Tuesday, September 23, 2014

ஈசி கத்திரிக்காய் பச்சடி / Easy Brinjal Pachadi

தேவையான பொருட்கள்;

நறுக்கிய கத்திரிக்காய் கால் கிலோ,
கீறிய  பச்சை மிளகாய் 3
நறுக்கிய ஒரு வெங்காயம்
ஒரு தக்காளி
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
மல்லி இலை
தேவைக்கு புளிக்கரைசல்
விரும்பினால் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் இறுதியில் சேர்த்து பிரட்டவும்.
சிறிது உப்பு
தாளிக்க:

ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய விட்டு கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உ.பருப்பு,ஒரு வற்றல்,கருவேப்பிலை.


செய்முறை:
மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்த்து குக்கரில் 2 சத்தம் வேக வைக்கவும்.ஆவி அடங்கியவுடன் திறந்து மசித்துக் கொள்ளவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய விட்டு கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உ.பருப்பு,ஒரு வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை ஒரு இணுக்கு, பின்ச் பெருங்காயப்பொடி போட்டு தாளித்து கொட்டவும்.
 சிம்ப்ளி சூப்பர்ப்  கத்திரிக்காய் பச்சடி ரெடி.விரும்பினால் நறுக்கிய மல்லி இலை அலங்கரிக்கலாம்.
இதனை கஞ்சி, இட்லி,தோசை,ஏன் மீன் குழம்பு,கறிக்குழம்பு வைக்கும் பொழுது கூட சைட் டிஷ் ஆக  வைக்கலாம்.



3 comments:

Saratha said...

கத்தரிக்காய் பச்சடி அருமையாக இருக்கு.நானும் இட்லி,தோசைக்கு சைட் டிஷ் ஆக வைப்பேன்.நான் கத்தரிக்காய் கொத்சு என்ற பதிவு கொடுத்திருக்கிறேன்.

Kurinji said...

mouthwatering pachadi...

சே. குமார் said...

அக்கா...
கத்திரிக்காயைச் சுட்டுப் பிசைந்து கோசுமல்லி என்று ஒன்று வைப்பார்கள்... சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்குச் செய்வார்கள்... அதுபோல இருக்கிறதே...

செய்து பார்க்கலாம்...