Saturday, June 28, 2014

நார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle



 தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ)
கல் உப்பு தேவைக்கு.

வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு.
சிறிது எண்ணெய் விட்டு கருகாமல் வறுத்து ஆற விட்டு  பொடிக்கவும்.

ஊறுகாய் தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
தேவைப்பட்டால் காரம் கலருக்கு மிளகாய்ப் பொடி சிறிது.
மிளகாய் வற்றல் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டால் மிளகாய்த்தூள்  சேர்க்க தேவையில்லை.

செய்முறை:
நார்த்தங்காயை தண்ணீர் விட்டு அரை வேக்காடு வெந்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளுடன் உப்பு போட்டு நன்கு குலுக்கவும். வெயிலில் 3 நாட்கள் வைத்து எடுக்கவும். இப்படியே உப்பு நார்த்தங்காயாக சாப்பிட ஒரு வாரம் ஊற விட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு  கருவேப்பிலை,பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். சிறிது மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
ஊறிய நார்த்தங்காயை சேர்க்கவும்.ரெடி செய்த பொடியை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் வேக விடவும்.

ஆற விட்டு ஒரு பாட்டிலில் அல்லது டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவைக்கு ஸ்பூன் போட்டு எடுத்து பரிமாறவும்.

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது, இந்த ஊறுகாய் அம்மா கைவண்ணம்தான் பிடிக்கும் எனக்கு, இந்த ஊறுகாய் இருந்தால் சோறு ரெண்டு மூன்று தடவை வாங்கி சாப்பிடுவேன், அம்மா தள்ளாடாமல் இருந்தபோது யார் ஊரில் இருந்து வந்தாலும் கொடுத்து அனுப்புவாங்க...

ம்ம்ம்ம் உங்க பதிவை பார்த்ததும் [[போட்டோ]] அம்மா நியாபகமும் கண்ணில் நீர் துளியும்...

இந்த ஊறுகாய் சுகருக்கு நல்லது என்று சொல்ல கேட்டுருக்கேன் !

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது ஆசியா, நார்த்தங்காய் ஊறுகாய்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக அருமையான செய்முறை ஆசியாம்மா. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Irresistible pickle, can have it happily with a bowl of rasam rice.

Shama Nagarajan said...

drooling pickle akka

Abu Nadeem said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையகங்ளின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.