Tuesday, November 4, 2014

சுட்ட தக்காளி ரசம் / Burnt Tomato Rasam

தேவையான பொருட்கள்;
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 1
புளித் தண்ணீர் - சிறிது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு & உ.பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்ச்
பூண்டு - 2 பல் (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
மல்லி கருவேப்பிலை - சிறிது.

செய்முறை:
தக்காளியை ஒரு கம்பியில் அல்லது ஒரு கத்தியில் காம்பு பகுதியில் குத்தி கேஸ் அடுப்பில் மீடியம்  நெருப்பில் சுடவும்.மேல் தோல் கருகி வரும்.


 எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.ஆறியவுடன் தோல் உரிக்கவும்.மிளகாய் வற்றலையும் சுடவும்.விதையை நீக்கி பின்பு தக்காளி,வற்றல் இரண்டையும்
புளித்தண்ணீரில் நன்கு பிசைந்து விடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு பெருங்காயம் தாளிக்கவும்,விரும்பினால் பூண்டு தட்டி சேர்க்கலாம்.
ரெடி செய்த புளித்தண்ணீரை விடவும்.நுரை கூடி வரும் பொழுது பவுலில் விட்டு சுடு சாதத்துடன் பரிமாறவும்.


சுவையான சுட்ட தக்காளி ரசம் ரெடி. 
சூடான ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பொட்டுக்கடலை துவையல் பொரித்த அப்பளம் அல்லது பொரித்த முட்டை கூட போதும்.இந்த மழை,குளிர் காலத்திற்கு சூப்பராக இருக்கும்.

8 comments:

sangeethas creations said...

அருமையான ரசம் ...

suchi said...

Love this version of stutter rasam..

athira said...

super...

-'பரிவை' சே.குமார் said...

ஆஹா... சுட்ட தக்காளி ரசம் செய்து பார்க்கணும் அக்கா...

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு ஆசியா.

priyasaki said...

ரசம் சூப்பரா இருக்கு ஆசியா.

இமா said...

சூப்பர் ஆசியா. கட்டாயம் ட்ரை பண்ண வேண்டும்.

கோமதி அரசு said...

சுட்ட தக்காளி ரசம் புதுமையாக இருக்கிறது.