Wednesday, June 4, 2014

குளு குளு நன்னாரி சர்பத் / Chill Chill Nannari Serbeth



தேவையான பொருட்கள்;
நன்னாரி சர்பத் சிரப் - 3 டேபிள்ஸ்பூன்
ஊற வைத்த  பாதாம் பிஸின் - ஒரு குழிக்கரண்டி
தேவைக்கு பாதி பழம் எலுமிச்சை ஜூஸ்
ஊறிய சப்ஜா விதை - சிறிது விரும்பினால்.
நொறுக்கிய ஐஸ் கட்டிகள் - சிறிது.

செய்முறை:
முதல் நாள் இரவே தேவைக்கு பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் நன்றாக ஊறி இப்படி காணப் படும்.


ஒரு கண்ணாடி டம்ளரில் ஒரு குழிக்கரண்டி ஊறிய பாதாம் பிஸின், நன்னாரி சர்பத்,எலுமிச்சை ஜூஸ் சுவைக்கு சேர்த்து தூளாக்கிய ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு கலந்து ஜில்லென்று பரிமாறவும்.


குளு குளு நன்னாரி சர்பத் ரெடி.

நன்னாரி சர்பத்துடன் ஊறிய சப்ஜா விதை சேர்த்தும் ஜில்லென்று பரிமாறலாம். கோடைக்கால வெயில், நோன்புக் கால சூட்டையும் தணிக்கக் கூடிய பானம்.




ரூஹாஃப்சவுடன் சப்ஜா விதை சேர்த்தும் ஜில்லுன்னு பானம் தாயாரித்து பரிமாறலாம்.



8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குளு குளு நன்னாரி சர்பத் செய்முறைக்கு நன்றி சகோதரி...

priyasaki said...

சர்பத் அருமை.பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

சின்ன வயதில் என் தாத்தா கோடைக் காலத்தில் விரும்பிப் பருகுவதோடு எங்களுக்கும் தருவார்கள். நல்ல பதிவு.
நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...

படங்களும் அருமை.

athira said...

உண்மையில் குளு குளுவா இருக்கு.

Priya Suresh said...

Yennoda favourite summer drink..

ஜீவன் சுப்பு said...

நேத்துத்தான் நன்னாரி ஒரு பாட்டில் வாங்கியாந்தோம் . அதென்னங்க பாதாம் பிசின் அது எங்க கிடைக்கும் , எப்டி பண்றது ?

வெங்கட் நாகராஜ் said...

இம்முறை ஊருக்குச் சென்றபோது ந்ன்னாரி சர்பத் வாங்கிக் கொண்டேன். தில்லியில் கிடைப்பதில்லை.