Friday, January 23, 2015

சிக்கன் விங்ஸ் ஃப்ரை / Chicken wings fry

 தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
சிக்கன் விங்ஸ் - அரைக்கிலோ
சிக்கன் 65 மசாலா - 3 - 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - மீடியம் சைஸ் பழத்தில்
உப்பு - தேவைக்கு.

ஊறிய சிக்கனை முக்கி எடுக்க:
முட்டை - 1
மைதா கார்ன்ஃப்லோர் மிக்ஸ்(உப்பு,மிளகு -சிறிது) சேர்த்து  ஒரு கப்
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:-
சிக்கன் விங்ஸ் ஒவ்வொன்றையும் இரண்டாக கட் செய்யவும்.தேவையற்ற தோல் பகுதியை கட் செய்யவும்.
நன்கு அலசி சுத்தமாக தண்ணீர் வடித்து வைக்கவும்.


 தண்ணீர் வடித்த சிக்கன் விங்ஸ் துண்டுகளை ஒரு பவுலில் எடுத்து அத்துடன் சிக்கன் 65 மசாலா,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,எலுமிச்சை ஜூஸ்,தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.மசாலாவில் உப்பு இருந்தால் சேர்க்க தேவையில்லை.
 நன்கு விரவி ஊற வைக்கவும்.
முன்பே செய்து ஃப்ரிட்ஜில் ஊற வைக்கலாம்.
 தனித்தனியாக முட்டையில் டிப் செய்யாமல் நான் முட்டை முழுவதையும் சேர்த்து கலந்து வைத்து விட்டேன்.

 பின்பு ஒவ்வொரு துண்டாக எடுத்து டிப் செய்து மொத்தத்தையும் தயார் செய்து கொள்ளவும்.


 ஒரு 4 டேபிள்ஸ்பூன் மைதா எடுத்தால் 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்லோர் சேர்த்து சிறிது உப்பு,மிளகு சேர்த்து கலந்து கொள்ளலாம்.நான் சும்மா குத்துமதிப்பாகத்தான் மைதா, கார்ன்ஃப்லோர் மிக்ஸ் சேர்த்தேன்.விரும்பினால் இதனோடு ப்ரெட்கிரம்ஸ் சேர்த்தும் கோட்டிங் மிக்ஸ் கலந்து வைக்கலாம்.ஒவ்வொரு முறையும் ஏதாவது மாறுதல் செய்து பொரித்து பார்க்கலாம்.

 வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.
பகுதி பகுதியாக போட்டு முறுக பொரித்து எடுக்கவும்.
நன்கு சிவற பொரிந்த பின் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் விங்ஸ் ஃப்ரை ரெடி .இப்படி பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடிக்காது.
பார்ட்டியில் ஸ்டார்டராக பரிமாறலாம். 


இதே விங்ஸ் சை லாலி பாப் மாதிரி கட் செய்தும் பொரித்து பரிமாறலாம்.
விங்ஸ் ஃப்ரெஷாக இப்படி வாங்கி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்க,சூப்பராக இருக்கும்.

1 comment:

-'பரிவை' சே.குமார் said...

ம்... செய்து பார்க்கலாமே...