Sunday, June 8, 2014

நுங்கு பதனீர் /Tender palm fruit & Sweet toddy


தேவையான பொருட்கள்:-
நுங்கு - 4
பதனி - அரை லிட்டர்.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 செய்முறை:-
 நுங்கு பதனீர் கோடையின் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது.
ஃப்ரெஷாக நுங்கு பதனீர் கிடைக்கும் பொழுது வாங்கி பருகலாம்.
நுங்கின் தோலை உரித்து தனியாக வைக்கவும்.நுங்கு உரித்த பின்பு ஜெல்லி போல் இருக்கும்.நுங்கை கையால் நன்கு நொறுங்க பிசைந்து விடவும்.அத்துடன் பதனீர் கலந்து கொள்ளவும்.
அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.
பதனீர் சேர்க்காமல் நுங்குடன் சீனி,பால் சேர்த்து கலந்தும் பரிமாறலாம்.

சுவையான நுங்கு பதனீர் வெட்டி தரும் இடத்திலேயே இப்படி முடைந்த பச்சை பனையோலையில்  சுவைக்கும் பொழுது அதன் சுவையே தனி தான்.


இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தால் வாங்கி பருகிப் பார்க்கவும்.

பதனீர் ஓலை.

2 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

கோடை காலத்திற்கு ஏற்ற பானம் அருமை சகோதரி .பகிர்வுக்கு மிக்க
நன்றி .

வெங்கட் நாகராஜ் said...

பதனீர் இல்லாது நுங்கு மட்டும் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். கேரளத்தில் சில இடங்களில் நுங்கு சர்பத் கிடைக்கிறது....