Wednesday, September 24, 2014

ஒயிட் சாஸ் / White Sauce

தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் அல்லது மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 300 மில்லி
மிளகுத்தூள் - பின்ச்
உப்பு - சிறிது சுவைக்கு.

விரும்பினால் ஒரு பெரிய பல் பூண்டு நன்கு நைசாக தட்டி போட்டு  ஒரு சிறிய வெங்காயத்தில் 1 அல்லது 2 கிராம்பு சொருகி ஒயிட் சாஸ் தயாரிக்கும் பொழுது போட்டு எடுத்தால் மணமாக இருக்கும்.

செய்முறை:
ஒரு நாண்ஸ்டிக் பேனில் வெண்ணெய் போட்டு உருகவும், மைதா அல்லது கார்ன்ஃப்லோரை சேர்க்கவும்,நன்கு வதக்கவும்.
காய்ச்சிய பால் விடவும். கட்டி பிடிக்காமல் கலக்கவும். இறுகி வரும்.
சுவைக்கு உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஒயிட் சாஸ் ரெடி.

விரும்பினால் ஒரு பல் பூண்டு தட்டி போட்டு  ஒரு சின்ன வெங்காயத்தில் 1 அல்லது 2 கிராம்பு சொருகி ஒயிட் சாஸ் தயாரிக்கும் பொழுது போட்டு எடுத்தால் மணமாக இருக்கும்.

இதனை பாஸ்தா, நூடுல்ஸ், உடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம்.ப்ரெட் சாண்ட்விச் செய்யும் பொழுது தடவிக் கொள்ளலாம்.


3 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. பூண்டு, கிராம்பு சேர்க்கும் டிப்ஸ் புதிது. நன்றி ஆசியா.

Priya Suresh said...

Silky white sauce, too good Akka.

சே. குமார் said...

நல்ல குறிப்பு அம்மா...