Saturday, November 1, 2014

கெண்டை மீன் வறுவல் / Tilapia roast.


தேவையான பொருட்கள்:
ஜிலேபி கெண்டை - 3  எண்ணம் - 600 கிராம்
மிளகாய்த்தூள் - ஒன்னரை  டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
லைம் ஜூஸ் - 1 பழத்தில் இருந்து
அரிசிமாவு அல்லது மைதாமாவு - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 3 இணுக்கு..

செய்முறை:
மீனைச் சுத்தம் செய்து,மேலே லேசாக  கீறி விட்டுக் கொள்ளவும்.நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். .
எண்ணெய் தவிர அனைத்து பொருளும் கலந்து கொள்ளவும்.
ரெடி செய்த பேஸ்ட்டை மீனின் மீது  தடவி அரை மணி நேரம்  ஊற விடவும். விரும்பினால் மைதா மாவில் லேசாக பிரட்டி எடுத்து பொரிக்கவும்.
ஒரு அகலமான பேனில் எண்ணெய் தேவைக்கு சூடு செய்து.,கருவேப்பிலை இணுக்கு போடவும்.மேலே மீனை எடுத்து கவனமாக வைக்கவும் மீனை இரு புறமும் சிவறும் படி  நிதானமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான கெண்டை மீன் வறுவல் ரெடி.
முள் கவனமாக எடுத்து சாப்பிடவும்.


நான் சில வருடங்கள் முன்பு பகிர்ந்த என்னுடைய
கிரில்டு ஹமூர் ஃபிஷ் ரெசிப்பியை பார்க்க இங்கே கிளிக்கவும்.




 கிரில்டு கிங் ஃபிஷ் ரெசிப்பியை பார்க்க இங்கே கிளிக்கவும்.


3 comments:

suchi said...

asathal Recipe Asiya akka...

-'பரிவை' சே.குமார் said...

ஆஹா... அருமை அக்கா...

கோமதி அரசு said...

மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.