Thursday, September 4, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 21 - திருமதி ஹிமாயா நிஸ்டார் / கிரில்டு சிக்கன் / Guest Post -21 - Mrs.Himaya Nistar / Grilled Chicken

 இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி ஹிமாயா நிஸ்டார், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர். இல்லத்தரசியான இவர் தன் கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில்  வசித்த சமயம் அரேபிய உணவு வகைகளால் ஈர்க்கப்பட்டதாகவும் அங்குள்ள உணவு வகைகள் கணவருக்கு விருப்பம்  என்பதால் வகை வகையாக செய்து பழகியதாகக் குறிப்பிடுகிறார்.

சமையல் செய்யும் பொழுது   சேர்க்கும் பொருட்களில் சிறிய சிறிய மாற்றம் செய்தாலே நல்ல ருசிகரமான குறிப்புகளை நாமே  உருவாக்கிவிடலாம் என்கிறார்.

இவர் இன்று நம்முடன் கிரில்டு சிக்கன் செய்முறையை பகிரவிருக்கிறார்.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இலகுவான முறையில் கிரில்டு சிக்கன்செய்து காட்டியுள்ளார்.

 தேவையான பொருட்கள்;
சிக்கன் லெக் பீஸ் - 4 - 6 துண்டுகள்
கெட்டித்தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர்  -அரை அல்லது  1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை அல்லது 1 டீஸ்பூன்
ரெட் கலர் - பின்ச் விரும்பினால்
வெஜிடபிள் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

உங்கள் தேவைக்கு தகுந்தபடி சிக்கன் அளவுக்குத்  தகுந்தபடி  மற்ற பொருட்களின் அளவை சேர்த்துக் கொள்ளவும்.

முதலில் தேவையான பொருட்களை ரெடி செய்து  கொள்ளவும்.


 சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து துண்டுகளின் இருபுறமும் கீறிவிட்டுக் கொள்ளவும்.
 ஒரு பெரிய பவுலில் சிக்கன் தவிர சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 சிக்கன் துண்டுகளைச் சேர்த்து ரெடி செய்த மசாலாவில் நன்கு கலந்து குறைந்தது ஃப்ரிட்ஜில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.( மீடியம் வெப்பநிலை)
 ஊறிய சிக்கனை கிரில் செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்து வைக்கவும்.கிரில் அடுப்பிலோ அல்லது பார்பிகியூ அடுப்பிலோ இருபுறமும் நன்கு வேகும் படி மீடியம் ஃப்லேமில் சுட்டு எடுக்கவும்.

 சுவையான கிரில்டு சிக்கன் ரெடி.
ரெடியான கிரில்டு சிக்கனுடன் சாலட் மற்றும் ஹமூஸ், கார்லிக் சாஸ் குபூஸ்,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.பக்க உணவு உங்க விருப்பம் தான்.
இலகுவான இந்த முறைப்படி செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.

நாங்கள்  ஒரு முறை ஹிமாயா பர்வீன்  வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்த பொழுது சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டிருந்தேன்.
உடன் படங்களுடன் அவர் செய்து பரிமாறிய கிரில்டு சிக்கன் ரெசிப்பியையே இங்கு குறிப்பாக அனுப்பிவிட்டார்.படங்களும் செய்முறையும் அருமை எனபதைச்  சொல்லவும் வேண்டுமோ!

பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி ஹிமாயா பர்வீன். .தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது இங்கு  குறிப்புகள் பகிர்வதாகச் சொல்லியிருக்கிறார்.மனமார்ந்த நன்றி.
ஒருமாதமாக தூங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவை நீங்க குறிப்பு அனுப்பி தட்டி எழுப்பி விட்டீர்கள். இனியாவது தொடர்ந்து  குறிப்புகள் பகிர முயற்சிக்கிறேன்.


அவர்கள் வீட்டில் பரிமாறிய விருந்தின் பகிர்வு உங்கள் கண்ணிற்கு விருந்தாக இதோ!



சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்.

4 comments:

Saratha said...

சிறப்பு விருந்தினர் பகிர்வு மூலம் உங்கள் வலைப்பூ புத்துணர்ச்சி பெற்று விட்டது.இனி நீங்களும் நிறைய பகிர்வுகள் கொடுங்க ஆசியா!

சிக்கன் ரெசிபியும் அசத்தலா இருக்கு.

Snow White said...

parthale sapidanum pola irukku ... sirappu virunthinar pagirvum arumai ...thodarnthu kalakunga

Shama Nagarajan said...

yummy preparation

Jaleela Kamal said...

கிரில் சிக்கன் மிகவும் அருமை. ஹிமாயாவுக்கும் , அதை பகிர்ந்த உஙக்ளுக்கும் வாழ்த்துக்கள்.
மற்ற ரெசிபிகளும் மிக அருமை