Wednesday, July 9, 2014

கிர்னிப்பழ மில்க் ஷேக் / Musk melon milk shake



தேவையான பொருட்கள்:
கிர்னிப்பழம் மீடியம் சைஸ் - 1
பால் - அரை லிட்டர்
சீனி - 6 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கியூப் - தேவைக்கு

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.

செய்முறை:
கிர்னிப்பழத்தின் தோலை சீவி பின்பு பழத்தை பாதியாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் அல்லது ப்லெண்டரில் பால், ஐஸ்கியூப், சீனி இவற்றுடன் கிர்னிப்பழம் சேர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.
ப்லெண்ட்டரில்  அடிப்பதை இரண்டு முறையாக செய்தால் மில்க் ஷேக் நன்றாக அரைபட்டு சூப்பராக வரும்.
ஐஸ் கியூப் சேர்த்து  அடித்தால் உடனே பரிமாறலாம். இல்லையெனில் முன்பே அடித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.
சுவையான கிர்னிப்பழ மில்க் ஷேக் ரெடி. 
அடிக்கும் வெயிலிற்கு இதனை செய்து பருகினால் இதமாக இருக்கும்.
நோன்பு திறக்கும் பொழுதும் பரிமாறலாம்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களுக்கு மிகவும் நல்லது...!

நன்றி சகோதரி...

சே. குமார் said...

ஆஹா... சூப்பர் அக்கா...
இந்த வெள்ளி அன்று செய்து சாப்பிட வேண்டியதுதான்...

ADHI VENKAT said...

சுவையான, சத்துள்ள குறிப்பு.

தில்லியில் கோடையில் எப்போதும் செய்வேன். இன்று கூட பழம் உள்ளது. ரோஷ்ணிக்கு செய்து கொடுக்கிறேன்.

priyasaki said...

நான் செய்து குடித்தாயிற்று.சூப்ப்ப்பர் டேஸ்ட். நன்றி.