Thursday, October 9, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு -22 - திருமதி. ஃபௌசியா சம்சுதீன் / ப்ரெட் ஹல்வா / Guest Post -22 - Mrs .Fouzia Shamsudeen / Bread Halwa

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி ஃபௌசியா சம்சுதீன், இல்லத்தரசி, கணவர் சம்சுதீன் சவுதி அரேபியாவில் ஒரு பிரபல ஹோட்டலில்  செஃப் ஆக பணியாற்றுகிறார், மகள், மகன் என்ற அன்பான குடும்பம்.சமையலில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்.நெல்லை மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்.இவருடைய பொழுது போக்கு தையல்.
இனிமையான இவர் இன்று குழந்தைகள் முதல் அனைவரும் ரசித்து சாப்பிடும் ருசியில் நம்முடன் பகிரவிருக்கும் குறிப்பு ப்ரெட் ஹல்வா. இந்த ப்ரெட் ஹல்வா செய்யும் பொழுது நானும் அருகிலேயே இருந்தேன்,என்ன ஆச்சரியமா?என் கணவரின் ஒரே அன்புத்தங்கை( பாசமலர்)  தான் இவர். நாங்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாளை சேர்ந்து கொண்டாடும் பொழுது அவர் செய்ததைப்  பகிர்ந்திருக்கிறேன்.
நான் சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்பு அனுப்பும்படி பல முறை கேட்டுப் பார்த்தேன், அனுப்புவதாய் தெரியவில்லை,எனவே நானே அவர் சமையலை படம் எடுத்துப் பகிர்ந்து விட்டேன்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்வாங்க, அது இவருக்கு மிகவும் பொருந்தும், இருப்பதை வைத்து சமைத்து அசத்துவதில்  வல்லவர்.

இதோ  அவரின் குறிப்பு: ப்ரெட் ஹல்வா.

தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 12 துண்டுகள்
சீனி - 300 கிராம்
ஏலக்காய் - 5 ( கீறியது)
தண்ணீர் - 900 மில்லி
கேசரி கலர் - பின்ச்
நெய் - 2 +2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 15 - 20
காய்ந்த திராட்சை -  2 டேபிள்ஸ்பூன் 


செய்முறை:


முதலில் தண்ணீருடன்,சீனி,ஏலக்காய், பின்ச் கலர் சேர்த்து கொதிக்க விடவும்.குலோப் ஜாமுனிற்கு பாகு காய்ச்சும் பதம் வரவும் அடுப்பை  அணைக்கவும்.

ப்ரெட் துண்டுகளை  நெய் சேர்த்து இரு புறமும் பொன்னிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

டோஸ்ட் செய்த துண்டுகளை பிய்த்து தனியாக வைக்கவும்.
ரெடி செய்த ஜீராவில் டோஸ்ட் செய்த ப்ரெட் துண்டுகளை போடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ஒரு அகப்பை வைத்து கிண்டவும்.அப்படியே நிமிடத்தில் ஹல்வா பதம் வந்து விடும்.அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு லேசாக சூடாகும் பொழுதே முந்திரி, காய்ந்த திராட்சையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து நெய்யுடன் கொட்டவும்.
கலந்து விடவும்.


சூப்பர் சுவையுள்ள ப்ரெட் ஹல்வா ரெடி.
இதனை பிரியாணி செய்யும் பொழுது இனிப்பிற்கு  பரிமாறலாம்.



இனிமையான பகிர்வுக்கு மகிழ்ச்சி, மிக்க நன்றி ஃபௌசியா சம்சுதீன்.
மீண்டும் குறிப்புகள் வரும் பட்சத்தில் சந்திப்போம்.: ) !

என்னுடைய ஈசி ப்ரெட் ஹல்வா ரெசிபிக்கு இங்கு கிளிக்கவும்.

2 comments:

Kalpana Sareesh said...

ada sooperaannaa halwa..

Jaleela Kamal said...

ப்ரட் ஹல்வாவும் விருந்து மிக அருமையாக இருக்கு பவுசியாவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்