Sunday, September 14, 2014

நெத்திலி மீன் கூட்டு / Anchovies Kootu


தேவையான பொருட்கள்;
நெத்திலி மீன் - கால்  கிலோ 
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு.
(விரும்பினால் - தட்டிய பூண்டு பல் 3)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2- 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 -  ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை::
முதலில் ஒன்னரை வெங்காயம்,இரண்டு தக்காளியை பரபரவென்று மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
மீதி பாதி வெங்காயம் தாளிக்க நறுக்கி வைக்கவும்.



மீனின்  தலை,வயிற்றுப்பகுதி கழிவு நீக்கி,முள் விரும்பினால் எடுத்து சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.


 மீன் செய்யும்  அகல சட்டியில் முதலில் எண்ணெய் காயவிட்டு விட்டு,கடுகு,உளுத்தம் பருப்பு வெந்தயம் கருவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்முறுகலாக வதக்கவும், தட்டிய பூண்டு விரும்பினால் சேர்க்கலாம்.

பின்பு அத்துடன் கொரகொரவென்று அரைத்த வெங்காயம் தக்காளி விழுது,சிறிது உப்பு  சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

வதங்கியதும் மேற்குறிப்பிட்ட மசாலா (மிள்காய்த்தூள்,சீரக சோம்பு,மல்லி,மஞ்சள் தூள் ) அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
கரைத்த புளிக்கரைசல் விட்டு நன்கு கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும்.
புளி,மசாலா வாடை மடங்கியதும் நெத்திலி  மீன் சேர்த்து கொதிக்க விடவும்.அகப்பை போடக் கூடாது. அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும். கெட்டியாக இருக்க வேண்டும்.
மீன் வெந்து, எண்ணெய் மேல் வரவும் அடுப்பை அணைக்கவும்.


சுவையான நெத்திலி கூட்டு ரெடி. 
சூடான சாதம், கீரை, ரசத்துடன் பரிமாறவும். இக்கூட்டு தேங்காய் சேர்க்காமல் செய்தால் தான் சுவை அபாரமாக இருக்கும்.


நெத்திலி மீன் சுத்தம் செய்வது எப்படி ? பார்க்க இங்கு கிளிக்கவும்.

5 comments:

சே. குமார் said...

அஹா அருமையான குறிப்பு...
நெத்திலி வாங்கி செய்து பார்த்துவிட வேண்டியதுதான்...

அருமை அக்கா....

Shama Nagarajan said...

delicious preparation....inviting me

Priya Suresh said...

Meen kootu paathathume yennaku pasikuthu akka.

priyasaki said...

ஆசியா
என வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
http://piriyasaki.blogspot.de/2014/09/blog-post.html
வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

athira said...

மிக அருமை...