Thursday, November 27, 2014

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா / Chicken franks pasta(coconut milk flavoured)

 தேவையான பொருட்கள்;
பாஸ்தா / மக்ரோனி -  விரும்பிய வடிவத்தில் 150 கிராம்
சிக்கன் ஃப்ரான்க்ஸ் - 5 எண்ணம்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய பெரிய தக்காளி - 1
கீரிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப் (மீடியம் திக்னெஸ்)
நறுக்கிய மல்லி,புதினா சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
விரும்பினால் உப்பிற்கு பதில் ஒரு சிக்கன் சூப் கியூப் சேர்க்கலாம்..

செய்முறை:
முதலில் சிக்கன் ஃப்ரான்க்ஸ்  கொதிக்கும் நீரில் போட்டு 3- 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
கொதிக்கும் நீரில் சிறிது உப்பு,1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பின்பு மக்ரோனியை போட்டு நன்கு வேக வைத்து வடித்து வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.கரம் மசாலா,மஞ்சள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.மல்லி,புதினா,பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.
பின்பு நறுக்கிய சிக்கன் ஃப்ரான்க்ஸ் சேர்த்து வதக்கவும்.தேங்காய்ப்பால் சேர்க்கவும். ஒரு சேர கலந்து விடவும்.
 அத்துடன் வேக வைத்த மக்ரோனி சேர்க்கவும்.
 அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 மக்ரோனி,சிக்கன் ஃப்ரான்க்ஸ் தேங்காய்ப்பால் எல்லாம் சேர்ந்து நன்கு சுண்டி வரும்.
 மேலே சிறிது நறுக்கிய மல்லியிலை தூவி அலங்கரித்து இறக்கவும்.
சுவையான சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா ரெடி.
பிள்ளைகளுக்கு பாஸ்தா, சிக்கன் ஃப்ரான்க்ஸ் பிடிக்கும் .விரும்பினால் உடன் காய்கறிகளும் சேர்த்து செய்து கொடுங்க.

6 comments:

Suchi Sm said...

arumaiyana recipe.. feels like hungry to see the plate asiya akka..

Farin Ahmed said...

yum yum pasta akka..very nice

-'பரிவை' சே.குமார் said...

நல்ல ரெசிபி அக்கா...

sangeethas creations said...

super akka

விச்சு C said...

சாப்பிடனும்போல இருக்கு..

athira said...

ஆஹா புது முறையாக இருக்கே தேங்காய்ப்பால் சேர்ப்பது...

// ஃப்ரான்க்ஸ் // நாங்க ஹொட்டோக் என்போம்...