Thursday, January 22, 2015

3 வகையான வெரைட்டி ரைஸ் - தேங்காய்,எலுமிச்சை & தயிர் சாதம்/ 3 Type Variety Rice- Lemon,Coconut & Curd rice.


 சாதம் :
தேங்காய் சாதம்:_
தேவையான பொருட்கள்;
வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10-15
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத்தூள் - பின்ச்
கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
சாதம் வடித்து ஆற வைக்கவும்.தேங்காய் துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானவுடன் தாளிக்க கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,முந்திரிபருப்பு,வற்றல்,பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
சாதம் சேர்க்கவும்.உப்பு சிறிது தேவைக்கு தூவவும்.
நன்கு கலந்து விடவும்.
சுவையான தேங்காய் சாதம் ரெடி.


எலுமிச்சை சாதம் :
தேவையான பொருட்கள்;
வடித்த சாதம் - 1 தட்டு
சிறிய சைஸ் எலுமிச்சை பழம் - 1 (ஜூஸ் எடுக்க)
கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை -  2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது கீரிய பச்சை மிள்காய் - 2
பெருங்காயப் பொடி 2 பின்ச் அல்லது  இஞ்சி நறுக்கியது ஒரு டீஸ்பூன்
(நான் மிளகாய் வற்றல் சேர்த்தால் பெருங்காயப் பொடி சேர்ப்பேன், ஒரு நேரம் பச்சை மிளகாய் சேர்த்தால் இஞ்சியும் சேர்ப்பேன் மணம் மாற்றத்திற்காக)
மஞ்சள் தூள் - 2 பின்ச்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,வேர்க்கடலை, மிளகாய் வற்றல், கருவேப்பிலை,மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.  சாதம் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும். சாதம் சூடேறியவுடன் அடுப்பை அணைக்கவும்.
சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.

தயிர் சாதம்:
தேவையான பொருட்கள்; 
சாதம் 150 கிராம் அரிசியில் குழைவாய் வடித்தது
காய்ச்சிய பால் - ஒரு கப்
கெட்டித்தயிர் - ஒன்னரை கப்
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - பெரிய பின்ச்
நறுக்கிய மல்லி இலை, கருவேப்பிலை.
செய்முறை:
குழைவாய் வடித்த சாதத்தில் பால் விட்டு மசித்துக் கொள்ளவும்.
தயிர் சேர்த்து கலந்து வைக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.
தாளிக்க சொன்னவற்றை தாளித்து கொட்டவும்.
நன்கு கலந்து பரிமாறவும்.
சுவையான தயிர் சாதம் ரெடி.

வெரைட்டி ரைஸ் எந்த வகை செய்தாலும் தயிர் சாதத்தில் முடித்தால் தான் திருப்தியாக இருக்கும்.


மெனு  - 1  (வெஜ் வெரைட்டி ரைஸ் & பக்க உணவுகள்) 
கர்ப்பிணி பெண்களுக்கு இப்படி வாய்க்கு ருசியாக செய்து கொடுத்தால் ரசித்து சாப்பிடுவார்கள்.வளைக்காப்பு மெனுன்னு கூட இதை சொல்லலாம்.




3 comments:

Suchi Sm said...

அசத்தல் வெரைட்டி ரைஸ் அக்கா..

priyasaki said...

மிக பயனுள்ள பகிர்வு.நன்றி ஆசியா.

-'பரிவை' சே.குமார் said...

அருமையான வெரைட்டி ரைஸ் அக்கா...