Sunday, November 16, 2014

கத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு / Brinjal Mango Prawn Curry


தேவையான பொருட்கள்;
இறால்  -15 எண்ணம்
கத்திரிக்காய் - 100 கிராம்
மாங்காய் - சிறியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
தட்டிய பூண்டு - 4 பல்
மல்லி கருவேப்பிலை - சிறிது
அரைத்த தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,வெந்தயம் ,சோம்பு - தலா கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
புளி கரைத்தது - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
இறால் தோல் எடுத்து மேற்புறம் இருக்கும் கருப்பு அழுக்கு பகுதியை எடுத்து நன்கு அலசி எடுத்து வைக்கவும்.
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி எடுத்து வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்,புளி கரைத்து வைக்கவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு,வெந்தயம்,சோம்பு சேர்க்கவும்,கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை சேர்த்து தட்டிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.கத்திரிக்காய் சேர்த்து சிறிது மூடி அடுப்பை குறித்து விடவும்.
 கத்திரிக்காய் பாதி வெந்தவுடன் மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.
 ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 மாங்காய் சேர்க்கவும்.

 இறால் சேர்க்கவும்.
 இறால் வெந்து வரும்.

 தேவைப்பட்டால் சிறிது புளித்தண்ணீர் சேர்க்கவும்.

 
 அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். உப்பு சரிபார்க்கவும்.
எல்லாம் ஒருசேர நல்ல ஒரு மணம் வரும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான கத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு ரெடி.
வெறும் சோற்றுடன் அல்லது நெய் சோறு,தேங்காய் சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தால்ச்சாவிற்கு வாங்கிய கத்திரிக்காய்,மாங்காய் மீதி இருந்தது, இறாலுடன் போட்டு சமைத்தேன் நல்ல மணமாக இருந்தது.

4 comments:

athira said...

கத்தரிக்காய், மாங்காய்.. றால் சொல்லவே தேவையில்லை.. சூப்பர்.

Farin Ahmed said...

Lip smacking Mango Prawn curry akka...yumm yumm

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து விடுகிறோம்... நன்றி...

Suchi Sm said...

super combination.. epoum pola kalakal prawn curry..