Saturday, January 10, 2015

கத்திரிக்காய் வறுவல் / Brinjal Fry

 தேவையான பொருட்கள்;
பெரிய (ஒமான்) கத்திரிக்காய் - அரைக் கிலோ
எண்ணெய் - சாலோ ஃப்ரை செய்ய தேவைக்கு.
அரைக்க:
ஒரு முழு பூண்டு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - கால் கப்(அல்லது தேவைக்கு)
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

 கத்திரிக்காயை நன்கு கழுவு துடைத்து வட்ட துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


மேலே அரைக்க சொன்னவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.

 நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை கையில் எடுத்து ஒவ்வொன்றாக அரைத்த மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 ஒரு அகலமான நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் விடவும் .சூடானவுடன் கவனமாக மசால் தடவிய கத்திரிக்காய் துண்டுகளை போடவும்.
இரு புறமும் சிவற பொரித்து எடுக்கவும்.
 மீடியம் ஃப்லேமில் வைத்து நிதானமாக மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

 டிஸ்யூ பேப்பரில் வைக்கவும்.பின்பு தட்டில் எடுத்து அடுக்கவும்.
உடனே பரிமாறினால் கிரிஸ்பாக இருக்கும்.
பொரித்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
 சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.
இது மீன் வறுவல் போல் சூப்பராக இருக்கும். பிடித்திருந்தால் செய்து பாருங்க.


3 comments:

-'பரிவை' சே.குமார் said...

செய்து பார்த்திடலாம் அக்கா...

Shamee S said...

nalla irukku akka.......

Saratha said...

கத்தரிக்காய் வறுவல் தட்டிலிருந்து எடுத்து சாப்பிட முடியவில்லை.அடுத்த தடவை பார்சல் அனுப்பி விடுங்கள்.