Thursday, July 10, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு -20 / பேக்ட் மீட் பாஸ்தா / Baked Meat Pasta (Indo Style)

என் மகனுக்கு மிகவும் பிடித்த பேக்ட் பாஸ்தாவை அவரே செய்வதாய் சொன்ன பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் மகன் எது செய்தாலும் செம டேஸ்டாக இருக்கும். எனக்கு என்றுமே மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம்.
இதோ உங்களுக்காக அந்த பகிர்வு. ஊரில் கிடைத்த பொருட்களை வைத்து செய்து அசத்தியிருக்கிறார். குக்கிங் அவரோட மிக விருப்பமான ஹாபி.Bechemal mix, knorr seasoning powder மட்டும் நான் எடுத்து சென்றிருந்தேன்.
பேக்ட் மீட் பாஸ்தா:


தேவையான பொருட்கள்:-
எல்போ பாஸ்தா - 500 கிராம்
கொத்துக்கறி - 500கிராம்
தக்காளி ப்யூரி - அரைக்கிலோவில் தயார் செய்தது
நறுக்கிய வெங்காயம் - பெரியது 2
நறுக்கிய கொடை மிளகாய் - 2
Bechamal mix - 1 பேக் + பால் அரை லிட்டர்.
துருவிய மொசரல்லா அல்லது ஸ்லைஸ்ட் செடார் சீஸ் - 200 கிராம் 
ஆலிவ் எண்ணெய் - 3 -4 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் கிள்ளியது - 3
உப்பு தேவைக்கு.
கருவேப்பிலை - தேவைக்கு.


செய்முறை:பாஸ்தாவை தாராளமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து பக்குவாக வேகவைத்து வடித்து வைக்கவும்.

கறி ஊற வைத்து வேக வைக்க :
சுத்தம் செய்து அலசி வடிகட்டிய கொத்துக்கறி - 500கிராம்
Knorr seasoning mix - 10 கிராம்(சிறிய பேக்)
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

கறியை நன்கு அலசி தண்ணீர் வடிக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சீசனிங் பவுடர் சேர்த்து 1 மணி நேரம் மேரினேட் செய்யவும்.
குக்கரில் 3விசில் வேக வைத்து எடுக்கவும்.


தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து தோல் உரித்து ப்லெண்ட் செய்து எடுத்து வைக்கவும்.


Bechamal mix பாலில் கலந்து அடுப்பை மீடியமாக வைத்து கெட்டியாகும் வரை விடாமல் மிக்ஸ் செய்து அடுப்பை அணைக்கவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கிள்ளிய வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வேக வைத்த கறியை சேர்க்கவும்.வதக்கவும்.
தக்காளி ப்யூரியை சேர்க்கவும்.

கலந்து விடவும்.நறுக்கிய கொடைமிளகாய் சேர்க்கவும்.


சிறிது அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.தயார் செய்த கறியை வேக வைத்த பாஸ்தாவுடன் கலந்து வைக்கவும்.பேக்கிங் பவுலில் சிறிது எண்ணெய் தடவி முதல் லேயர் பாஸ்தா மிக்ஸ் வைக்கவும்.
ரெடி செய்த bechamal sauce விடவும்.
அதற்கு மேல் மீண்டும் பாஸ்தாவை பகிர்ந்து வைக்கவும்.
மீண்டும் bechamal sauce விடவும்.
செடார் சீஸ் ஸ்லைஸ் செய்து வைத்ததை மேற்புறமாக பவுல் முழுவதும் கவர் செய்து  வைக்கவும்.
அலங்கரிக்க கருவேப்பிலை கூட பயன்படுத்தலாம். சூப்பர் மணம்.(மகன் ஐடியா)


முற்சூடு செய்த கேஸ் ஒவனில் மீடியம் ஃப்லேமில் கவனமாக பேக் செய்து இரண்டு பவுலையும் எடுக்கவும்.எலெக்ட்ரிக் ஓவனிலும் வைக்கலாம்.
லேசாக பொன்னிறத்தில் மேற்புறம் ஆனவுடன் கவனமாக வெளியே எடுக்கவும்.
ஒரு பவுலில் உள்ளதை ஒன்பது சதுரங்களாக கட் செய்து பரிமாறவும்.
இரண்டு சதுர பவுலில் வைத்ததால் எனக்கு 18 சதுர துண்டுகள் கிடைத்தது.
6-8 நபர்களுக்கு பரிமாறலாம்.
சுவையான நம்ம டேஸ்டிற்கு ரெடி செய்த பேக்ட் மீட் பாஸ்தா ரெடி.பரிமாறும் பொழுது படம் எடுக்க முடியவேயில்லை. நிம்மதியாக பிள்ளைங்க சாப்பிடட்டும்னு விட்டுட்டேன்.:) !
சும்மா படம் எடுத்தது மட்டும் தான் நான், நறுக்கியதில் இருந்து சமையல் பகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன் கையாலேயே முழுவதும் பேக் செய்து எடுத்தது வரை என் செல்ல செல்வ மகனே ! 


கூட மாட ஒத்தாசை செய்ய மட்டுமே  நாங்கள் :) !
ரமதான் ஸ்பெஷல் பகிர்வு இது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ஆமாம் இதனை இந்த வார சிறப்பு விருந்தினர் பகிர்வில் கூட சேர்க்கலாமே !
செய்து பகிர்ந்தவர் என் அன்பு மகனார் ஸாஹித் உமர். நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர்.

7 comments:

Vimitha Anand said...

Paakave super a irukku...

Shama Nagarajan said...

tempting preparation ...yummy

Priya Suresh said...

Love to finish my lunch with this fantastic dish.

சே. குமார் said...

நல்ல ரெசிபி...
பார்த்து... வாசித்து... சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..
செய்து சாப்பிட இங்கு முடியாது...

சரி மாப்பிள்ளையின் அருமையான ரெசிபிக்காக அவருக்கு வாழ்த்துக்கள்...

nasreen fathima said...

Meen kutti ku neendha solli kodukanumaa. ...realy tempting. .best of luck new chef

Saratha said...

ஆசியா எப்படி இருக்கீங்க? நான் பெங்களூர் சென்று விட்டு இன்று தான் வந்தேன்.உங்களுடைய பகிர்வு எல்லாவற்றையும் பார்த்தேன்.சிறப்பு விருந்தினர் பகிர்வில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை மகன் சாஹித் நிருபித்து விட்டார்.சாஹித்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

Mahi said...

Wow!! Super akka! Pasta looks delicious Shahid! 😀