Sunday, January 4, 2015

அவித்த பனங்கிழங்கு / Boiled Panangkizhangu



எப்படி ஈசியாக அவிப்பது?
தேவையான பொருட்கள்; 
பனங்கிழங்கு - 12
அவிக்க உப்பு ,மஞ்சள் தூள்( விருப்பப்பட்டால்) சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
பனங்கிழங்கின் மேல் தோலை உரித்து விட்டு கொண்டையை  நறுக்கிக் கொண்டு விளிம்பையும் சிறிது நறுக்கி இட்லி சட்டியில் கீழ் பாத்திரத்தில் தாராளாமாக தண்ணீர் வைத்து மேலே தட்டில் தோலுடனோ அல்லது உரித்த கிழங்கை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கலாம்.அல்லது
குக்கரில் என்றால் தண்ணீருடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவைக்கு உப்பு சேர்த்து கிழங்கையும் போட்டு ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கலாம்.
சுவையான பனங்கிழங்கு ரெடி.

அப்படியே இரண்டாக பிளந்து நடுவில் இருக்கும் குருத்தை எடுத்துவிட்டு நார் நீக்கி துண்டு துண்டாக ஒடித்து அப்படியே சாப்பிடலாம்.
பனங்கிழங்கு சீசனும் வந்திடுச்சு. பொங்கலும் வரப் போகுது.
அப்படியே கிழங்கை துருவியில் துருவி தேங்காய்த்துருவல் சீனி சேர்த்து விரவியும் சாப்பிடலாம்.
பனங்கிழங்கை வீட்டில் கரி அடுப்பு இருந்தால் தோலுடன் சுட்டு, பின் தோலெடுத்து ஒடித்தோ அல்லது சீவியோ மணக்க மணக்க சாப்பிடலாம்.

4 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பர்

நிறைய மிஞ்சி விட்டால் காயப்போட்டு உப்பு,மிளகாய் வற்றலுடன் சேர்த்து இடித்துத் தூளாக்கியும் சாப்பிடலாம். அசத்தலாக இருக்கும்.

chitrasundar said...

பனங்கிழங்கை கண்ணால் பார்த்தும், சாப்பிட்டுப் பார்த்தும் பல வருடங்களாகிவிட்டது. நீங்க சொன்ன மாதிரியேதான், ஆனால் மஞ்சள்தூள் போடமாட்டாங்க‌. கிடைத்தால் வாங்கி அவிக்கலாம்.

Saratha said...

பனங்கிழங்கு பதிவு மிக அருமை.நீங்கள் இருக்கும் பகுதியில் பனங்கிழங்கு கிடைக்குதா?

priyasaki said...

கிடைத்தால் செய்துவிடலாம். ஊரில் நிறைய சாப்பிட்டாச்சு. நாங்க இதை துவையல் செய்தும் சாப்பிடுவோம். நன்றாக இருக்கும்.நன்றி ஆசியா.