Thursday, July 24, 2014

வாழைப்பூ கூட்டு / Plantain flower koottu


தேவையான பொருட்கள்:
வேக வைக்க:
சுத்தம் செய்து நறுக்கி அலசிய வாழைப்பூ மீடியம் சைஸ் - 1
வறுத்த பாசிப்பருப்பு - 50 கிராம்
கீரிய பச்சை மிளகாய் - 2 -4
நறுக்கிய வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சீரக, சோம்புத்தூள் - தலா 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க: தேங்காய் 3-4 டேபிள்ஸ்பூன், சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
தாளிக்க : 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
கிள்ளிய மிளகாய்வற்றல் - 1
கடுகு உ.பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2இணுக்கு.

செய்முறை:
வாழைப்பூவில் நரம்பு போல் இருக்கும் பகுதி, மெல்லிய வெள்ளை இதழ் போல் இருப்பதையும் நீக்கி விடவும்.
பின்பு பொடியாக நறுக்கி மோரில் போடவும்.சிறிது நேரம் கழித்து பிழிந்து எடுக்கவும்.அதிகம் துவர்க்காமல் நிறம் மாறாமல் இருக்கும்.
மணம் வரும்படி வறுத்த பாசிப்பருப்புடன் தேவைக்கு தண்ணீர் விட்டு குக்கரில் கொதி வரவும்அல்லது பாத்திரத்தில் கொதி வரவும், நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரக,சோம்பு மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்கட்டும்.பின்பு 
தாளிக்க மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து தாளித்து வேக வைத்த வாழைப்பூவில் கொட்டவும்.
சுவையான வாழைப்பூ கூட்டு ரெடி.
இதனை ப்லைன் ரசம் சாதம் அல்லது  சப்பாத்தியுடன் பரிமாறலாம்.



Wednesday, July 23, 2014

ஈசி ஈரல் கூட்டு - 2 / Easy Liver Koottu

தேவையான பொருட்கள்;
ஆட்டு ஈரல் மிக்ஸ்- கால் கிலோ
எண்ணெய் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
மிளகு ஒன்னரை டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

ஆட்டு ஈரல் துண்டுகளை நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு .சிறிது உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானவுடன் வெங்காயம்  வதக்கி, தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.
ஈரலை சேர்க்கவும். மூடி ஒரு 10 நிமிடம் வேக விடவும்.
திறந்து மிளகு சீரகத்தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டி பிரட்டி விடவும்.
ஒன்று சேர்ந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
விரும்பினால் பொடியாக  நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி பரிமாறலாம்.
சுவையான ஈரல் கூட்டு ரெடி.




இது ஒரு சுலப முறை செய்து பாருங்க சூப்பராக இருக்கும். கட்டி பருப்பு, ரசம், ஒயிட் ரைஸ் உடன் பரிமாறலாம்.ஆப்பம்,தோசை ஏன் பிரியாணியுடன் கூட பரிமாறலாம்:) !


Monday, July 14, 2014

வெள்ளை சட்னி / White chutney

வடை பஜ்ஜி இட்லி தோசைக்கு வெள்ளை சட்னி:


தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
துளி இஞ்சி -
உப்பு தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் -1 டீஸ்பூன்,கடுகு- கால் டீஸ்பூன். 1 இணுக்கு கருவேப்பிலை.
பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:
மேற்சொன்ன பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தாளித்து எடுத்தால் நிமிடத்தில் செம ஜோரான வெள்ளை சட்னி ரெடி.

செய்து பாருங்க அசத்தலாக இருக்கும். நோன்பு திறக்கும் வேளை டக்கென்று என் தங்கை நாச்சியா வடை பஜ்ஜிக்கு அரைத்துப் பரிமாறிய அசத்தலான சட்னி தான் இது.:) !




Thursday, July 10, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு -20 / பேக்ட் மீட் பாஸ்தா / Baked Meat Pasta (Indo Style)

என் மகனுக்கு மிகவும் பிடித்த பேக்ட் பாஸ்தாவை அவரே செய்வதாய் சொன்ன பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் மகன் எது செய்தாலும் செம டேஸ்டாக இருக்கும். எனக்கு என்றுமே மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம்.
இதோ உங்களுக்காக அந்த பகிர்வு. ஊரில் கிடைத்த பொருட்களை வைத்து செய்து அசத்தியிருக்கிறார். குக்கிங் அவரோட மிக விருப்பமான ஹாபி.Bechemal mix, knorr seasoning powder மட்டும் நான் எடுத்து சென்றிருந்தேன்.
பேக்ட் மீட் பாஸ்தா:


தேவையான பொருட்கள்:-
எல்போ பாஸ்தா - 500 கிராம்
கொத்துக்கறி - 500கிராம்
தக்காளி ப்யூரி - அரைக்கிலோவில் தயார் செய்தது
நறுக்கிய வெங்காயம் - பெரியது 2
நறுக்கிய கொடை மிளகாய் - 2
Bechamal mix - 1 பேக் + பால் அரை லிட்டர்.
துருவிய மொசரல்லா அல்லது ஸ்லைஸ்ட் செடார் சீஸ் - 200 கிராம் 
ஆலிவ் எண்ணெய் - 3 -4 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் கிள்ளியது - 3
உப்பு தேவைக்கு.
கருவேப்பிலை - தேவைக்கு.


செய்முறை:



பாஸ்தாவை தாராளமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து பக்குவாக வேகவைத்து வடித்து வைக்கவும்.

கறி ஊற வைத்து வேக வைக்க :
சுத்தம் செய்து அலசி வடிகட்டிய கொத்துக்கறி - 500கிராம்
Knorr seasoning mix - 10 கிராம்(சிறிய பேக்)
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

கறியை நன்கு அலசி தண்ணீர் வடிக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சீசனிங் பவுடர் சேர்த்து 1 மணி நேரம் மேரினேட் செய்யவும்.
குக்கரில் 3விசில் வேக வைத்து எடுக்கவும்.


தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து தோல் உரித்து ப்லெண்ட் செய்து எடுத்து வைக்கவும்.


Bechamal mix பாலில் கலந்து அடுப்பை மீடியமாக வைத்து கெட்டியாகும் வரை விடாமல் மிக்ஸ் செய்து அடுப்பை அணைக்கவும்.



ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கிள்ளிய வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



வேக வைத்த கறியை சேர்க்கவும்.வதக்கவும்.
தக்காளி ப்யூரியை சேர்க்கவும்.

கலந்து விடவும்.நறுக்கிய கொடைமிளகாய் சேர்க்கவும்.


சிறிது அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.



தயார் செய்த கறியை வேக வைத்த பாஸ்தாவுடன் கலந்து வைக்கவும்.



பேக்கிங் பவுலில் சிறிது எண்ணெய் தடவி முதல் லேயர் பாஸ்தா மிக்ஸ் வைக்கவும்.
ரெடி செய்த bechamal sauce விடவும்.
அதற்கு மேல் மீண்டும் பாஸ்தாவை பகிர்ந்து வைக்கவும்.
மீண்டும் bechamal sauce விடவும்.
செடார் சீஸ் ஸ்லைஸ் செய்து வைத்ததை மேற்புறமாக பவுல் முழுவதும் கவர் செய்து  வைக்கவும்.
அலங்கரிக்க கருவேப்பிலை கூட பயன்படுத்தலாம். சூப்பர் மணம்.(மகன் ஐடியா)


முற்சூடு செய்த கேஸ் ஒவனில் மீடியம் ஃப்லேமில் கவனமாக பேக் செய்து இரண்டு பவுலையும் எடுக்கவும்.எலெக்ட்ரிக் ஓவனிலும் வைக்கலாம்.
லேசாக பொன்னிறத்தில் மேற்புறம் ஆனவுடன் கவனமாக வெளியே எடுக்கவும்.
ஒரு பவுலில் உள்ளதை ஒன்பது சதுரங்களாக கட் செய்து பரிமாறவும்.
இரண்டு சதுர பவுலில் வைத்ததால் எனக்கு 18 சதுர துண்டுகள் கிடைத்தது.
6-8 நபர்களுக்கு பரிமாறலாம்.
சுவையான நம்ம டேஸ்டிற்கு ரெடி செய்த பேக்ட் மீட் பாஸ்தா ரெடி.







பரிமாறும் பொழுது படம் எடுக்க முடியவேயில்லை. நிம்மதியாக பிள்ளைங்க சாப்பிடட்டும்னு விட்டுட்டேன்.:) !
சும்மா படம் எடுத்தது மட்டும் தான் நான், நறுக்கியதில் இருந்து சமையல் பகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன் கையாலேயே முழுவதும் பேக் செய்து எடுத்தது வரை என் செல்ல செல்வ மகனே ! 


கூட மாட ஒத்தாசை செய்ய மட்டுமே  நாங்கள் :) !
ரமதான் ஸ்பெஷல் பகிர்வு இது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ஆமாம் இதனை இந்த வார சிறப்பு விருந்தினர் பகிர்வில் கூட சேர்க்கலாமே !
செய்து பகிர்ந்தவர் என் அன்பு மகனார் ஸாஹித் உமர். நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர்.

Wednesday, July 9, 2014

கிர்னிப்பழ மில்க் ஷேக் / Musk melon milk shake



தேவையான பொருட்கள்:
கிர்னிப்பழம் மீடியம் சைஸ் - 1
பால் - அரை லிட்டர்
சீனி - 6 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கியூப் - தேவைக்கு

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.

செய்முறை:
கிர்னிப்பழத்தின் தோலை சீவி பின்பு பழத்தை பாதியாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் அல்லது ப்லெண்டரில் பால், ஐஸ்கியூப், சீனி இவற்றுடன் கிர்னிப்பழம் சேர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.
ப்லெண்ட்டரில்  அடிப்பதை இரண்டு முறையாக செய்தால் மில்க் ஷேக் நன்றாக அரைபட்டு சூப்பராக வரும்.
ஐஸ் கியூப் சேர்த்து  அடித்தால் உடனே பரிமாறலாம். இல்லையெனில் முன்பே அடித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.
சுவையான கிர்னிப்பழ மில்க் ஷேக் ரெடி. 
அடிக்கும் வெயிலிற்கு இதனை செய்து பருகினால் இதமாக இருக்கும்.
நோன்பு திறக்கும் பொழுதும் பரிமாறலாம்.


Monday, July 7, 2014

வெள்ளரிக்காய் பச்சடி / Cucumber Pachadi


தேவையான பொருட்கள்:
வெள்ளரிப் பிஞ்சு - 6
நறுக்கிய சிறிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
அரைக்க: 
தேங்காய் - 3-4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 3-4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - அரைடீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை - சிறிது

பரிமாறும் அளவு - 4-6 நபர்கள்.

செய்முறை:
வெள்ளரிபிஞ்சை தோல் சீவி நீளவாட்டில் ஸ்லைஸ் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மேற்குறிப்பிட்ட அளவு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிள்காய், கருவேப்பிலை,வெள்ளரிக்காய் சிறிது தண்ணீர்,தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்தபின்பு அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் சிறிது சூடு படுத்தவும்.திரியக் கூடாது.
தாளிப்பை கொட்டவும்.
கலந்து விடவும்.

சுவையான வெள்ளரிப் பச்சடி ரெடி.
நெய்ச்சோறு,புலாவ், பிரியாணி,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

ரெசிப்பி - சமையற்காரம்மா மரியம் பீவி.