Thursday, November 13, 2014

முருங்கைக்காய் குழம்பு / Drumstick Kuzhambu ( மீன் குழம்பு ஸ்டைல்)

 தேவையான பொருட்கள்;
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சிறிய எலுமிச்சை அளவு புளி
தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மீன் மசாலா அல்லது வீட்டில் உள்ள குழம்பு தூள்  - 1 டீஸ்பூன் + 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சோம்பு,  சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு , உளுத்தம் பருப்பு,வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
முதலில் வெங்காயத்தில் பாதியை நறுக்கி வைக்கவும். மீதி பாதியுடன் ஒரு தக்காளி சேர்த்து அரைத்து விழுதாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

முருங்கைக்காயை துண்டு போட்டு இரண்டு கப் தண்ணீருடன், குழம்பு மசாலா ஒரு டீஸ்பூன், சீரக,சோம்பு தூள்,சிறிது உப்பு  போட்டு நன்கு வேக வைக்கவும்.

 ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம்,போட்டு சிவந்து கடுகு வெடித்து வரவும் கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் வதங்கி வரும் பொழுது அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
 நன்கு வதக்கவும்.மிளகாய்த்தூள், மசாலாத்தூள் ,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 சிம்மில் வைத்து நன்கு வதங்கட்டும்.
 புளித்தண்ணீர் விடவும்.உப்பு சரிபார்க்கவும்.எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்க வேண்டும்.
 முருங்கைக்காய் வேக வைத்ததை தண்ணீருடன் சேர்க்கவும்.
 கொதித்து மணம் வரவும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
 குழம்பு தேங்காய் வாடை மடங்க கொதிக்க வேண்டும்.
அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
சுவையான சத்தான முருங்கைக்காய் குழம்பு ரெடி.
ப்லைன் ரைஸ்,சப்பத்தி,இட்லி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம்.


வீட்டில் ஒரு முருங்கை,வாழை,தென்னை, கருவேப்பிலை,பசுமாடு இது தவிர காய்கறி பயிரிட கோழி வளர்க்க சிறிய இடம் இருந்தால் நமக்கு தேவையான சத்தான உணவை நம் வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம்.அந்தக்காலத்தில் வீடு என்றால் இத்தனையும் நிச்சயம் இருக்கும்.
ம்ம்ம்..இப்ப அவசரக் கால அபார்ட்மெண்ட் பெருகி வருது.

6 comments:

priyasaki said...

குழம்பு அசத்தல்.வித்தியாசமாக இருக்கு ஆசியா.நன்றி

sangeethas creations said...

அக்கா குழம்பு அருமை ....மணமா இருக்கும் போல தெரியுதே ...

கோமதி அரசு said...

முருங்கைக்காய் குழம்பு நன்றாக இருக்கிறது.

நீங்கள் சொல்வது போல் முன்பு எல்லோர் வீடுகளிலும் முருங்கை, கருவேப்பிலை மரம் இல்லாத வீடே கிடையாது.

இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு முடியாதே !

Menaga sathia said...

அசத்தலான குழம்பு !!

Angelin said...

நான் காலையில் போஸ்ட் பார்த்தேன் உடனே செய்திட்டேனே :)

அப்புறம் ஹஸ் சொன்னார் இன்னிக்கு குழம்பு ரொம்ப டேஸ்டின்னு :)

punitha said...

//சிம்மில் வைத்து நன்கு வதங்கட்டும்.// இந்த ஸ்டேஜ் கூட எடுத்து வைச்சு சாப்பிட்டுரலாம் போல இருக்கு. :-)

இங்கு முருங்கை கிடைக்கும். கடை வெகு தூரம். கிடைத்தாலும் வார இறுதியில் மட்டும் தான் சாப்பிடலாம்.