Thursday, January 8, 2015

நெல்லை அவியல் / Nellai Aviyal

மீண்டும் அன்புத்தோழி உமாவின் நெல்லை அவியல் குறிப்போடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
 தேவையான பொருட்கள்;
(கேரட், பீன்ஸ் அல்லது கொத்தவரை,முருங்கை,
கத்திரி,மாங்காய்,சேனை,வெள்ளரி, வாழைக்காய்,வெள்ளைப் பூசணி எல்லாம் சேர்த்து ) - 400 கிராம்
கொர கொரப்பாக அரைக்க:
தேங்காய் - அரைகப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2- 3
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

அலங்கரிக்க : கருவேப்பிலை, மல்லி இலை.
செய்முறை:
காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும்.

 ஒரு வாணலியில்  ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.தண்ணீர் வற்றி காய் வெந்து வரும்.அடிக்கடி அகப்பை போடக்கூடாது.
 அரைத்த தேங்காய் கலவையை  சேர்க்கவும்.அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விடவும்.
 பிரட்டி விடவும்.மல்லி கருவேப்பிலை சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
 ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அதன் மீது தாளித்து கொட்டவும்.கலந்து விடவும்.
சுவையான நெல்லை அவியல் ரெடி.
சூடாகப் பரிமாறவும்.
 நெல்லை சைவ சமையல்  செய்வதற்கு சுலபமாகவும்  ருசி அருமையாகவும்  இருக்கும்.நெல்லை சைவ சாப்பாட்டில் அவியல் இல்லாத விருந்தே கிடையாது. இந்த அவியல் திருமதி உமா சங்கரின் உளுந்தஞ்சோற்றுக்கும் பிரமாதப் பொருத்தம்.

நெல்லை அவியல் குறிப்பை நமக்காக செய்து பகிர்ந்தவர் அன்புத் தோழி திருமதி.உமா சங்கர். பகிர்வுக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி.
நான் முன்பு பகிர்ந்த என்னுடைய கேரள அவியல் குறிப்பை பார்க்க கிளிக்கவும்.
இனி நேரம் வாய்க்கும்  பொழுது நெல்லை சைவ சமையல் குறிப்பு கொடுக்க முயற்சிக்கிறேன்.

7 comments:

ADHI VENKAT said...

நெல்லை அவியல் நன்றாக உள்ளது. கேரள அவியலில் உள்ள தயிரும், தேங்காயெண்ணெயும் மிஸ்ஸிங்....:)

Asiya Omar said...

ஆதி வாங்க, தாளிக்க தேங்காய் எண்ணெய் இதிலும். கவனிக்கலையா?கருத்திற்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை ஆசியா. எனக்குத் தனியாகச் சாப்பிடவும் பிடிக்கும்:)!

Saratha said...

நெல்லை அவியல் அருமையாக உள்ளது.உங்கள் கேரள அவியலில் மஞ்சள் தூள் இல்லை.தயிர் சேர்த்து இருக்கீங்க.அப்படியே நானும்,அம்மாவும் செய்வது போல இருக்கு, இரண்டுமே அருமை.

Asiya Omar said...

நன்றி ராமலஷ்மி.

சாரதா அக்கா கேரள அவியலில் காய்கறியுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்திருக்கிறேன்.கவனிக்கவில்லையா?கருத்திற்கு நன்றி.

athira said...

சூப்பரா இருக்குது. உமாவிற்கு வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார் said...

நெல்லை அவியல் கேரளா அவியல் போலவே இருக்கிறதே அக்கா...