Tuesday, June 17, 2014

எள்ளுக் கத்திரிக்காய் / Sesame / Gingelly Brinjal

தேவையான பொருட்கள் ;-
கத்திரிக்காய் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உ.பருப்பு,வெந்தயம் – தலா – கால் டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 இணுக்கு
மிளகாய்த்தூள் ,- 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகு,சீரகம்,சோம்புத்தூள் – தலா அரைடீஸ்பூன்
எள்ளு வறுத்துப் பொடிக்க – ஒரு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
கத்திரிக்காயை கொண்டையை நீக்கி விட்டு நான்காக தொடுப்பு வைத்து கீறி வைக்கவும்.
நறுக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் பரபரவென்று சுற்றி எடுத்து வைக்கவும். புளியை ஊற விட்டு கெட்டியாக வடிகட்டி வைக்கவும்.எள்ளை மணம் வரும்படி வறுத்து பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம் போட்டு தாளிக்கவும்,மிளகாய்,கருவேப்பிலை போடவும்,வதக்கவும்,வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்.அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து பிரட்டவும்.
கத்திரிக்காய் சேர்த்து வதக்கி தேவைக்கு உப்பு சேர்க்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
கத்திரிக்காய் வெந்து வரும் பொழுது புளிக் கரைசல் சேர்க்கவும்.புளி வாடை மடங்குமாறு நன்கு கொதிக்க விடவும்.

 மணம் வரும்படி எள்ளை வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.


 எள்ளுப் பொடியை சேர்த்து ஒரு சேர பிரட்டி  விடவும் அடுப்பை சிறிது நேரம் சிம்மில் வைத்து அணைக்கவும்.
சுவையான எள்ளுக் கத்திரிக்காய் ரெடி.
இதனை ப்லைன் ரைஸ், பிரியாணி, புலாவ், தேங்காய்ச் சோறு, நெய்ச் சோற்றுடன் பரிமாறலாம்.

7 comments:

Shama Nagarajan said...

delicious akka..yummy preparation

nasreen fathima said...

Akka easy method la Paakavay super ya iruku....

Priya Suresh said...

Who will say no to this irresistible dish, definitely not me..Super Akka.

athira said...

சூப்பர்.. செய்து பார்க்க தூண்டுது படங்கள்.

நீங்க இன்னமும் ஊரிலோ இருக்கிறீங்க ஆசியா?

இமா said...

பிடித்திருக்கிறது ஆசியா. முயற்சி செய்கிறேன்.

nafeesa said...

Akka could u plz tell me ..lemon sized tamarind means.. How to Exactly measure...Plz help me...why because if i exceed my tamarind level my hubby doesn't like..n also taste will be different...not alone for this recipe..for all..iam in L Board in cooking thats why iam asking this kind of silly question...one more thing your BLOG is simply superb..

Asiya Omar said...

nafeesa, புளி உங்க ருசிக்கு ஏற்ப சேர்த்து செய்யுங்க, லெமன் சைஸ் தான் சேர்க்கனும்னு இல்லை.எப்பவும் காரம் புளி,உப்பு அவங்க அவங்க விருப்பம் தான்.கருத்திற்கு நன்றி.