Friday, September 19, 2014

சில்லி நூடுல்ஸ் ப்ரெட் / Chilli noodles bread.


தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 4 துண்டுகள்
நூடுல்ஸ் பேக் - சிறியது
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
சில்லி சாஸ், டொமட்டோ சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்
அலங்கரிக்க - நறுக்கிய மல்லி இலை அல்லது ஸ்பிரிங்க் ஆனியன் சிறிது
எண்ணெய் - 2 -3 டேபிள்ஸ்பூன்.
உப்பு - சிறிது தேவைக்கு.


செய்முறை:

ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி ஓவனிலோ அல்லது பேனிலோ ரோஸ்ட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸ் வேக வைக்க,  தேவைக்கு தண்ணீர்,  மசாலா( விரும்பினால் சேர்த்து) வேக வைத்து வடித்து  எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்,வதக்கவும்.
சாஸ் வகைகள் சேர்க்கவும்.ப்ரெட் சேர்க்கவும் நன்கு பிரட்டி விடவும்.
வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
அதிக காரத்திற்கு மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் சேர்க்க்லாம்.நான் சேர்க்கவில்லை.
நறுக்கிய மல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பரிமாறவும்.
ப்ரெட் அல்லது நூடுல்ஸ் மட்டும் கூட இந்த முறையில் செய்தும் ருசிக்கலாம்
விரும்பினால் முட்டை கூட சேர்க்கலாம்..மாலை நேர டிஃபனாக செய்து சாப்பிடலாம்.



6 comments:

Kalpana Sareesh said...

wow tis shd be a yummy fillin g meal

இளமதி said...

மிக அருமையான குறிப்பு ஆசியா!

ப்ரெட் சேர்த்து நான் செய்து பார்த்ததில்லை...

பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Kurinji said...

interesting combo.....looks yum...
http://kurinjikathambam.blogspot.in/

Sangeetha Nambi said...

Very innovative

சே. குமார் said...

அருமை அக்கா...

Priya Suresh said...

Very tempting noodles Akka..