Sunday, September 28, 2014

வறுத்தரைத்த தேங்காய்ச் சட்னி


வறுத்து அரைக்க:
தேங்காய் துருவியது - 1 கப்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 1 இணுக்கு
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பல் - 1
தக்காளி - பாதி
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - கால் ஸ்பூன்
வற்றல் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:
தேங்காய்த்துருவல், வற்றல், பூண்டு,கருவேப்பிலை பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.
வறுத்தவை ஆறியவுடன்  மிக்சி ஜாரில் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து அரைக்கவும்.அத்துடன் பாதி  தக்காளி சேர்க்கவும்.மீண்டும் அரைக்கவும்.தேவைக்கு உப்பு கெட்டித்தன்மைக்கு தக்கப்டி தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து பவுலில் ஊற்றவும்.மேலே தாளித்து கொட்டவும்.
சுவையான வறுத்தரைத்த தேங்காய்ச் சட்னி ரெடி.
இட்லி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம்.
காலையில் அரைத்து கைபடாமல் எடுத்துப்,  பரிமாறினால்  மீதி மாலை வரை கெடாமல்அப்படியே இருக்கும்.


7 comments:

priyasaki said...

வாவ் எனக்கு அடிக்கடி தேவைப்படும் குறிப்பு. மிக்க நன்றி ஆசியா பகிர்வுக்கு.

கோமதி அரசு said...

மிக அருமையான சட்னி.

சே. குமார் said...

நல்ல குறிப்பு அக்கா...
வாழ்த்துக்கள்...

sangeethas creations said...

suvaiyana chutney ... nangalum ithe muraiyil than seivom .anal thakkali serthathu ilai . aduththa murai seithu parkkiren nandri ..

Saratha said...

நானும் இதே முறையில் தான் செய்வேன்.படங்களை பார்க்கும் போது நம்ம ஊர் கைப்பக்குவம் அப்படியே இருக்கு.

Priya Suresh said...

Super chutney, dosakuda supera irrukum.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பு. நன்றி.