Wednesday, January 21, 2015

கருப்பு உளுந்து வடை & இனிப்பு & கார உளுந்து சுண்டல் / Black gram vadai & Black gram sweet sundal

 ஊரில் இருந்து எடுத்து வந்த  தோட்டத்தில் விளைந்த உளுந்து ( ஆர்கானிக்) .அது அப்படியே பாட்டிலில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இதை பயன்படுத்தாமல் வைத்திருக்கோமேன்னு நினைவில் வரும்.இன்று தான் அதற்கு நேரம் வந்திருக்கு.சமைத்து அசத்தியாச்சு.

உளுந்தில் வண்டு விழாமல் இருக்க ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு லேசாக மணம் வரும் படி வறுத்து ஆற வைத்து ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும்.
இனி செய்முறைக்குச் செல்வோம்.
 தேவையான பொருட்கள்;-
இனிப்பு & கார சுண்டல் 
முழு உளுந்து - 1 கப் (ஊற வைத்து எடுக்கவும் ) இரண்டு கப் அளவு வரும்.
தேவைக்கு தேங்காய் துருவல்
சீனி
நெய் .
கார சுண்டல் தாளிக்க எண்ணெய்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை,வெங்காயம்
தேங்காய் துருவல்
உப்பு.
எல்லாம் தேவைக்கு கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:

 இரவு ஊற வைத்தால் காலையில் பக்குவமாக ஊறி இருக்கும்.அரித்து எடுக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் வைத்து நன்கு கொதித்தவுடன் ஊறிய உளுந்தை போடவும். கால் மனி நேரத்திற்குள் வெந்து விடும்.வடித்து வைக்கவும்.
இனிப்பு சுண்டலுக்கு ஒரு கப் உளுந்திற்கு 1 டேபிள்ஸ்பூன் சீனி, தேவைக்கு தேங்காய் துருவல் கால் டீஸ்பூன் நெய் போட்டு சூட்டுடன் கலந்து வைக்கவும். பின் பரிமாறவும்.
 சுவையான இனிப்பு சுண்டல் ரெடி.
 கார சுண்டல் ரெடி செய்ய வேக வைத்த உளுந்தை மேற்கூறிய பொருட்கள் சேர்த்து தாளித்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.

இனி கருப்பு உளுந்து வடை செய்ய:

 தேவையான பொருட்கள்;
அரைக்க:
ஊற வைத்த உளுந்து - ஒரு கப்



 இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.
 அரைத்த உளுந்துடன் நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய மல்லி கருவேப்பிலை சிறிது,பொடித்த மிளகு -கால் அல்லது அரை டீஸ்பூன்  சேர்த்து கலந்து கொள்ளவும்.
 அடுப்பில் வாணலியில் தேவைக்கு எண்ணெய் விடவும்.
 எண்ணெய் சூடானவுடன் அடுப்பை மிதப்படுத்தி கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக  எடுத்து வடையாக  தட்டி போடவும்.
 நிதானமாக இளஞ்சிவப்பாக நிறம் வரும் வரை சுடவும்.வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் உட்புறம் மெதுவாகவும் இருக்கும்.சுத்தமாக எண்ணெய் குடிகாது.ருசி அபாரமாக இருக்கும்.
ஒரு கப் ஊறிய உளுந்திற்கு மீடியம் சைஸ் 8 வடை வரும்.
 சத்தான சுவையான கருப்பு உளுந்து வடை ரெடி. சட்னி கூட தேவையில்லை,அப்படியே சாப்பிடலாம். காரசாரமாக சூப்பராக இருக்கும்.
காலை அல்லது மாலை நேர டிஃபனுக்கு ஏற்றது.

3 comments:

Angelin said...

/விளைந்த உளுந்து ( ஆர்கானிக்) //



மிக்க நல்லது ..
அனைவரும் இப்படி ஆர்காநிக்குக்கு மாறுவது .ருசி வித்யாசம் நல்லா கண்டுபிடிக்கலாம் .

தாங்க்ஸ் ரெசிப்பிக்கும்

Kalpana Sareesh said...

i only make adai.. will try tis vadai soon..looks sooper

-'பரிவை' சே.குமார் said...

நல்ல செய்முறை... அருமை.