200 கிராம்)
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.
சமைக்கும் நேரம் - 20 -  30 நிமிடங்கள்

செய்முறை:
சிக்கன் துண்டுகளை  நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

வதங்கிய பின்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.


அரைத்த தக்காளி விழுதைச்  சேர்த்து  நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய் சேர்க்கவும்.

தண்ணீர் வடித்த சிக்கன் துண்டுகளைச்  சேர்க்கவும்.

ஒரு சேர பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கனில் ஊறும் தண்ணீரே போதுமானது.தேவைக்கு  உப்பு சேர்க்கவும்.

சிக்கன் வெந்து இப்படி கூட்டு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.


சுவையான பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு ரெடி. 
சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.பிரியாணி,ஒயிட் ரைஸ், வெரைட்டி ரைஸ்,சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறலாம்.வெங்காயம் சேர்க்காததால் பயணத்திற்கு எடுத்துச் செல்லவும் நன்றாக இருக்கும்.ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிட்டாலும் அதே ஃப்ரெஷ் சுவையுடன் இருக்கும்.விரும்பினால் மல்லி இலை கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

என் குறிப்பை பகிர வாய்ப்பளித்த ஆசியா மாமிக்கு மிக்க நன்றி.

அருமையான சுலபமாக செய்யக் கூடிய இந்தக் குறிப்பை நம்முடன் பகிர்ந்து அசத்திய திருமதி தஸ்னீம் பாத்திமாவிற்கு மனமார்ந்த நன்றி மற்றும் மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்புக்கள் அனுப்ப விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான குறிப்பு... சிறப்பு விருந்தினர் திருமதி.தஸ்னீம் பாத்திமா அவர்களுக்கும் நன்றி.... வாழ்த்துக்கள்...

Saratha said...

சிக்கன் கூட்டு எளிமையாகவும் அசத்தலாகவும் இருக்கு.திருமதி தஸ்னீம் பாத்திமாவுக்கும் வாழ்த்துக்கள்.

ஆசியா நீங்களும் சிறப்பு விருந்தினர் பகிர்வை அசத்துங்க!

Jaleela Banu said...

மிகவும் சுலபமாக செய்ய கூடிய சிக்கன் கூட்டு அருமை. தஸ்னீக்க்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் , எங்க ஊரிலிருந்து போஸ்ட் போடுறீஙக்ளா , இல்ல அல் அயின் வந்தாச்சா?