Monday, October 13, 2014

கீரை பருப்பு சாதம் / Greens & Dal Rice


தேவையான பொருட்கள்:
அரிசி - அரை கப்
பருப்பு - கால் கப்
கீரை - 1 கப்
சிறிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - இரண்டரை கப்
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

செய்முறை:
முருங்கைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரையை ஆய்ந்து கழுவியோ அல்லது நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
அரிசி பருப்பை  அலசி சிறிது ஊறவைக்கவும்.மற்ற பொருட்களையும் ரெடி செய்து கொள்ளவும்.



 குக்கரில் தண்ணீர் மற்ற பொருட்கள் சேர்த்து கொதிக்க விடவும்.




 கொதி  வந்த பின்பு கீரை சேர்த்து கலந்து விடவும். உப்பு அளவாய் சேர்க்கவும்.

 குக்கரை மீடியம் ஃப்லேமில் வைத்து மூடி ஒரு விசில் வரவும் அடுப்பைக் குறைக்கவும். சிம்மில் 7 நிமிடம் வைக்கவும்.அடுத்து விசில் வந்தாலும் வராவிட்டாலும் அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு சேர்த்து வற்றல் கிள்ளி போட்டு சிவறவும் குக்கரில் வெந்த கீரை சாதம் சேர்த்து கலந்து பரிமாறவும்.பச்சை மிளகாயை எடுத்து போட்டு விடவும்.

சுவையான சத்தான கீரை பருப்பு சாதம் ரெடி. 
இது லஞ்ச் பாக்சில் எடுத்துச் செல்ல ஏற்றது. ஊறுகாய் அல்லது சிப்ஸ் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

No comments: