Wednesday, May 28, 2014

உப்பு நெல்லிக்காய் / Uppu Nellikkai

நெல்லிக்காய் சீசனில் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. மிக அருமை.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய் - கீரியது -3 அல்லது தேவைக்கு.
உப்பு - 3 டீஸ்பூன்.

செய்முறை:
நெல்லிக்காயை நன்கு அலசி இரண்டு கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.ஆறியவுடன் அத்துடன் கீரிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பாட்டிலில் வைத்து ஒரு நாள் வெயிலில் வைக்கவும்.
ஒரிரு நாள் கழித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.கை படாமல் ஸ்பூன் வைத்து எடுக்க வேண்டும்.இல்லையெனில் பூஞ்சனம் பிடித்து விடும்.
அதில் இருக்கும் தண்ணீரை டேஸ்ட் செய்து விட்டு  தண்ணீர் குடித்தாலும் வாய் எல்லாம் இனிக்கும்.
பழைய சாதம்,மோர் சாதம்,பருப்பு சாதத்துடன் சாப்பிட சூப்பர்.

Tuesday, May 27, 2014

மிளகு முட்டை இடியாப்பம் / Pepper egg idiyappam

தேவையான பொருட்கள்;
இடியாப்பம் – 8- 10
முட்டை – 3 - 4
நறுக்கிய வெங்காயம் – 4
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மல்லி புதினா – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலா –கால் டீஸ்பூன்
சீரகம் சோம்புத்தூள் – தலா அரை - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – காரத்திற்கு தகுந்தாற் போல் தேவைக்கு
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

செய்முறை:
இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணை விட்டு சூடானவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்,சிம்மில் வைத்து வதக்கவும்.
மல்லி புதினா பச்சை மிளகாய் சேர்க்கவும்,தக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு மசிய விடவும்.சீரகம்,சோம்புத் தூள் சேர்க்கவும், வதக்கவும். முட்டைக் கலவையை  சேர்க்கவும்..சிம்மில் வைத்து முட்டை வெந்து வரும் போது தேவைக்கு மிளகுத்தூள் இடியாப்பம் கலந்து கிளறி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து சிறிது மூடி விடவும். உப்பு சரி பார்க்கவும். இடியாப்பம் சூடு வரவும் அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.





Monday, May 12, 2014

கொண்டைக்கடலை சாலட் / சன்னா சாலட் / Channa Salad


தேவையான பொருட்கள்;
கொண்டைக்கடலை -  150 கிராம் (ஊற வைத்து வேக வைக்கவும்)
கொடை மிளகாய் சிவப்பு,மஞ்சள், பச்சை கலர் நறுக்கியது - தலா ஒன்று (சிறியது)
மாங்காய் தோல் நீக்கி நறுக்கியது - 1
வெள்ளரிக்காய் - நறுக்கியது - 2
கேரட் நறுக்கியது - 2
ஸ்வீட் கார்ன் - 1 கப்
ஏதாவது சீசனிங் பவுடர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.

செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரமாவது ஊற விட்டு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

ஸ்வீட் கார்ன் தவிர குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு போல் நறுக்கி வைக்கவும்.
 ஒரு பவுலில் அனைத்தையும் போட்டு கலந்து கொள்ளவும்.

 தேவைக்கு உப்பு, லைம் ஜூஸ், சாட் மசாலா அல்லது விரும்பிய சீசனிங் பவுடர் ,ஆலிவ்  ஆயில் சேர்த்து விரவவும்.ஃப்ரெஷ் மாங்காய் இல்லையெனில் மாங்காய் பவுடர் சேர்க்கலாம்.நான் சேர்த்த மாங்காய் புளிக்காததால் லைம் ஜூஸும் சேர்த்தேன்.

விரும்பினால் மிளகுத்தூள் சிறிது தூவி பரிமாறவும்.உப்பு தேவைப்பட்டால் அளவாய் சேர்க்கவும்.

சுவையான சத்தான கொண்டைக்கடலை சாலட் ரெடி. 

நீங்களும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.


சில்லி பரோட்டா / Chilli Parota

பரோட்டா மீதியானால் சாண்ட்விச்,கொத்து பரோட்டோ அல்லது சில்லி பரோட்டா செய்வோம். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். 



தேவையான பொருட்கள்;
மீதியான பரோட்டா உதிர்த்தது - 2 (பெரியது)
வெங்காயம் பெரியது நறுக்கியது - 1
தக்காளி பெரியது நறுக்கியது - 1
நறுக்கிய பச்சை மிள்காய் - 1
கொடைமிளகாய் - பாதி 
அஜினமோட்டோ - பெரிய பின்ச் (விரும்பினால்)
சில்லி பவுடர் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1-2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்  அல்லது மல்லி இலை அலங்கரிக்க சிறிது.
 ( கை வசம் இல்லாததால் நான் சேர்க்கவில்லை)

பரிமாறும் அளவு - 1 அல்லது 2 நபர்.

செய்முறை:
 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, கொடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்க்கவும்,நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.நன்கு மசிந்து விடும்.
கரம் மசாலா,சில்லி பவுடர் சேர்க்கவும். பிரட்டி விடவும்.
 பொடியாக உதிர்த்த பரோட்டா சேர்க்கவும்.

 கலந்து விடவும், புளிப்பு தேவையென்றால்  1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி இலை அல்லது ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சில்லி பரோட்டா ரெடி.

நீங்களும் செய்து பாருங்க.டிஃபன் & லஞ்ச் பாக்ஸ்க்கு கூட பொருத்தமான குறிப்பு இது. விரும்பினால் சாஸ் வகைகள் அல்லது கேரட்,கோஸ் கூட சேர்க்கலாம்.


Sunday, May 11, 2014

வெஜ் சோமாஸ் / Veg Somas


தேவையான பொருட்கள்;-
மேல் மாவு பிசைந்து எடுக்க:-
மைதா - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பட்டர் அல்லது எண்ணெய் சூடு செய்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர்  - தேவைக்கு.

உள்ளே வைக்க காய்கறி மசாலா செய்ய:
கேரட் - 1
உருளை - 1
பச்சை பட்டாணி - ஒரு கை பிடியளவு
முட்டை கோஸ் கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லியிலை - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

பரிமாறும் அளவு  - 2 - 4 நபர்கள்

செய்முறை:


 மாவுடன் சூடு செய்த எண்ணெய் அல்லது பட்டர் சேர்த்து விரவவும்.தேவைக்கு உப்பு தண்ணீர் சிறிது சேர்த்து பூரி  மாவு போல் பிசைந்து எடுக்கவும். சம அளவில் சிறிய உருண்டைகளாக பிரித்து எடுக்கவும்.
 உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து மசித்துக் கொள்ளவும்.மற்ற காய்கறிகளிகளை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்,காய்கறிகள் எல்லாம் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி வதக்கவும்.
 மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
 கலந்து விட்டு மல்லி இலை சேர்க்கவும்.
 மாவு உருண்டைகளுக்கு தக்கபடி இதனையும் ஆற விட்டு பிரித்து வைக்கவும்.

 சோமாஸ் அச்சில் மாவை பூரி போல மெலிதாக வட்டமாக விரித்து அதில் வைக்கவும்.
 காய்கறி மசாலாவை எடுத்து  வைக்கவும்

 மூடவும், அழுத்தவும். எடுத்து வைக்கவும்.இப்படியே அத்தனை மாவு உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,அடுப்பை மிதமாக சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.

நன்கு பொன்னிறத்தில் சுட்டு எடுக்கவும்.
அப்படியே சும்மாவே சாப்பிடலாம் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.

சுவையான காய்கறி சோமாஸ் ரெடி. 

இது போல் சிக்கன், மட்டன் கீமா சேர்த்தும் சோமாஸ் செய்யலாம்.ஸ்நாக்ஸ்,  டிஃபனாகவும்  சாப்பிட அருமையாக இருக்கும்.

Thursday, May 8, 2014

ஃப்ரைட் சிக்கன் மசாலா / Fried Chicken Masala



 

தேவையான பொருட்கள்;
சிக்கன் ஊற வைக்க:
சிக்கன் அரைக் கிலோ
சில்லி பவுடர்  - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
விரும்பினால் - பின்ச் கலர்
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

மசாலாவிற்கு தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
மல்லித் தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிது.

செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

 சிக்கனை மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
 ஒரு பேனில் எண்ணெய் தேவைக்கு விட்டு சூடானவுடன்  சிக்கன் முழுவதையும் போட்டு சாஃப்டாக ஃப்ரை செய்து  எடுக்கவும்.தனியாக வைக்கவும். பொரித்த சிக்கன் கேட்பவர்களுக்கு இதை அப்படியே கூட கொடுக்கலாம்.


 இனி மசாலாவிற்கு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
 இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 எல்லா மசாலா பொருட்களும் சேர்க்கவும்.
 கருவேப்பிலை சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி வதக்கவும்.

 ஃப்ரை செய்த சிக்கனை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் போடவும். 
 பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
 சுவையான ஃப்ரைட்  சிக்கன் மசாலா ரெடி. 



சூடாக சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Monday, May 5, 2014

கிரீன் ஃபிஷ் கறி / Green fish curry


தேவையான பொருட்கள்;-
மீன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 அல்லது 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
மிளகாய் - 2 அல்லது 4
பூண்டு - 2 பல்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு - 6
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் தாளிக்க - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி.

செய்முறை:


 மீனை தோல் உரித்து வாங்கிக் கொள்ளவும், அல்லது ஃபிஷ் ஃபில்லட்ஸ் கூட உபயோகிக்கலாம், அல்லது தோலோடும் சமைக்கலாம். சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
 மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், 2 மேசைக்கரண்டி மல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கால் டீஸ்பூன் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

 அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
 அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் வாடை மடங்க வேண்டும்.
பின்பு அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.


 ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
 அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.

சுவையான கிரீன் ஃபிஷ் கறி ரெடி. 

இதில் உள்ள மீன் சாப்பிட ருசியாக இருக்கும். 
இதனை அரிசி மாவு ரொட்டி, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் 
உடன் பரிமாறலாம். 
இக்குறிப்பை அறுசுவையில் முன்பே பகிர்ந்திருக்கிறேன்.சமைத்து அசத்தலாம் நேயர்களுக்காக மீண்டும் இங்கே இந்த பகிர்வு.