Sunday, November 16, 2014

குடல் கத்திரிக்காய் / Kudal Kathirikkai.


தேவையான பொருட்கள்;
ஆட்டுக்குடல் மீடியம் சைஸ் - 1
கத்திரிக்காய் - கால் கிலோ
துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 50 கிராம்
தேங்காய் அரைத்தது - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2+2  டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
குழம்பு மசாலாத்தூள் - 1+1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை அல்லது 1 டீஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
ஆட்டுகுடலை வாங்கி முதலில் நிறைய தண்ணீர் வைத்து நன்கு பல முறை அலச வேண்டும்.பின்பு குடலை பிரட்டி சுண்ணாம்பு தடவி தேய்த்தால் அதில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக கழந்து வந்து விடும். பின்பு கல்லில் உரைத்து கழுவ வேண்டும். மேற்புறம் இருக்கும் கொழுப்பை எடுத்து விடவும். கையால் உரித்தால் வந்து விடும்.
சுத்தம் செய்து நன்கு வெந்நீரில் கழுவி  துண்டு போட்டுக் கொள்ளவும்.


இப்படி பளிச்சின்னு இருக்க வேண்டும்.

குக்கரில் குடல், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மீடியம் ப்லேமில் அரைமணி நேரம் வேக வைக்கவும்.


வெந்த பின்பு இப்படி இருக்கும்.
வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.பருப்பை வெந்து வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை  சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
தக்காளி சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து மசிய விடவும்.
கத்திரிக்காய் சேர்த்து ஒரு சேர பிரட்டவும்.

மசாலா ,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.
வேக வைத்த குடலை அதில் உள்ள தண்ணீரோடு சேர்க்கவும்.

வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.

அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து  சுவைக்கு தக்க உப்பு சேர்க்கவும்.

குக்கரை மூடி ஒரு விசில் வர விடவும்.

அடுப்பை அணைக்கவும். குக்கரை ஆவியடங்கியவுடன் திறந்தால் இப்படி இருக்கும்.
அகப்பையால் கத்திரிக்காய் உடையாமல் கலந்து எடுத்துப் பரிமாறவும்.
சுவையான குடல் கத்திரிக்காய் ரெடி.
சூப்பராக இருக்கும்.

இதுக்கு காம்பினேஷன் வெறும் சோறு, நெல்மாவு ரொட்டி,ராகி ரொட்டியுடன் பரிமாறலாம்.

ஆட்டுக்குடல் சாப்பிடுவதால் உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்கும்,குடலுக்கு பலம் கொடுக்கும். இரத்தப் போக்கு,இரவுக்குருட்டை நீக்கும்,ஆனால் இரத்தத்ததில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும்.அதனால் தான் கத்திரிக்காய் சேர்த்து சமைப்பது.

No comments: