Monday, July 7, 2014

வெள்ளரிக்காய் பச்சடி / Cucumber Pachadi


தேவையான பொருட்கள்:
வெள்ளரிப் பிஞ்சு - 6
நறுக்கிய சிறிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
அரைக்க: 
தேங்காய் - 3-4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 3-4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - அரைடீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை - சிறிது

பரிமாறும் அளவு - 4-6 நபர்கள்.

செய்முறை:
வெள்ளரிபிஞ்சை தோல் சீவி நீளவாட்டில் ஸ்லைஸ் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மேற்குறிப்பிட்ட அளவு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிள்காய், கருவேப்பிலை,வெள்ளரிக்காய் சிறிது தண்ணீர்,தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்தபின்பு அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் சிறிது சூடு படுத்தவும்.திரியக் கூடாது.
தாளிப்பை கொட்டவும்.
கலந்து விடவும்.

சுவையான வெள்ளரிப் பச்சடி ரெடி.
நெய்ச்சோறு,புலாவ், பிரியாணி,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

ரெசிப்பி - சமையற்காரம்மா மரியம் பீவி.

6 comments:

Sangeetha Nambi said...

Never tried at home... Bookmarked !

திண்டுக்கல் தனபாலன் said...

வெள்ளரிப் பச்சடி செய்முறைக்கு நன்றி சகோதரி...

வெங்கட் நாகராஜ் said...

வெயிலுக்கு இதமாய் இருக்கும்....

ADHI VENKAT said...

வெள்ளரியை அடுப்பில் வைத்து பச்சடி செய்ததில்லை. இம்முறை புதுமையாக உள்ளது. செய்து பார்க்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பச்சடி. அப்படியே சாப்பிடலாம். ;)))))

சே. குமார் said...

வெள்ளரிப் பச்சடி புதுமையாய் இருக்கு...

அருமை அக்கா.