Saturday, June 28, 2014

நார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle



 தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ)
கல் உப்பு தேவைக்கு.

வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு.
சிறிது எண்ணெய் விட்டு கருகாமல் வறுத்து ஆற விட்டு  பொடிக்கவும்.

ஊறுகாய் தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
தேவைப்பட்டால் காரம் கலருக்கு மிளகாய்ப் பொடி சிறிது.
மிளகாய் வற்றல் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டால் மிளகாய்த்தூள்  சேர்க்க தேவையில்லை.

செய்முறை:
நார்த்தங்காயை தண்ணீர் விட்டு அரை வேக்காடு வெந்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளுடன் உப்பு போட்டு நன்கு குலுக்கவும். வெயிலில் 3 நாட்கள் வைத்து எடுக்கவும். இப்படியே உப்பு நார்த்தங்காயாக சாப்பிட ஒரு வாரம் ஊற விட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு  கருவேப்பிலை,பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். சிறிது மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
ஊறிய நார்த்தங்காயை சேர்க்கவும்.ரெடி செய்த பொடியை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் வேக விடவும்.

ஆற விட்டு ஒரு பாட்டிலில் அல்லது டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவைக்கு ஸ்பூன் போட்டு எடுத்து பரிமாறவும்.

Tuesday, June 17, 2014

எள்ளுக் கத்திரிக்காய் / Sesame / Gingelly Brinjal

தேவையான பொருட்கள் ;-
கத்திரிக்காய் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உ.பருப்பு,வெந்தயம் – தலா – கால் டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 இணுக்கு
மிளகாய்த்தூள் ,- 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகு,சீரகம்,சோம்புத்தூள் – தலா அரைடீஸ்பூன்
எள்ளு வறுத்துப் பொடிக்க – ஒரு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
கத்திரிக்காயை கொண்டையை நீக்கி விட்டு நான்காக தொடுப்பு வைத்து கீறி வைக்கவும்.
நறுக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் பரபரவென்று சுற்றி எடுத்து வைக்கவும். புளியை ஊற விட்டு கெட்டியாக வடிகட்டி வைக்கவும்.எள்ளை மணம் வரும்படி வறுத்து பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம் போட்டு தாளிக்கவும்,மிளகாய்,கருவேப்பிலை போடவும்,வதக்கவும்,வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்.அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து பிரட்டவும்.
கத்திரிக்காய் சேர்த்து வதக்கி தேவைக்கு உப்பு சேர்க்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
கத்திரிக்காய் வெந்து வரும் பொழுது புளிக் கரைசல் சேர்க்கவும்.புளி வாடை மடங்குமாறு நன்கு கொதிக்க விடவும்.

 மணம் வரும்படி எள்ளை வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.


 எள்ளுப் பொடியை சேர்த்து ஒரு சேர பிரட்டி  விடவும் அடுப்பை சிறிது நேரம் சிம்மில் வைத்து அணைக்கவும்.
சுவையான எள்ளுக் கத்திரிக்காய் ரெடி.
இதனை ப்லைன் ரைஸ், பிரியாணி, புலாவ், தேங்காய்ச் சோறு, நெய்ச் சோற்றுடன் பரிமாறலாம்.

Wednesday, June 11, 2014

இறால் சேமியா / Prawn Vermicilli



தேவையான பொருட்கள்;-
இறால் மீடியம் சைஸ் - 30 எண்ணம் 
சேமியா - 400 - 500 கிராம்
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 3
மல்லி புதினா - தலா ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 + 3 டீஸ்பூன்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சைப் பழம் - பாதி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 1/2 + 1/2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் ,நெய் - தலா 75 மில்லி
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 - 5 நபர்கள்.

செய்முறை:
இறாலை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
இறாலில் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தேவைக்கு உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறிய இறாலை சாஃப்டாக பிரட்டியது போல் வெந்து வைக்கவும்.
சேமியாவை பொன்னிறமாக 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
சேமியா செய்யும் பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.தக்காளி,தேவைக்கு உப்பு சேர்த்து வதங்க விடவும்.
மிளகாய்த்தூள் சேர்க்கவும்.கூட்டு போல் ஆனவுடன் தயிர் சேர்க்கவும்,பிரட்டவும்.
தேங்காய்ப்பால் சேர்க்கவும்.சேமியா அளவிற்கு ஒன்றரை அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
நுரை கூடி கொதி வரட்டும்.
சேமியா சேர்க்கவும்,வெந்து மேலே வரும் பொழுது வெந்த இறாலை அப்படியே தட்டவும்.விரும்பினால் சிறிய எலுமிச்சையில் பாதி பிழிந்தால் சேமியா உதிரி உதிரியாக இருக்கும்.
ஒரு சேர பிரட்டி விடவும்.அழகுக்கு நறுக்கிய மல்லி புதினா சிறிது தூவி அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான இறால் சேமியா ரெடி.
ஆனியன் ரைத்தா சிக்கன் ஃப்ரையுடன் பரிமாறினால் சூப்பர்.

இறால் வசதியாக கிடைக்கும் பொழுது செய்து பாருங்க,சூப்பராக இருக்கும்.

Sunday, June 8, 2014

நுங்கு பால் / Tender palm fruit & milk



தேவையான பொருட்கள்;-
நுங்கு - 10
பால் -அரை லிட்டர்
சீனி - 4 - 6 டேபிள்ஸ்பூன் அல்லது சுவைக்கு.

பரிமாறும் அளவு - 5 நபர்கள்.
செய்முறை:
நுங்கை உரித்து வாங்கிக் கொள்ளவும்.



தோல் உரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நொறுங்க பிணையவும்.
சீனி சேர்த்து கெட்டியான பாலும் சேர்க்கவும்.நன்கு சீனியைக் கரைத்து விடவும்.

பின்பு ஃப்ரிட்ஜில் 2-4 மணி நேரம் வைக்கவும்.

சில்லென்று பவுலில் அல்லது கண்ணாடி கிளாஸில் விட்டு பரிமாறவும்.பார்ட்டியில் டெசார்ட்டாக பரிமாறலாம்.இந்தக் கோடையில் 
பள்ளியில் இருந்து களைத்து வரும் குழந்தைகளுக்கு சூப்பர் பானம்.

நுங்கு பதனீர் /Tender palm fruit & Sweet toddy


தேவையான பொருட்கள்:-
நுங்கு - 4
பதனி - அரை லிட்டர்.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 செய்முறை:-
 நுங்கு பதனீர் கோடையின் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது.
ஃப்ரெஷாக நுங்கு பதனீர் கிடைக்கும் பொழுது வாங்கி பருகலாம்.
நுங்கின் தோலை உரித்து தனியாக வைக்கவும்.நுங்கு உரித்த பின்பு ஜெல்லி போல் இருக்கும்.நுங்கை கையால் நன்கு நொறுங்க பிசைந்து விடவும்.அத்துடன் பதனீர் கலந்து கொள்ளவும்.
அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.
பதனீர் சேர்க்காமல் நுங்குடன் சீனி,பால் சேர்த்து கலந்தும் பரிமாறலாம்.

சுவையான நுங்கு பதனீர் வெட்டி தரும் இடத்திலேயே இப்படி முடைந்த பச்சை பனையோலையில்  சுவைக்கும் பொழுது அதன் சுவையே தனி தான்.


இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தால் வாங்கி பருகிப் பார்க்கவும்.

பதனீர் ஓலை.

Friday, June 6, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 19 - திருமதி தஸ்னீம் பாத்திமா - பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு / Guest Post - Bachelor's Chicken Kuttu

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.தஸ்னீம் பாத்திமா.சுறுசுறுப்பான  இல்லத்தரசி.நெல்லை மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்.கணவர் பீர் முஹம்மது அபுதாபியில் பணியில் உள்ளார்.அலாவுதீன்,அல்ஃபியா என்ற அழகான இரண்டு குழந்தைகள் என்று தன் சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார். 

தன் குழந்தைகள் படத்தை ஃப்ரஃபைல் படமாக அனுப்பியிருக்கிறார்.
 செல்லங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

இவர் இன்று நம்முடன் பகிரவிருக்கும் குறிப்பு பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு.
சுலபமாக வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் வைத்து செய்து அசத்தியிருக்கிறார். பேச்சிலர்ஸ் மட்டுமல்ல அனைவரும் செய்து சுவைக்க வேண்டிய ருசியான ஈசியான குறிப்பு.


தேவையா பொருட்கள்;
சிக்கன் துண்டுகள் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
தக்காளி அரைத்தது - 2 பெரியது (200 கிராம்)
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.
சமைக்கும் நேரம் - 20 -  30 நிமிடங்கள்

செய்முறை:
சிக்கன் துண்டுகளை  நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

வதங்கிய பின்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.


அரைத்த தக்காளி விழுதைச்  சேர்த்து  நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய் சேர்க்கவும்.

தண்ணீர் வடித்த சிக்கன் துண்டுகளைச்  சேர்க்கவும்.

ஒரு சேர பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கனில் ஊறும் தண்ணீரே போதுமானது.தேவைக்கு  உப்பு சேர்க்கவும்.

சிக்கன் வெந்து இப்படி கூட்டு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.


சுவையான பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு ரெடி. 
சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.பிரியாணி,ஒயிட் ரைஸ், வெரைட்டி ரைஸ்,சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறலாம்.வெங்காயம் சேர்க்காததால் பயணத்திற்கு எடுத்துச் செல்லவும் நன்றாக இருக்கும்.ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிட்டாலும் அதே ஃப்ரெஷ் சுவையுடன் இருக்கும்.விரும்பினால் மல்லி இலை கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

என் குறிப்பை பகிர வாய்ப்பளித்த ஆசியா மாமிக்கு மிக்க நன்றி.

அருமையான சுலபமாக செய்யக் கூடிய இந்தக் குறிப்பை நம்முடன் பகிர்ந்து அசத்திய திருமதி தஸ்னீம் பாத்திமாவிற்கு மனமார்ந்த நன்றி மற்றும் மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்புக்கள் அனுப்ப விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்.

Wednesday, June 4, 2014

குளு குளு நன்னாரி சர்பத் / Chill Chill Nannari Serbeth



தேவையான பொருட்கள்;
நன்னாரி சர்பத் சிரப் - 3 டேபிள்ஸ்பூன்
ஊற வைத்த  பாதாம் பிஸின் - ஒரு குழிக்கரண்டி
தேவைக்கு பாதி பழம் எலுமிச்சை ஜூஸ்
ஊறிய சப்ஜா விதை - சிறிது விரும்பினால்.
நொறுக்கிய ஐஸ் கட்டிகள் - சிறிது.

செய்முறை:
முதல் நாள் இரவே தேவைக்கு பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் நன்றாக ஊறி இப்படி காணப் படும்.


ஒரு கண்ணாடி டம்ளரில் ஒரு குழிக்கரண்டி ஊறிய பாதாம் பிஸின், நன்னாரி சர்பத்,எலுமிச்சை ஜூஸ் சுவைக்கு சேர்த்து தூளாக்கிய ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு கலந்து ஜில்லென்று பரிமாறவும்.


குளு குளு நன்னாரி சர்பத் ரெடி.

நன்னாரி சர்பத்துடன் ஊறிய சப்ஜா விதை சேர்த்தும் ஜில்லென்று பரிமாறலாம். கோடைக்கால வெயில், நோன்புக் கால சூட்டையும் தணிக்கக் கூடிய பானம்.




ரூஹாஃப்சவுடன் சப்ஜா விதை சேர்த்தும் ஜில்லுன்னு பானம் தாயாரித்து பரிமாறலாம்.