Sunday, March 30, 2014

பருப்பு ஆணம் / Paruppu Aanam



தேவையான பொருட்கள்;
சிறு பருப்பு - 1/2கப்
வத்தல் - 3
கடுகு - சிறிது
சோம்பு - சிறிது
சீரகம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 5 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது சிறிது வெங்காயம் தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
பூண்டு - 3 பல்
தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி.

செய்முறை:
முதலில் வத்தலை எரியும் அடுப்பில் காட்டி சுட்டு,காம்பையும்,விதைகளையும் நீக்கிக்கொள்ளவும்.
சிறு பருப்பை வெறும் சட்டியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.பின் அந்த பருப்பை கழுவிவிட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,வத்தல்,மஞ்சள்தூள்,கருவேப்பிலை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
பருப்பு நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நன்கு கடைந்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,சோம்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கி பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கவும்.
இதற்கு சாதமும் பொறித்த கறி அல்லது பொறித்த மீன் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

நன்றி ஜப்பான் செய்யது கதீஜா,காயல்பட்டணம்.



Thursday, March 27, 2014

ஓட்ஸ் கொழுக்கட்டை / Oats Kozhukattai/ Dumplings


தேவையான பொருட்கள்;
ஓட்ஸ்  - 2/3 கப்
கோதுமை மாவு – அரை கப்
ரவை – அரை கப்
கடலை மாவு – அரை கப்
வறுத்த எள் அல்லது ப்ளாக்ஸ் விதை – 2 டேபிள்ஸ்பூன்
தயிர் – அரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை ,வெங்காயம் நறுக்கியது – 1/2 கப்
விரும்பினால் தேங்காய் துருவல்
தாளித்து கொட்ட தேவைக்கு கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை,பெருங்காயம்.
சோடா உப்பு – அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் ஓட்ஸ் உடன் மற்ற 3 மாவையும் கலந்து கொள்ளவும். தேவைக்கு உப்பு,சோடா உப்பு சிறிது, நறுக்கிய யாவும் சேர்க்கவும்.தயிர் சிறிது சிறிதாக சேர்க்கவும். தாளித்துக் கொட்டவும்,வறுத்த எள் சேர்க்கவும்,விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கவும்.ஒன்றாக கலந்து கொழுக்கட்டையை விரும்பிய வடிவத்தில் பிடிக்கவும்.
இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் தண்ணீர் தேவைக்கு வைத்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் தடவிய தட்டு அல்லது மெல்லிய காட்டன் துணி விரித்து கொழுக்கட்டைகளை அவித்து எடுக்கவும். 10 நிமிடத்தில் வெந்து விடும்.

சுவையான சத்தான ஓட்ஸ் கொழுக்கட்டைகளை தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறலாம்.

Recipe Source:
Mrs.Sivagamasundari.

நான் பல வருடங்களுக்கு முன்பு பகிர்ந்த என்னுடைய வெஜிடபிள் ஓட்ஸ் சூப் குறிப்பை பார்க்க தமிழ்குடும்பத்தைக் கிளிக்கவும்.

Wednesday, March 12, 2014

ஃபிஷ் & சிப்ஸ் / Fish & Chips


தேவையான பொருட்கள்;
மீன் ஊற வைக்க:
போன்லெஸ் ஃபிஷ் ஃபில்லட்ஸ் - 300 கிராம் (3 துண்டுகள்)
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

கோட்டிங் மிக்ஸ்:
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பெப்பர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பால் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - பின்ச்.
ரோல் செய்ய மைதா மாவு - அரை கப்.

செய்முறை:
முதலில் மீனை துண்டு செய்து மேற்கூறிய பொருட்கள் சேர்த்து ஊற வைக்கவும்.

 மேற் சொன்ன தேவையான பொருட்கள் சேர்த்து கோட்டிங் மிக்ஸ் ரெடி செய்து கொள்ளவும். மைதாவை இறுதியாக கோட் செய்த மீனை டிப் செய்ய ரெடியாக வைக்கவும்.
 தேவைக்கு எண்ணெய் சூடு செய்யவும். முதலில் உருளைக்கிழங்கை துண்டுகளைப் பொரித்து எடுக்கவும்.எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.

ரெடி செய்த மீன் தூண்டுகளை அதே எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிய விட்டு எடுக்கவும்.
சுவையான ஃபிஷ் & சிப்ஸ் ரெடி. டொமட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

கோழி ஈரல் மசாலா / Chicken Liver Masala

 
 தேவையான பொருட்கள்;
கோழி ஈரல் - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 2- 3
பெரிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிமசாலா - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை சிறிது
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - முக்கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:
கோழி ஈரல் துண்டு செய்து நான்கு ஐந்து தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.

 நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் கடுகு, சோம்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்கு வதங்க விடவும்.

இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 அடுப்பை குறைத்து நன்கு வதக்கவும்.
 அத்துடன் ஈரலை சேர்க்கவும்.
 ஒரு போல் பிரட்டி விடவும்.
 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
 தக்காளி லேசாக வதங்கினால் போதும். கூட்டு போல் ஆக வேண்டாம்.

மஞ்சள் தூள், கறி மசாலா, உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.

 கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
 அரை கப் தண்ணீர் சேர்த்து  அடுப்பைக் குறைத்து மூடி போட்டு வேக விடவும். 10 -1 5 நிமிடத்தில் வெந்து விடும்.

 வெந்து வரும் பொழுது மிளகுத்தூள் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விடவும்.
நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி சூடாகப் பரிமாறவும்.


சுவையான சத்தான கோழி ஈரல் மசாலா ரெடி. 
இது சாதம்,சப்பாத்திக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.இதே முறையில்  ஆட்டு ஈரலிலும் செய்யலாம்.