Sunday, September 28, 2014

வறுத்தரைத்த தேங்காய்ச் சட்னி


வறுத்து அரைக்க:
தேங்காய் துருவியது - 1 கப்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 1 இணுக்கு
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பல் - 1
தக்காளி - பாதி
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - கால் ஸ்பூன்
வற்றல் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:
தேங்காய்த்துருவல், வற்றல், பூண்டு,கருவேப்பிலை பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.
வறுத்தவை ஆறியவுடன்  மிக்சி ஜாரில் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து அரைக்கவும்.அத்துடன் பாதி  தக்காளி சேர்க்கவும்.மீண்டும் அரைக்கவும்.தேவைக்கு உப்பு கெட்டித்தன்மைக்கு தக்கப்டி தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து பவுலில் ஊற்றவும்.மேலே தாளித்து கொட்டவும்.
சுவையான வறுத்தரைத்த தேங்காய்ச் சட்னி ரெடி.
இட்லி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம்.
காலையில் அரைத்து கைபடாமல் எடுத்துப்,  பரிமாறினால்  மீதி மாலை வரை கெடாமல்அப்படியே இருக்கும்.


Wednesday, September 24, 2014

ஒயிட் சாஸ் / White Sauce

தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் அல்லது மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 300 மில்லி
மிளகுத்தூள் - பின்ச்
உப்பு - சிறிது சுவைக்கு.

விரும்பினால் ஒரு பெரிய பல் பூண்டு நன்கு நைசாக தட்டி போட்டு  ஒரு சிறிய வெங்காயத்தில் 1 அல்லது 2 கிராம்பு சொருகி ஒயிட் சாஸ் தயாரிக்கும் பொழுது போட்டு எடுத்தால் மணமாக இருக்கும்.

செய்முறை:
ஒரு நாண்ஸ்டிக் பேனில் வெண்ணெய் போட்டு உருகவும், மைதா அல்லது கார்ன்ஃப்லோரை சேர்க்கவும்,நன்கு வதக்கவும்.
காய்ச்சிய பால் விடவும். கட்டி பிடிக்காமல் கலக்கவும். இறுகி வரும்.
சுவைக்கு உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஒயிட் சாஸ் ரெடி.

விரும்பினால் ஒரு பல் பூண்டு தட்டி போட்டு  ஒரு சின்ன வெங்காயத்தில் 1 அல்லது 2 கிராம்பு சொருகி ஒயிட் சாஸ் தயாரிக்கும் பொழுது போட்டு எடுத்தால் மணமாக இருக்கும்.

இதனை பாஸ்தா, நூடுல்ஸ், உடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம்.ப்ரெட் சாண்ட்விச் செய்யும் பொழுது தடவிக் கொள்ளலாம்.


Tuesday, September 23, 2014

ஈசி கத்திரிக்காய் பச்சடி / Easy Brinjal Pachadi

தேவையான பொருட்கள்;

நறுக்கிய கத்திரிக்காய் கால் கிலோ,
கீறிய  பச்சை மிளகாய் 3
நறுக்கிய ஒரு வெங்காயம்
ஒரு தக்காளி
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
மல்லி இலை
தேவைக்கு புளிக்கரைசல்
விரும்பினால் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் இறுதியில் சேர்த்து பிரட்டவும்.
சிறிது உப்பு
தாளிக்க:

ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய விட்டு கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உ.பருப்பு,ஒரு வற்றல்,கருவேப்பிலை.


செய்முறை:
மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்த்து குக்கரில் 2 சத்தம் வேக வைக்கவும்.ஆவி அடங்கியவுடன் திறந்து மசித்துக் கொள்ளவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய விட்டு கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உ.பருப்பு,ஒரு வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை ஒரு இணுக்கு, பின்ச் பெருங்காயப்பொடி போட்டு தாளித்து கொட்டவும்.
 சிம்ப்ளி சூப்பர்ப்  கத்திரிக்காய் பச்சடி ரெடி.விரும்பினால் நறுக்கிய மல்லி இலை அலங்கரிக்கலாம்.
இதனை கஞ்சி, இட்லி,தோசை,ஏன் மீன் குழம்பு,கறிக்குழம்பு வைக்கும் பொழுது கூட சைட் டிஷ் ஆக  வைக்கலாம்.



Sunday, September 21, 2014

போன்லெஸ் சிக்கன் ரோஸ்ட் / Boneless Chicken Roast

வலையுலக நட்பு சுஹைனாவிடமிருந்து அவர்களின் தயாரிப்பான தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் மாதிரி பேக் (விபரத்திற்கு கிளிக்கவும்) எனக்கு வந்தது.அதனை உபயோகித்து செய்த சிக்கன் ரோஸ்ட் தான் இன்றைய பகிர்வு.


தேவையான பொருட்கள் ;
சிக்கன் நெஞ்சுக்கறி - 1 கிலோ
தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 3
புளிக்காத  கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 2-3 டேபிள்ஸ்பூன்(காரத்திற்கு தகுந்தபடி)
எண்ணெய் - 5  டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 3 இணுக்கு.
உப்பு- தேவைக்கு சிறிது.


 செய்முறை:
கோழி இளம் நெஞ்சுக்கறியாக பார்த்து வாங்கி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர்
வடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது,
தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும், சிம்மில் வைத்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய், தயிர் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
சிக்கன் 65 மசாலா சுவைக்கு தக்க சேர்க்கவும்.
சிக்கன் சேர்க்கவும்.ஒரு போல் பிரட்டி விடவும்.
சிக்கனில் தண்ணீர் ஊறும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கவேண்டாம்.
மசாலாவிலும் இஞ்சி பூண்டிலும் உப்பு இருக்கும்,எனவே தேவைப்பட்டால் மட்டும் சிறிது உப்பு சேர்க்கவும்.
மூடி போட்டு வேக விடவும்.கறி வெந்த பின்பு தண்ணீர் வற்ற விட்டு கருவேப்பிலை தூவி பிரட்டி எடுக்கவும்.



சுவையான போன்லெஸ் சிக்கன் ரோஸ்ட் ரெடி.

பின்குறிப்பு:
தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல மணத்துடனும் ஃப்ரெஷாகவும் இருந்தது. தேவைப்படுகிறவர்கள் Taj Mahal Masala Fcebook page message box தொடர்பு கொள்ளவும்.

Friday, September 19, 2014

சில்லி நூடுல்ஸ் ப்ரெட் / Chilli noodles bread.


தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 4 துண்டுகள்
நூடுல்ஸ் பேக் - சிறியது
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
சில்லி சாஸ், டொமட்டோ சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்
அலங்கரிக்க - நறுக்கிய மல்லி இலை அல்லது ஸ்பிரிங்க் ஆனியன் சிறிது
எண்ணெய் - 2 -3 டேபிள்ஸ்பூன்.
உப்பு - சிறிது தேவைக்கு.


செய்முறை:

ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி ஓவனிலோ அல்லது பேனிலோ ரோஸ்ட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸ் வேக வைக்க,  தேவைக்கு தண்ணீர்,  மசாலா( விரும்பினால் சேர்த்து) வேக வைத்து வடித்து  எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்,வதக்கவும்.
சாஸ் வகைகள் சேர்க்கவும்.ப்ரெட் சேர்க்கவும் நன்கு பிரட்டி விடவும்.
வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
அதிக காரத்திற்கு மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் சேர்க்க்லாம்.நான் சேர்க்கவில்லை.
நறுக்கிய மல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பரிமாறவும்.
ப்ரெட் அல்லது நூடுல்ஸ் மட்டும் கூட இந்த முறையில் செய்தும் ருசிக்கலாம்
விரும்பினால் முட்டை கூட சேர்க்கலாம்..மாலை நேர டிஃபனாக செய்து சாப்பிடலாம்.



Sunday, September 14, 2014

நெத்திலி மீன் கூட்டு / Anchovies Kootu


தேவையான பொருட்கள்;
நெத்திலி மீன் - கால்  கிலோ 
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு.
(விரும்பினால் - தட்டிய பூண்டு பல் 3)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2- 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 -  ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை::
முதலில் ஒன்னரை வெங்காயம்,இரண்டு தக்காளியை பரபரவென்று மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
மீதி பாதி வெங்காயம் தாளிக்க நறுக்கி வைக்கவும்.



மீனின்  தலை,வயிற்றுப்பகுதி கழிவு நீக்கி,முள் விரும்பினால் எடுத்து சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.


 மீன் செய்யும்  அகல சட்டியில் முதலில் எண்ணெய் காயவிட்டு விட்டு,கடுகு,உளுத்தம் பருப்பு வெந்தயம் கருவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்முறுகலாக வதக்கவும், தட்டிய பூண்டு விரும்பினால் சேர்க்கலாம்.

பின்பு அத்துடன் கொரகொரவென்று அரைத்த வெங்காயம் தக்காளி விழுது,சிறிது உப்பு  சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

வதங்கியதும் மேற்குறிப்பிட்ட மசாலா (மிள்காய்த்தூள்,சீரக சோம்பு,மல்லி,மஞ்சள் தூள் ) அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
கரைத்த புளிக்கரைசல் விட்டு நன்கு கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும்.
புளி,மசாலா வாடை மடங்கியதும் நெத்திலி  மீன் சேர்த்து கொதிக்க விடவும்.அகப்பை போடக் கூடாது. அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும். கெட்டியாக இருக்க வேண்டும்.
மீன் வெந்து, எண்ணெய் மேல் வரவும் அடுப்பை அணைக்கவும்.


சுவையான நெத்திலி கூட்டு ரெடி. 
சூடான சாதம், கீரை, ரசத்துடன் பரிமாறவும். இக்கூட்டு தேங்காய் சேர்க்காமல் செய்தால் தான் சுவை அபாரமாக இருக்கும்.


நெத்திலி மீன் சுத்தம் செய்வது எப்படி ? பார்க்க இங்கு கிளிக்கவும்.

Saturday, September 13, 2014

சமையல் பொருட்கள் - பகுதி - 5 - English,Tamil, தமிழ்- வாசனை மற்றும் சுவையூட்டும் பொருட்கள் / Spices and Condiments



வாசனை மற்றும் சுவையூட்டும் பொருட்கள் ;


Green Cardamom
Black cardamom

கிரீன் கார்டமம்
ப்லாக் கார்டமம்

ஏலக்காய்
கருப்பு ஏலக்காய்
Cinnamon
சின்னமன்
பட்டை
Clove
க்லவ்
கிராம்பு /லவங்கம்
Cumin
Black Cumin / Shah jeera
க்யுமின்
ப்லாக் க்யுமின்
சீரகம்
கருஞ்சீரகம்
Red Chillies
ரெட் சில்லீஸ்
சிவப்பு மிளகாய்
Coriander seeds
Black stone Flower/ StarAnise
கொரியாண்டர்சீட்ஸ்

ப்லாக் ஸ்டோன் ஃப்லவர்



வரக் கொத்தமல்லி

கல்பாசி


Dried Ginger
ட்ரைட் சிஞ்சர்
சுக்கு
Fenugreek
ஃபெனுகிரீக்
வெந்தயம்
Garlic
கார்லிக்
பூண்டு
Ginger
ஜிஞ்சர்
இஞ்சி
Musk
மஸ்க்
கஸ்தூரி
Mustard
மஸ்டர்ட்
கடுகு
Black Pepper
White Pepper
ப்ளாக் பெப்பர்
ஒயிட் பெப்பர்
குறுமிளகு
வெள்ளை மிளகு
Poppy seed
பாப்பி சீட்
கசகசா
Rose water
ரோஸ் வாட்டர்
பன்னீர்
Saffron
சாஃப்ரான்
குங்குமப்பூ
Turmeric
டர்மரிக்
மஞ்சள் பொடி
Tamarind
டமாரிண்ட்
புளி
Fennel / Aniseed
ஃபெனெல்
பெருஞ்சீரகம்/ சோம்பு
Bay leaf

பே லீஃப்

பிரியாணி இலை / புன்னை இலை
Nutmeg
நட்மெக்
ஜாதிக்காய்
Curry leaves
கரி லீவ்ஸ்
கருவேப்பிலை
Sesame Seeds
செசாம் சீட்ஸ்
எள்ளு
Mace
மேஸ்
ஜாதி பத்திரி
Lemon rind
லெமன் ரிண்ட்
எலுமிச்சைதூள்
Mango Powder
மேங்கோ பவுடர்
மாங்காய்த்தூள்

Thymol Seeds
தைமால் சீட்ஸ்
ஓமம்
Asafoetida
அசஃபோடிடா
பெருங்காயம்
Jaggery
Sugar Candy
ஜாகரி
சுகர் கேண்டி
வெல்லம்
கற்கண்டு
Raisins
ரெய்சின்ஸ்
உலர்திராட்சை
Almond
அல்மாண்ட்
பாதாம் பருப்பு
Cashew nut
கேஸு நட்
முந்திரி பருப்பு
Pistachio
பிஸ்டாச்சியோ
பிஸ்தா பருப்பு
Walnut
வால்நட்
வாதுமை பருப்பு
Groundnut
க்ரவுண்ட் நட்
வேர்க்கடலை

Refer here also. http://en.wikipedia.org/wiki/List_of_Indian_spices.

இன்னும் சமையல் பொருட்கள் பட்டியல் தொடரும்.

Thursday, September 11, 2014

சமையல் பொருட்கள் - பகுதி - 4 - உண்ணக்கூடியவை / பருகக்கூடியவை - Eatables / Drinkables - English, Tamil, தமிழ்



Eatables

Chicken Meat
Venison
Turkey
Pork
Beef
Mutton
Fish
Crab
Prawn
Sausage

Ham Burger






Soup
Curry / Gravy
Dish
Chutney
Butter
Buttermilk
Cheese
Curd
Ghee
Honey
Jam
Cake
Muffin
Pancake


Pudding
Pickle
Preserves
Salad
Sandwich
Sweet meats
Sauce
Pizza
Chocolate

Biscuit

Cake
Bread
Pasta / Spaghetti / Macroni


Rice

Drinkables:-

Water
Tea
Coffee

Milk
Lemonade
Coke
Fruit Juice
Hot Chocolate
Soup / Broth
Lassi
Milk shakes




சிக்கன் மீட்
வெனிசன்
டர்க்கி
போர்க்
பீஃப்
மட்டன்
ஃபிஷ்
க்ராப்
ப்ரான்
சாசேஜ்

ஹம்பர்கர்






சூப்
கறி / கிரேவி
டிஷ்
சட்னி
பட்டர்
பட்டர்மில்க்
சீஸ்
கர்ட்
கீ
ஹனி
ஜாம்
கேக்
மஃப்பின்
பேன்கேக்


புட்டிங்
பிக்கில்
பிரஸர்வ்ஸ்
சாலட்
சாண்ட்விச்
ஸ்வீட்மீட்ஸ்
சாஸ்
பிஸ்ஸா
சாக்லேட்

பிஸ்கட்

கேக்
ப்ரட்
பாஸ்தா/ ஸ்பாகட்டி/ மக்ரோனி

ரைஸ்




வாட்டர்
டீ
காஃபி

மில்க்
லெமனேட்
கோக்
ஜூஸ்
ஹாட் சாக்லேட்
சூப் / ப்ராத்
லஸ்ஸி
மில்க் ஷேக்ஸ்



கோழிக் கறி
மான் கறி
வான்கோழி கறி
பன்றி கறி
மாட்டுக் கறி
ஆட்டுக் கறி
மீன்
நண்டு
இறால்
பதப்படுத்தப்பட்ட கொத்துக்கறி
மாட்டு அல்லது பன்றி இறைச்சியால் செய்யப்பட்ட பதார்த்தம்


குழம்பு
கறி /குழம்பு
உணவு
துவையல்
வெண்ணெய்
மோர்
பாலாடைக்கட்டி
தயிர்
நெய்
தேன்
பழப்பாகு
இனிப்பு ரொட்டி
பனியாரம்
ஓட்டப்பம் / ஓட்டடை



பிட்டு / களி
ஊறுகாய்
பதப்படுத்திய வற்றல்
பச்சடி
பஜ்ஜி
இனிப்பு பண்டங்கள்

வேகப்பம்
மொரப்பா /பாலாடை இனிப்பு பண்டம்
 தட்டை ரொட்டி / பிஸ்கோத்து
இனிப்பு ரொட்டி
ரொட்டி
மாச்சேவை /மாச்சுருள்


சோறு



தண்ணீர்
தேனீர்
குழம்பி/ கொட்டை வடிநீர் / காபி
பால்
எலுமிச்சை பானம்
கற்கரி
பழச்சாறு
சூடான சாக்லேட்
குழம்பு
கடைந்த தயிர்
பால் உலுக்கி


சமையல் பொருட்கள் பற்றிய தொகுப்புக்கள்  தொடர்ந்து கொடுக்க உள்ளேன்.உங்களுக்கு எதுவும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..
நன்றி.