Monday, January 12, 2015

உடுப்பி சிவப்பு சட்னி / ஈசி ரவா தோசை / Udupi red chutni / Easy rava dosai



 தேவையான பொருட்கள்;
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
பூண்டு பற்கள் - 2
புளி - சிறிது
வேர்க்கடலை - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு ,உபருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:
ஒரு கடாயில் சில துளிகள் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலையும் பூண்டையும் லேசாக சிவற வறுத்துக் கொள்ளவும்.பின்பு அதனை எடுத்து விட்டு வேர்க்கடலையை போட்டு சிவற வறுத்து எடுக்கவும்.தோல் இருந்தால் ஆறிய பின்பு நீக்கி கொள்ளவும்.கையில் வைத்து கசக்கினாலே தோல் வந்து விடும்.



 அத்துடன் துருவிய தேங்காய் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 மிக்ஸி சின்ன ஜாரில் கால் கப் அல்லது தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்.
 கெட்டித்தன்மைக்கு தக்க தண்ணீர் சேர்த்து ஒரு பவுலில் கரைத்து எடுத்துக்  கொள்ளவும்.

 தாளிக்க எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,கிள்ளிய வற்றல் கருவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் அரைத்து எடுத்து வைத்த சட்டினியில் கொட்டவும்.

 சுவையான உடுப்பி சிவப்பு சட்னி ரெடி.
இட்லி,தோசை, வெங்காய ஊத்தப்பம், ரவா தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.

திடீர் ஈசி ரவா தோசைக்கு 
ஒரு குழிக்கரண்டி கோதுமை மாவு
ஒரு குழிக்கரண்டி மைதா
ஒரு குழிக்கரண்டி ரவை 
தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அதனோடு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி,கருவேப்பிலை விரும்பினால் கால்டீஸ்பூன் மிளகு,சீரகம் தட்டிச் சேர்க்கவும்.மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 மெலிதாக மாவை தோசைக்கலத்தில் வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக சுட்டு எடுத்தால் என்னுடைய ஈசி ரவா தோசை ரெடி.நீங்களும் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.
இந்த அளவு இரண்டு பேருக்கு மொத்தம் ஆறு தோசை வரும்.
சுவையான ரவா தோசையும் உடுப்பி சிவப்பு சட்னியும் ரெடி. செய்து சாப்பிட்டு பாருங்க. வாரத்தில் ஒரு நாள் காலை அல்லது இரவு நேர டிபன் மெனுவில் இடம் பிடிக்கும்.

5 comments:

Sangeetha Nambi said...

Super delicious

Mahi said...

நல்லா இருக்கு அக்கா..சட்னி எதையும் வதக்காமல் அப்படியே அரைத்து தாளிச்சு கொட்டுவேன். ரவா தோசை செய்து பலநாளாச்சு. சீக்கிரம் ஒரு முறை உங்க மெஷர்மெண்ட்ல செய்து பார்க்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ரெசிப்பி ஆசியா..

priyasaki said...

ரவா தோசை,சட்னியும் சூப்ப்பரா இருக்கு.நன்றி ஆசியா.

-'பரிவை' சே.குமார் said...

நல்ல ரெஸிபி அக்கா...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.