Saturday, December 6, 2014

சிஸ் தவூக் / Shish Tawook


கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி அமீரக தேசிய தின கொண்டாட்டத்தின் போது எங்கள் குடும்பத்தினர்  எல்லோரும் அபுதாபி பார்க்கில் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடானது.(பார்பிகியூ பார்ட்டி) என்னுடைய பங்காக இந்த சிஸ்தவூக் செய்ய சிக்கன் மற்றும் சிம்பிளான கலர்ஃபுல் ஃப்ரைட்ரைஸ் செய்து எடுத்துச் சென்றேன்.
இன்றைய பகிர்வு சிஸ் தவூக்.
நான் நான்கு கிலோ சிக்கன் விரவி எடுத்துச் சென்றேன். ஆனால் உங்களுக்கு ஒரு கிலோவிற்கான அளவு இங்கு தருகிறேன்.

தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 1 கிலோ
தண்ணீர் வடிகட்டிய கெட்டித்தயிர் - 1 கப்
நசுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
கொரப்பாக மிக்ஸியில் சுற்றிய  புதினா - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் -  2 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1டேபிள்ஸ்பூன்
பப்ரிகா பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆல்ஸ்பைஸ் பவுடர் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சிஸ் தவூக் சுடுவதற்கு தண்ணீரில் நன்கு ஊறவிட்ட மரக் குச்சிகள் (skewers), பார்பிகியூ அடுப்பு.
செய்முறை:

பூண்டு சிதைத்து வைத்துக் கொள்ளவும்.எலுமிச்சை ஜூஸ் எடுத்து வைக்கவும்.
முதலில் எலும்பில்லாத சிக்கன் சிறிய துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

இதோ சிக்கன்,பூண்டு பேஸ்ட்,புதினா பேஸ்ட்,தயிர்,எலுமிச்சை ஜூஸ், ஆலிவ் ஆயில், ஆல் ஸ்பைஸ் பவுடர், பப்ரிகா பவுடர், தக்காள்;இ கெச்சப்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்தாச்சு.
அதனுடன் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் சேர்த்து விரவவும்.

அதனை ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் அல்லது முதல் நாளே ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
ஊற வைத்ததை பார்க்கிற்கு எடுத்துச் செல்லவும் அல்லது வீட்டிலேயே சுடலாம்.
மரக்குச்சிகள் தண்ணீரில் ஊற விடவும்.
சிக்கன் துண்டுகளை  மரக்குச்சியில் 6 துண்டுகள் வீதம் அடுக்கி வைக்கவும்.நான் தான் அடுக்கிக் கொண்டு இருக்கிறேன்.
மொத்தமாக அடுக்கி வைக்கவும்.
இங்கு ஹாட் & ஸ்பைசி சிக்கன்,கிரீன் சிக்கன் கிரில் தயார் ஆகிக் கொண்டிருப்பதால் அது முழுவதும் முடிந்தவுடன் நம்ம சிஸ் தவூக் ரெடியாக வேண்டும் .;) !

இதோ கிரில் செய்யக் கூடிய ட்ரேயில் அடுக்கியாகிவிட்டது.
பின்பு நன்கு கங்கு (நெருப்பு)வந்த பார்பிகியூ அடுப்பில் வைத்து இரு புறமும் நல்ல வெந்து சுட்டு எடுக்கவும்.
சுவையான சிஸ் தவூக் ரெடி. 
இடை இடையே கொடைமிளகாய்,தக்காளி,வெங்காயதுண்டுகள் வைத்து அடுக்கியும் சுடலாம். நாங்கள் சாலட் தனியாக ரெடி செய்து எடுத்துச் சென்று விட்டோம்.
சாலட், ஃப்ரைட் ரைஸ், கப்ஸா ரைஸ், குபூஸ், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட் உடன் பரிமாறவும்.
அடுத்து நான் எடுத்துச் சென்ற சிம்பிளான கலர்ஃபுல் ஃப்ரைட் ரைஸ் பகிர்வு.

3 comments:

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பராக இருக்கு,நாங்க முன்பு குளிர் காலம் வந்துட்டாலே பார்க் ல பார்பிகியு தான், பசங்க பெரிய கிளாஸ் போனதில் இருந்து எங்கும் போவதில்லை. பார்க ல அடிக்கும் காற்றோடு கலந்த அந்த கரி கங்கு வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Farin Ahmed said...

Name sounds intersting... Looks so yumm..Wanna like to try...

sangeethas creations said...

ஆகா ...கலக்கிடிங்க அக்கா ...சூப்பரா இருக்கு