Wednesday, June 11, 2014

இறால் சேமியா / Prawn Vermicilli



தேவையான பொருட்கள்;-
இறால் மீடியம் சைஸ் - 30 எண்ணம் 
சேமியா - 400 - 500 கிராம்
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 3
மல்லி புதினா - தலா ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 + 3 டீஸ்பூன்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சைப் பழம் - பாதி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 1/2 + 1/2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் ,நெய் - தலா 75 மில்லி
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 - 5 நபர்கள்.

செய்முறை:
இறாலை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
இறாலில் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தேவைக்கு உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறிய இறாலை சாஃப்டாக பிரட்டியது போல் வெந்து வைக்கவும்.
சேமியாவை பொன்னிறமாக 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
சேமியா செய்யும் பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.தக்காளி,தேவைக்கு உப்பு சேர்த்து வதங்க விடவும்.
மிளகாய்த்தூள் சேர்க்கவும்.கூட்டு போல் ஆனவுடன் தயிர் சேர்க்கவும்,பிரட்டவும்.
தேங்காய்ப்பால் சேர்க்கவும்.சேமியா அளவிற்கு ஒன்றரை அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
நுரை கூடி கொதி வரட்டும்.
சேமியா சேர்க்கவும்,வெந்து மேலே வரும் பொழுது வெந்த இறாலை அப்படியே தட்டவும்.விரும்பினால் சிறிய எலுமிச்சையில் பாதி பிழிந்தால் சேமியா உதிரி உதிரியாக இருக்கும்.
ஒரு சேர பிரட்டி விடவும்.அழகுக்கு நறுக்கிய மல்லி புதினா சிறிது தூவி அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான இறால் சேமியா ரெடி.
ஆனியன் ரைத்தா சிக்கன் ஃப்ரையுடன் பரிமாறினால் சூப்பர்.

இறால் வசதியாக கிடைக்கும் பொழுது செய்து பாருங்க,சூப்பராக இருக்கும்.

2 comments:

Krishnaveni said...

new to me, looks great

Priya Suresh said...

My mouth is just watering here..Very tempting prawn vermicelli.