Tuesday, December 30, 2014

பொடி தூவிய வெங்காய தோசை / Podi sprinkled onion dosai

தேவையான பொருட்கள்; 
தோசை மாவு - தேவைக்கு
மேலே தூவ இட்லிப்பொடி
நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய மல்லியிலை, கருவேப்பிலை,பச்சை மிளகாய் கலந்த மிக்ஸ்.
நல்லெண்ணெய் தேவைக்கு.

 செய்முறை:
அடுப்பில் தோசைக்கலத்தை வைத்து சிறிது எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை எடுத்து வட்டமாக பரத்தி விடவும்.
அதில் தேவைக்கு ஏற்ப பொடி தூவிக் கொள்ளவும்.
அதன் மேல் ரெடி செய்த வெங்காயக் கலவையை தூவவும். சுற்றி எண்ணெய் ஒரு ஸ்பூனால் சுற்றி விடவும், மூடி சிறிது வேக விடவும்.
கவனமாக திருப்பி போடவும்.
இருபுறமும் லேசான  மொறு மொறுப்புடன் சட்னி சேர்த்து  பரிமாறவும்.

சுவையான இட்லி பொடி தூவிய வெங்காய தோசை ரெடி. சூப்பர்.

Friday, December 26, 2014

முருங்கைக்கீரை பருப்பு உசிலி / Moringa leaves paruppu usili

 தேவையான பொருட்கள்;
முருங்கைக்கீரை - 2 கப்
துவரம் பருப்பு,கடலை பருப்பு - தலா கால் கப்
சீரகம் - அரைடீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 3 அல்ல்து 4
எண்ணெய் - 2 -3 டேபிள்ஸ்பூன்
கடுகு & உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கீரை ஆய்ந்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.


 சுத்தம் செய்து அலசிய கீரையை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
 பருப்பு வற்றல் சீரகம் இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

 ஊறிய பின்பு மிக்சி ஜாரில் போட்டு பரபரப்பாக அரைத்து எடுக்கவும்.


 அரைத்த விழுதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
 மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

 ஆறிய பின்பு நன்கு தூளாக உதிர்க்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,பெருங்காயம் வற்றல் தாளிக்கவும்.
 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வேகவைத்து உதிர்த்த பருப்பு கலவையை சேர்க்கவும்.நன்கு சிம்மில் வைத்து பிரட்டவும்.
 அத்துடன் வெந்த முருங்கைக்கீரையை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 பின்பு தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

சுவையான முருங்கைக்கீரை பருப்பு உசிலி ரெடி.

இதனை குழம்பு சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.
அல்லது மாலை நேர டிபனுக்கும் செய்து கொடுக்கலாம்.
பருப்பு கலவையை ஒவனில் வேக வைக்க விரும்பாதவர்கள் ஆவியில் வேக வைத்தும்  சேர்க்கலாம்.எல்லா வகை கீரையிலும் உசிலி செய்யலாம்.

Monday, December 22, 2014

முட்டை தம் பிரியாணி / Egg dum briyani

தேவையான பொருட்கள்;
முட்டை - 3
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம்  மீடியம் சைஸ் -2
தக்காளி - 1
கீரிய பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
ஏலம், பட்டை,கிராம்பு, பிரியாணி இலை - தலா 2
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள், மஞ்சள், சீரக,மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன் ( முட்டையை ஃப்ரை செய்ய)
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
சாஃப்ரான் - பின்ச் அல்லது லெமன் எல்லோ கரைசல்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.
அரிசியை ஒரு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.முட்டை வேக பாதியாக கட் செய்து வைக்கவும்.






நான்ஸ்டிக்பேனில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டையை ஃப்ரை செய்ய குறிப்பிட்ட மசாலா தூள்கள் சேர்த்து சிறிதும் உப்பும் சேர்த்து பிரட்டி ஃப்ரை செய்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போடவும்.நறுக்கிய வெங்காயம் போட்டு இளம் சிவப்பாக நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

தக்காளி,மிளகாய், மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு தேவைக்கு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
மிளகாய்,மல்லி,மஞ்சள், கரம் மசாலா தூள் வகை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டவும்.
கெட்டித்தயிர் சேர்க்கவும்.
நன்கு பிரட்டவும்.
ஃப்ரை செய்த முட்டை சேர்க்கவும். சிறிது மூடி சிம்மில் வைக்கவும்.


ஒரு பாத்திரத்த்தில் தண்ணீர் கொதிக்க விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து ஊறிய அரிசியை 90 சதவிகிதம் வேக வைத்து வடிக்கவும். கொஞ்சம் அரிசி என்பதால் ஒரளவு வேக வைத்தால் தான் பிரியானி சாஃப்டாக இருக்கும்.


வேக வைத்து வடித்த அரிசியை முட்டை மசாலாவின் மீது பரத்தி போடவும்.பின்ச் சாஃப்ரான் கொஞ்சமாக கொதி நீரில் (அரிசி வடித்த நீரில்)கரைத்து மேலே ஊற்றி விடவும்,ஒரு சிறிய பாதி எலுமிச்சையை பிழிந்து விடவும்.விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் மேலே விடலாம்.
மூடி ஒரு பத்து நிமிடம் சிம்மில் தம் போடவும்.கிரேவி சுண்டும் வரை தம் செய்ய வேண்டும்.அடுப்பை அணைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து திறந்து நன்கு ஒரு போல் முட்டை உடையாதவாறு பிரட்டி சூடாக உடன் பரிமாறவும். ஆனியன் ரைத்தா அல்லது ஒரு ஊறுகாயிடனோ அல்லது ஒரு மல்லித்துவையல் உடனோ பரிமாறினால் சூப்பர். உடன் பொரித்த ப்லைன் அப்பளம் இருந்தாலும் சூப்பர்.

Sunday, December 7, 2014

கலர்ஃபுல் ஃப்ரைட் ரைஸ்( மொத்த சமையல்) / Colourful fried rice

தேவையான பொருட்கள்;-
பாசுமதி அரிசி - 1 கிலோ
கேரட் - 150 கிராம், பீன்ஸ் - 100 கிராம், முட்டை கோஸ் -150 கிராம்
கொடைமிளகாய்- பச்சை,சிவப்பு ,ஆரஞ்சு,மஞ்சள்- தலா ஒன்று மீடியம் சைஸ்
எண்ணெய் - 150 மில்லி
பட்டர் - 50 கிராம்
சோயா சாஸ் -4 டேபிள்ஸ்பூன்
(   அஜினோமோட்டோ - விரும்பினால் 1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை)
பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது - 2
நறுக்கிய வெங்காயம் பெரியது - 1
இஞ்சி பூண்டு விழுது அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
சூப் கியூப் - 2 
ஸ்பிரிங் ஆனியன் - 5 எண்ணம்
உப்பு ,மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.



பாசுமதி அரிசியை அரை  மணி நேரம் ஊற விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்.
தாராளமாய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும்.தேவைக்கு உப்பு,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.சோறு உடையாமல் இருக்கும்.
சுற்றி நன்கு கொதி வரும் பொழுது 80 சதவீதம் வெந்த பின்பு வடிகட்டவும்.
வடிகட்டி விரிவான பாத்திரத்தில் சிறிது வைத்தால் மீதி 10 சதவீதம் சோறு புழுங்கி ஒன்றொன்றாய், ஆனால் சோறு பக்குவமாய் இருக்கும்.

பெரிய பாத்திரத்தில் எண்ணெய் பட்டர் விடவும். சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போடவும்.சிம்மில் வைத்து வதக்கவும்,இஞ்சி பூண்டு போடவும்.சிவற விடக் கூடாது.
கேரட்,பீன்ஸ், கோஸ் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
நறுக்கிய கொடை மிளகாய் சேர்க்கவும்.  பொடித்த சூப் கியூப் சேர்க்கவும்.நன்கு வதக்கி பிரட்டி விடவும்.சூப் கியூபில் உப்பு இருக்கும்.சூப் கியூப் சேர்க்க விரும்பாதவர்கள் உப்பு மட்டும் சேர்க்கலாம்.
பாதி சோயா சாஸ் ,தேவைக்கு  மிளகுத்தூள் சேர்க்கவும்.
வடித்த சோறு சேர்க்கவும்.மீதி சோயா சாஸ் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.
நன்கு சோறு உடையாதவாறு குலுக்கி விடவும்,அல்லது அகப்பையால் மெதுவாக நன்கு கலந்து விடவும்.சூடாக பரிமாறினால் அருமையாக இருக்கும்.
சுவையான கலர்ஃபுல் ஃப்ரைட் ரைஸ் ரெடி.
விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.