Wednesday, November 26, 2014

மட்டன் கிளியர் சூப் / Mutton Clear Soup



தேவையான பொருட்கள்;
மட்டன் போன் - 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
மிக சிறிய  தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை சிறிது
தாளிக்க விரும்பினால் நல்ல எண்ணெய் - 2 டீஸ்பூன், கருவேப்பிலை - 2 இணுக்கு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
மட்டன் போன் சுத்தம் செய்து நன்கு அலசி, தாராளமாய் தண்ணீர் வைத்து  ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால்  கருப்பாய் அதனில் இருக்கும் அழுக்கு எல்லாம் வந்து விடும்.மீண்டும் தண்ணீர் விட்டு அலசி எடுத்து  வைத்து விடவும்.
முதலில் வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள்,மல்லிக்கீரை சேர்த்து மிக்ஸி சின்ன கப்பில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவை குக்கரில் போட்டு  எடுத்து வைத்த மட்டன் போட்டு முழ்கும் அளவு தண்ணீர் விட்டு,பாதி உப்பு போட்டு கொதி வந்தவுடன் மூடி விசில் போட்டு சிம்மில் அரை மணி நேரம் வேக வைத்து வைத்து அடுப்பை அணைக்கவும். ஆவியடங்கியவுடன் திறக்கவும். மட்டன் போனில் உள்ள சூப் இறங்கியிருக்கும்.அப்படியே வடித்தோ அல்லது மட்டனுடனோ பரிமாறலாம்.

விரும்பினால் நல்ல எண்ணெயில் 2 இணுக்கு கருவேப்பிலை தாளித்து விட்டோ அல்லது நறுக்கிய மல்லி இலை அலங்கரித்தோ பரிமாறலாம்.
என்னுடைய விருப்பம் கருவேப்பிலை தாளித்து பரிமாறுவது தான்.நீங்க உங்க விருப்பப்படி ப்லைன் சூப்பாகவோ,மட்டனுடனோ பரிமாறலாம்.
சுவையான சத்தான மட்டன் கிளியர் சூப் ரெடி.

சூடாகப் பரிமாறவும், தேவைக்கு உப்பு, மிளகு பரிமாறும் பொழுது அருகில் வைக்கவும்.
குழந்தைகளுக்கு குழைவாய் சாதத்தில் பிசைந்து ஊட்டலாம்.

2 comments:

Suchi Sm said...

super akka.. nanny clear sou seeithu draft la vachurukean inure share pannala.. arumai yana, healthy soup..

Savitha Ganesan said...

Soup romba nalla irukku akka.