Sunday, January 18, 2015

நெல்லை வெண்டைக்காய் புளிபச்சடி / Nellai Vendaikkai Puli Pachadi

பாரம்பரிய முறை:

தேவையான பொருட்கள்;-
வெண்டைக்காய் - கால் கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீரிய பச்சை மிளகாய் - 2
சிறிய எலுமிச்சை அளவில் கரைத்த  புளிக்கரைசல்  
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகம் - 3/4 - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம்- 2 பின்ச்
கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:-
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்துக் கொள்ளவும்.முதலில் கொண்டை, நுனிப்பகுதியை நீக்கி விட்டு நீள்வாக்கில் கட் செய்து பின் குறுக்கு வாக்கில் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்.
 முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன்.நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,தக்காளி,கீரிய பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசிய விடவும்.
 நறுக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.
 புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கலந்து விட்டு ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கிய பின்பு திறக்கவும்.
 அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கலந்து விட்டு உப்பு சரிபார்க்கவும்.
தாளித்து கொட்டவும்.
ரெடியான பச்சடியில் தாளிச்சதை கொட்டி  கலந்து விடவும்.
சுவையான நெல்லை வெண்டைக்காய் புளிபச்சடி ரெடி.

நெல்லை பக்கம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வெண்டைக்காய் பச்சடி செய்வாங்க. சிலர் சாம்பார் பொடி போட்டு செய்வாங்க, இந்த பாரம்பரிய முறை சூப்பர். இதுவும் அன்புத்தோழி உமா சங்கரிடம் கேட்டு செய்தது தான்.மிக்க நன்றி தோழி. இனி அவங்க கூட வாக்கிங் போகும் பொழுது அவங்க வீட்டு வெஜ் பாரம்பரிய சமையல் ஒவ்வொன்றாக கேட்டு சமைத்து பகிர்கிறேன்.

3 comments:

Saratha said...

நெல்லை சமையல் போட்டு அசத்துதீங்க ஆசியா ! வெண்டைக்காய் புளிபச்சடியும் அசத்தல் ! நானும் வெண்டைக்காய் பச்சடி பதிவு கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் திருநெல்வேலி அல்வா பதிவு கொடுங்கள்.

-'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் வெண்டிக்காய் பச்சடி அருமை அக்கா...

Jaleela Kamal said...

வெண்டைக்காய் புளிப்பச்சடி சூப்பர்
அழகாக நறுக்கி இருக்கீங்க//