Tuesday, November 18, 2014

அதிரை ஸ்பெஷல் - கத்திரிக்காய் பச்சடி / Adhirai Special Brinjal Pachadi

 எனக்கு கத்திரிக்காய் என்றால் மிகப் பிரியம்,எது இருக்கோ இல்லையோ கத்திரிக்காய் நிச்சயம்  ஃப்ரிட்ஜில் இருக்கும்.முஷ் கிச்சன் பற்றி ஃபேஸ் புக் மூலம் தெரிய வந்தது, இந்த கத்திரிக்காய் பச்சடி வீடியோ சமையல் போஸ்டிங் அங்குபார்த்தவுடன் முயற்சி செய்துபார்த்தேன்,பிடித்திருந்தது.
பகிர்வுக்கு நன்றி முஷ் கிச்சன் நெய்னா முஹம்மது. ( கிளிக்கி லைக் செய்யவும்)

உங்களுக்கு இந்தப் பச்சடி  பிடித்திருந்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15-20
தக்காளி - சிறியது 2
கீரிய பச்சை மிளகாய் - 5-10
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - கரைசல் தேவைக்கு கொஞ்சம்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
நல்ல எண்ணெய் - 4- 5 டேபிள்ஸ்பூன்

சேர்த்து அரைக்க:
முந்திரி - 10 அல்லது கசகசா 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை:
கத்திரிக்காயை காம்புடன் நீளவாக்கில் கட் செய்து நடுவில் கத்தியால் கோடு போட்டுக் கொள்ளவும்.

 உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.


 ஒரு பவுலில் மசாலா ரெடி செய்ய புளிக்கரைசல், தேங்காய்ப்பால் வெங்காயத்தில் பாதி, நறுக்கிய தக்காளி, தூள் வகைகள் ,உப்பு தேவைக்கு அனைத்தும் சேர்க்கவும்.

 கலந்து வைத்துக் கொள்ளவும்.
 மீடியம் சைஸ் நான் ஸ்டிக் பேனில் நல்ல எண்ணெய் விடவும், கடுகு,உளுந்து சேர்க்கவும்,கடுகு வெடிக்கவும் வெங்காயம்,பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்தால் வெங்காயம் ஈசியாக மசியும்.சின்ன வெங்காயம் முழுதாக போடவும்.அது தனி சுவையைத்தரும்,நான் நறுக்கிய வெங்காயம் உபயோகித்திருக்கிறேன்.

 தயார் செய்த மசாலா கரைசலைச்  சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 மசாலாவை நன்கு கொதிக்க விடவும்.

 வேக வைத்த கத்திரிக்காய் சேர்க்கவும்.

 சிறிது மசாலாவில் கத்திரிக்காய் சேர்ந்து கொதிக்கட்டும்.உப்பு சரிபார்க்கவும்.
 தேங்காய் அரைச்சத்தை சேர்க்கவும்.

 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்,இல்லையெனில் அடி பிடித்து விடும்.

 மூடி போட்டு சிம்மில் வைத்து எண்ணெய் வெளிவரும் வரை வேக வைக்கவும்.

சுவையான அதிரை ஸ்பெஷல் கத்திரிக்காய் பச்சடி ரெடி.

இதனை நெய்ச்சோறு , பிரியாணி, சப்பாத்தி பரோட்டவுடன் பரிமாறலாம்.

8 comments:

-'பரிவை' சே.குமார் said...

wow... super.

Suchi Sm said...

new preparation in brinjal.. looks delicious mam..

Sangeetha Nambi said...

New dish to me

Mahi said...

Different preparation Asiya akka..looks like a long process though! ; ( me now cooking all quick fixes only..avvvv)

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. எனக்கு கத்தரிக்காய் பிடிக்காது.கத்தரிக்காய்க்கு பதிலாக வேறு எந்த காயில் செய்தால் நன்றாக இருக்கும்?

Asiya Omar said...

ஆதி, கத்திரிக்காய்க்கு பதிலாக வாழைக்காய், சேனைக்கிழங்கு அல்லது உங்களுக்கு பிடித்த காயில் முயற்சித்து பாருங்க.புளி குறைத்து சேர்த்து செய்யவும்.

ADHI VENKAT said...

நன்றி. வேறு காயில் செய்து பார்க்கிறேன்.

Farin Ahmed said...

Super side dish for Biryani ...Bookmarked will try and let you know akka