Friday, November 21, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 23 - திருமதி. சிவகாமசுந்தரி - மாங்காய் இஞ்சி மோர் குழம்பு - Mango Ginger Moor Kuzhambu

என் அன்பிற்கினிய கல்லூரித்தோழி திருமதி சிவகாமசுந்தரி ஜெய்சங்கர் மீண்டும் சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு ஒரு சத்தான ஆரோக்கியமான குறிப்பை அனுப்பியுள்ளார்.இவரைப் பற்றி அவரின் முதல் சிறப்பு விருந்தினர் பகிர்விலேயே குறிப்பிட்டுள்ளேன்.

 கிளிக்கவும்.

இந்த முறை இவர் பகிரவிருக்கும் குறிப்பு மாங்காய் இஞ்சி மோர்க்குழம்பு.

மாங்காய் இஞ்சி பற்றிய சிறிய முன்னுரை உங்களுக்காக:

மாங்காய் இஞ்சியின் தாவரவியல் பெயர் குர்குமா அமேடா.பார்க்க இஞ்சி போல் இருந்தாலும் மாங்காயைப் போல் வாசனையும் இஞ்சிச் சுவையும் இருப்பதால்  அதற்கு இந்தப் பெயர்.இச்செடியின் மண்ணிற்கு கீழ் உள்ள தண்டுக்கிழங்கைத்தான் நாம் பயன் படுத்துகிறோம்.தாவரவியலில் இதனை ரைசோம் என்கிறோம். 

இதில் புரதம்,மாவுப்பொருட்கள்,கொழுப்புச்சத்து,கால்சியம்,
பொட்டாசியம்,சோடியம்,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,இருப்புச்சத்து,நார்ப்பொருட்கள்,வைட்டமின்கள் ஏ,பி.சி அடங்கியுள்ளன.

இந்த மாங்காய் இஞ்சி பற்றி ஆய்வு செய்த தன்னுடைய மகளிற்கு கிடைத்த கௌரவம்,பாராட்டு ஏராளம் என்கிறார் திருமதி.சிவகாமசுந்தரி. 
விபரம் அறிய கீழ்கண்ட லின்க்குகளை கிளிக்கவும்.
http://www.macleans.ca/education/canadas-future-leaders-of-2014/
http://www.stcatharinesstandard.ca/2014/04/27/local-science-prodigy-goes-national
http://ottawacitizen.com/news/local-news/fighting-superbugs-with-an-assist-from-home-cooking

வர்ஷாவின் எதிர்கால ஆய்வுகள், மேற்படிப்பு அனைத்தும் வெற்றியடைய மனமார வாழ்த்துவோம்.பாராட்டுவோம்.
பகிர்வுக்கு மகிழ்ச்சி திருமதி.சிவகாமசுந்தரி.

இதோ மாங்காய் இஞ்சி மோர்க்குழம்பு செய்முறை :

இது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுக்கும் மிக நல்லது.இந்த மாங்காய் இஞ்சியில் சாலட், சட்னி, துவையல், தொக்கு, ஊறுகாய் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் மோர்க் குழம்பு கேள்விபட்டிருக்க மாட்டீங்க.
இந்த குறிப்பை தன் குஜாராத்திய தோழி ஜோதி பட்டேலிடமிருந்து தெரிந்து கொண்டு நம் தென்னிந்திய சுவைக்குத்   தக்கபடி சிறு மாற்றங்களோடு செய்து பகிர்ந்திருக்கிறார்.
தேவையான பொருட்கள்;
அரைக்கத்  தேவையானவை:
மாங்காய் இஞ்சி - 1-2 துண்டுகள்
இஞ்சி - 1 -2 துண்டுகள்
மஞ்சள் - 1-2 துண்டுகள்
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 5 - 6 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
முழு மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது மணத்திற்கு.

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்;

விரும்பும் காய்கறியில் ஏதாவது ஒன்று வெண்டைக்காய், வெள்ளைப்பூசணி, சௌசௌ அல்லது கத்திரிக்காய் -தேவைக்கு.
சற்று புளித்த கெட்டித் தயிர் - தேவைக்கு
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப் பொடி - பின்ச்
நல்ல எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
நெய் விரும்பினால் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கீரிய பச்சை மிளகாய் - தேவைக்கு.
சர்க்கரை - அரை டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லி ,கருவேப்பிலை - சிறிது.

செய்முறை:
இந்த குழம்பு செய்வதற்கு தேங்காய் சேர்க்க தேவையில்லை எனினும் குழம்பின் பதமும் சுவையும் அருமையாக இருக்கும்.
மாங்காய் இஞ்சி, மஞ்சள், இஞ்சி போன்றவை  எதிர்ப்புச் சக்தியை தருவதால் வயிற்று கோளாறிற்கு மிக்க நல்லது.
இந்த குழம்பு செய்வதற்கு பேஸ்ட் செய்து ஃப்ரீசரில் எடுத்து வைத்துக் கொண்டால் குழம்பு செய்யும் நேரம் சுலபமாக எடுத்து எளிதில் செய்ய வசதியாக இருக்கும்.

 முதலில் துவரம் பருப்பு,முழு மல்லி,மிளகு,சீரகம் ஊற வைத்துக் கொள்ளவும்.மாங்காய் இஞ்சி,இஞ்சி, மஞ்சள் இவற்றின் தோலை எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஊற வைத்தவற்றுடன்,நறுக்கியவை சேர்த்து அத்துடன் பூண்டு, கொத்தமல்லி,கருவேப்பிலை,காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.


அரைத்த வற்றை ஐஸ் கியூப் ட்ரேயில் வைத்து வேக்ஸ் பேப்பர் கொண்டு மூடி ஃப்ரீசரில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும்.
பின்பு அதனை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு அல்லது ஜிப்லாக் கவரில் போட்டு சிக்கென்று மூடி வைத்தால் நாள் பட வைத்து தேவைக்கு எடுத்து உபயோகிக்கலாம்.

இனி குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் தயிருடன் sour cream தேவைக்குச் சேர்த்து அடித்துக் கொள்ளவும். தேவைக்கு அரைத்த பேஸ்டில் இருந்து 2 அல்லது 3 உருண்டை எடுத்துப் போட்டு கலந்து கொள்ளவும், காரம்,மணம் கூடுதலாக வேண்டும் என்றால் பேஸ்ட் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கலந்த பின்பு அத்துடன் கடலை மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,கடுகு  போட்டு வெடிக்க விடவும்.வெந்தயம் சிவற விடவும்.பெருங்காயம், கீரிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.

நாம் விரும்பும் காய்கறி சேர்த்து நன்கு வதக்கி ஓரளவு வேக விடவும்.
இனி தேவைக்கு உப்பு,மஞ்சப்பொடி சேர்த்து மீண்டும் பிரட்டி சிறிது வேக விடவும்.

இனி நாம் ரெடி செய்த கரைசலைச் சேர்த்து அடுப்பைக் குறைத்து 5-10 நிமிடம் வேக விடவும்.அடியில் குழம்பு பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். சர்க்கரை சுவைக்கு சிறிது சேர்க்கவும்.
நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.

மேலே நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.ஆரோக்கியமான சத்தான சுவையான மாங்காய் இஞ்சி மோர் குழம்பு தயார்.

நீங்களும் இந்த புதுமையான மோர் குழம்பை செய்து பார்த்து சுவைத்து ஜாமய்ங்க.

ஆங்கிலத்தில் அன்புத்தோழி சிவகாமசுந்தரி அனுப்பியதை நான் தமிழ்படுத்தி பகிர்ந்திருக்கிறேன்.கீழே ஆங்கிலப் பகிர்வு உங்களுக்காக.Mango Ginger Moore Kuzhamboo
                                  (மாங்காய் இஞ்சி மோர் குழம்பு)
Mango Ginger is a root vegetable (Curcuma amada), it is like a ginger but has a taste of Mango. It belongs to turmeric family and white in color (See the pictures). I got this recipe from my Gujarathi friend Jyothi Patel and improvised a bit in a south Indian version. I learnt this recipe way before my daughter did her science project research in this vegetable and won many many accolades. To know about her research please visit:
This recipe doesn’t need coconut at all, but  very creamy and tastes so well. Since it has mango ginger, turmeric and ginger has full potential of antibiotics for the stomach. We can make the paste ahead and freeze it nicely to suit to this fast world. So the kuzhamboo can be made in a short notice.
I. Paste making:
a. Ingredients:
Mango ginger: 1-2 pieces
Ginger: 1-2 pieces
Turmeric: 1-2 pieces
Garlic: 2 cloves
Green chillies: as needed (5-6)
Jeera: 1 table spoon
Pepper: 1 table spoon
Coriander seed: 1 table spoon
Thurvaar dhal or patchai thurai: 2 table spoons
Coriander and curry leaves: as needed
b. Procedure: (See the pictures)
 • Soak the thuvaar dhal, jeera, pepper and coriander seeds. Peel the skin out of Mango ginger. Ginger and Turmeric, slice them well. Grind the pieces along with soaked ingredients, garlic, green chilies and coriander/curry leaves.
 • In a ice cube tray fill the paste, cover with a wax paper (see picture) and freeze over night.
 • Next day dump the cubes and store in a air tight container or Ziploc bag for future use.
II. Kuzhamboo making:
 1. Ingredients:
Mustard seeds- 1 Table spoon
Fenugreek/Methi seeds -1 Table spoon
Oil (preferably sesame oil)- 2 table spoon
Ghee/clarified butter-  1 tablespoon (optional)
Asafoetida/hing/perungaayam- a pinch
Turmeric powder- ½ teaspoon
Slit green chillies- as needed
Sugar- ½ table spoon
Curry leaves/coriander leaves- as needed
Salt- as needed
 1. Procedure: (See the pictures)
 • Have the preferred vegetable ready in pieces (Okra/Bhindi, white pumpkin, chow chow /chayote squash, egg plants /Brinjal)
 • Beat yogurt/thayir and sour cream well in a bowl, add required cubes of the paste. You can add more while cooking if you feel the spice or the flavor is less. So better start with 2 or 3 cubes.
 • Once the cubes get dissolved / melted add a tablespoon of besan flour and mix well. Keep this slurry/mix aside.
 • Add a 2 tablespoon of oil and little ghee (purely optional) in a pan in medium to high heat, add mustard seeds, let them splatter, add slit green chillies, curry leaves and Asafoetida (Perungaayam).
 • Add the prepared vegetable pieces and cook for  5-10 minutes until they get cooked (50%)
 • Add salt, turmeric powder and cook for 1-2 mins
 • Now turn the knob to medium and add the prepared slurry slowly and cook to 5-10 mins it starts bubble.
 • You can check for the spice/aroma now, if needed add one or two cubes and sugar (optional), cook for 5 mins (If you have added the cubes) or else cook for 1-2 mins with occasional stirring.
 • Turn off the stove and garnish with Coriander leaves. Yummy/tasty/healthy moore kozhamboo is ready.


மிக்க நன்றி சிவகாமசுந்தரி. வித்தியாசமான ஆரோக்கியப் பகிர்வுக்கு மனமார்ந்த

நன்றி,மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்கள்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்புகள் அனுப்ப விபரத்தை கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

5 comments:

Sivagamasundhari Sikamani said...

மிக்க நன்றி ஆசியா....தங்களின் அருமையான மொழிபெயர்ப்பு மற்றும் கோர்ப்பு உதவிக்கு. சமைத்து அசத்துங்கள். தொடருங்கள் அருமையான சேவையை!!!

Angelin said...

மாங்கா இஞ்சி எனக்கும் இங்கே கிடைக்குது ..மோர்க்குழம்பு புதிய ரெஸிப்பி !! விரைவில் செய்கிறேன் .


வாழ்த்துக்கள் வர்ஷா ..

priyasaki said...

நல்லதொரு பகிர்வு ஆசியா. தந்தவங்களுக்கும்,உங்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.

athira said...

ஆவ்வ்வ்வ்வ் என்னா பெரிய ரெசிப்பி.. வாசிச்சதிலயே ரயேட் ஆகிட்டேன்ன்.. ஆனா மினக்கெட்டுச் செய்தால் சூப்பர்தான், பார்க்கவே தெரியுது.. வித்தியாசமான ரெசிப்பி.

-'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு அக்கா...