Tuesday, October 28, 2014

சோயா 65 / Soya 65


 தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா -  2  அல்லது 3 டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
கார்ன்ஃப்லோர் - 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு நன்கு பிழிந்து எடுக்கவும்.
அத்துடன் தயிர்,  சிக்கன் 65 மசாலா  சேர்த்து விரவவும்.

 கார்ன்ஃப்லோர்,மைதா சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.

 தேவைக்கு எண்ணெய் சூடு செய்து சிவற பொரித்து எடுக்கவும்.
சுவையான சோயா 65 ரெடி.

 சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,

3 comments:

மனசு said...

இதை என் மனைவி குழந்தைகளுக்குச் செய்து கொடுப்பார். அவர்களின் பேவரைட் பிரை இது...
அருமை அக்கா...

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கிறது

Saratha said...

சோயா 65 நீங்கள் செய்து வைத்திருப்பதை பார்க்கும் போது எடுத்து சாப்பிடணும் போல இருக்கு !!