Saturday, October 11, 2014

ப்ரெட் கார டோஸ்ட் / Spicy Bread Toast



தேவையான பொருட்கள்;
ப்ரெட் - 6 அல்லது 8 துண்டுகள்
முட்டை - 3
வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 டீஸ்பூன்
கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ,சீரகம்,சோம்புத்தூள்-  தலா கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்,நெய் - தேவைக்கு
உப்பு - சிறிது.

செய்முறை:
 வெங்காயம் தக்காளி,பச்சை மிள்காய்,மல்லி,புதினா,கருவேப்பிலையை கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.

 ஒரு பேனில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

 வதங்கியவுடன் அரைத்த விழுது சேர்க்கவும்.

 நன்கு வதக்கி தூள் வகைகள் சேர்க்கவும்.
 நன்கு பச்சை வாடை போக வதக்க வேண்டும்.

 முட்டையை ஒரு பவுலில் உப்பு  மிளகுத்தூள் சுவைக்கு சேர்த்து கலந்து வைக்கவும்.அத்துடன் வதக்கிய விழுதை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கலக்கவும்.
 ப்ரெட் துண்டுகளை கலவையில் மெதுவாக தோய்த்துஎடுக்கவும்.

 உடனே நாண்ஸ்டிக் பேனில் தேவைக்கு எண்ணெய் நெய் விட்டு தோய்த்த ப்ரெட் துண்டுகளைப் போடவும்.
 இரு புறமும் பொன்னிறத்தில் சிவறும் படி அடுப்பை மீடியமாக வைத்து பொறுமையாக டோஸ்ட் செய்ய வேண்டும்.இல்லையெனில் உள்ளே வேகாது.
 இது காலை,மாலை நேர டிஃபனுக்கு,லஞ்ச் பாக்ஸில் கொடுத்து விடவும், பயணத்தின் போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.


சுவையான ப்ரெட் கார டோஸ்ட் ரெடி. 
நீங்களும் செய்து பாருங்க.உடன்,டொமட்டோ சாஸ், மையோனைஸ் வைத்தோ அல்லது வெறுமனே சாப்பிடலாம்.

5 comments:

சே. குமார் said...

படங்களுடன் அருமையான சமையல் குறிப்பு...
அருமை அக்கா...

கோமதி அரசு said...

முட்டை இல்லாமல் செய்து பார்க்கிறேன்.கார டோஸ்டை.

Shama Nagarajan said...

delicious and inviting ...

Asiya Omar said...

கோமதிக்கா,முட்டைக்கு பதில் க்டலைமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

மனசு said...

வணக்கம் அக்கா...
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_25.html

நன்றி