Friday, December 26, 2014

முருங்கைக்கீரை பருப்பு உசிலி / Moringa leaves paruppu usili

 தேவையான பொருட்கள்;
முருங்கைக்கீரை - 2 கப்
துவரம் பருப்பு,கடலை பருப்பு - தலா கால் கப்
சீரகம் - அரைடீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 3 அல்ல்து 4
எண்ணெய் - 2 -3 டேபிள்ஸ்பூன்
கடுகு & உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கீரை ஆய்ந்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.


 சுத்தம் செய்து அலசிய கீரையை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
 பருப்பு வற்றல் சீரகம் இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

 ஊறிய பின்பு மிக்சி ஜாரில் போட்டு பரபரப்பாக அரைத்து எடுக்கவும்.


 அரைத்த விழுதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
 மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

 ஆறிய பின்பு நன்கு தூளாக உதிர்க்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,பெருங்காயம் வற்றல் தாளிக்கவும்.
 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வேகவைத்து உதிர்த்த பருப்பு கலவையை சேர்க்கவும்.நன்கு சிம்மில் வைத்து பிரட்டவும்.
 அத்துடன் வெந்த முருங்கைக்கீரையை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 பின்பு தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

சுவையான முருங்கைக்கீரை பருப்பு உசிலி ரெடி.

இதனை குழம்பு சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.
அல்லது மாலை நேர டிபனுக்கும் செய்து கொடுக்கலாம்.
பருப்பு கலவையை ஒவனில் வேக வைக்க விரும்பாதவர்கள் ஆவியில் வேக வைத்தும்  சேர்க்கலாம்.எல்லா வகை கீரையிலும் உசிலி செய்யலாம்.

2 comments:

-'பரிவை' சே.குமார் said...

உசிலி நானும் செய்து பார்த்திருக்கிறேன்...

விச்சு said...

பார்க்கவே அழகா இருக்கு.