Wednesday, December 3, 2014

ஹெல்தி கிரீன் துவையல் / Healthy green thuvaiyal


தேவையான பொருட்கள்;-
மல்லி,புதினா,கருவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
வதக்க நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 அல்லது 2  டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
தேங்காய் துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன்
புளி  - உப்பு - தேவைக்கு.
செய்முறை:
முதலில் மல்லி,புதினா, கருவேப்பிலையை ஆய்ந்து நன்கு கழுவி எடுக்கவும்.பின்பு நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு வற்றல் போட்டு லேசாக சிவற வறுக்கவும்.
அத்துடன் நறுக்கிய மல்லி,புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்பு தேங்காய் சேர்த்து வதக்கி சுவைக்கு தக்க உப்பு புளி சேர்க்கவும்.ஆற வைக்கவும்.

வதக்கியதை மிக்ஸி சிறிய ஜாரில் தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

சுவையான ஹெல்தி கிரீன் துவையல் ரெடி.
இதனை எல்லா வகையான சாத வகைகளுடன் பரிமாறலாம். சுள்ளென்று சூப்பராக இருக்கும்.உப்பு,புளி,காரம் தூக்கலாக இருக்கும்.

இதே மாதிரி  கருவேப்பிலை மட்டும் சேர்த்தால் கருவேப்பிலை துவையல்,மல்லி மட்டும் போட்டு அரைத்தால் மல்லித்துவையல், புதினா மட்டும் போட்டு அரைத்தால் புதினா துவையல்.செய்முறை ஒரு போல் தான்.அல்லது  எல்லாம் கலந்தும் அரைக்கலாம்.
இப்படி வாரம் ஒரு முறை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைக்கு எடுத்து உபயோகிக்கலாம்.வதக்கி செய்வதால் 3-5 நாட்கள் வைத்தால் கூட கெடாது.

6 comments:

Sangeetha Nambi said...

Very tasty and healthy chutney !

ADHI VENKAT said...

இப்படித்தான் வழக்கமாக துவையல் அரைப்பேன். கொஞ்சம் பெருங்காயமும் வறுக்கும் போது சேர்த்துக் கொள்வதுண்டு. மூன்றையும் சேர்த்து அரைத்ததில்லை. இனி செய்கிறேன்.

Saratha said...

நானும் இதே முறையில் தான் செய்வேன்.உளுந்தம் பருப்புக்கு பதிலாக கடலைப்பருப்பு சேர்த்து செய்வேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பு....

நன்றி.

Farin Ahmed said...

Yummy green green thuvaiyal akka..Nice combo for all..

sangeethas creations said...

thuvaiyal arumai