Sunday, September 21, 2014

போன்லெஸ் சிக்கன் ரோஸ்ட் / Boneless Chicken Roast

வலையுலக நட்பு சுஹைனாவிடமிருந்து அவர்களின் தயாரிப்பான தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் மாதிரி பேக் (விபரத்திற்கு கிளிக்கவும்) எனக்கு வந்தது.அதனை உபயோகித்து செய்த சிக்கன் ரோஸ்ட் தான் இன்றைய பகிர்வு.


தேவையான பொருட்கள் ;
சிக்கன் நெஞ்சுக்கறி - 1 கிலோ
தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 3
புளிக்காத  கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 2-3 டேபிள்ஸ்பூன்(காரத்திற்கு தகுந்தபடி)
எண்ணெய் - 5  டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 3 இணுக்கு.
உப்பு- தேவைக்கு சிறிது.


 செய்முறை:
கோழி இளம் நெஞ்சுக்கறியாக பார்த்து வாங்கி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர்
வடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது,
தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும், சிம்மில் வைத்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய், தயிர் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
சிக்கன் 65 மசாலா சுவைக்கு தக்க சேர்க்கவும்.
சிக்கன் சேர்க்கவும்.ஒரு போல் பிரட்டி விடவும்.
சிக்கனில் தண்ணீர் ஊறும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கவேண்டாம்.
மசாலாவிலும் இஞ்சி பூண்டிலும் உப்பு இருக்கும்,எனவே தேவைப்பட்டால் மட்டும் சிறிது உப்பு சேர்க்கவும்.
மூடி போட்டு வேக விடவும்.கறி வெந்த பின்பு தண்ணீர் வற்ற விட்டு கருவேப்பிலை தூவி பிரட்டி எடுக்கவும்.



சுவையான போன்லெஸ் சிக்கன் ரோஸ்ட் ரெடி.

பின்குறிப்பு:
தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல மணத்துடனும் ஃப்ரெஷாகவும் இருந்தது. தேவைப்படுகிறவர்கள் Taj Mahal Masala Fcebook page message box தொடர்பு கொள்ளவும்.

1 comment:

SUMAZLA/சுமஜ்லா said...

உங்கள் பகிர்வுக்கும் என் பக்கத்திற்கான லின்க்குக்கும் நன்றி அக்கா. :)