Sunday, January 25, 2015

வெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)


தேவையான பொருட்கள்;
முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய:
அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ  1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

 இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு வதங்கிய பின்பு  ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் சீரகத்தூள் ,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 
 நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து வதங்க விடவும்.

 வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
 ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
பிரியாணி மசாலா பேஸ்ட் ரெடியாகிவிட்டது.இப்படி பேஸ்ட் செய்து ரெடியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் எந்த வகை பிரியாணியும் செய்யலாம்.

காய்கறி பிரியாணி செய்ய மற்ற தேவையான பொருட்கள்;

பாசுமதி அல்லது சீரக சம்பா - 2 கப்
காய்கறி - கேரட்- 1,உருளைக்கிழங்கு - 1,பீன்ஸ் - 15 எண்ணம், உரித்த பச்சை பட்டாணி - ஒரு கையளவு
பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 -5  டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - சிறியது 1
பச்சை மிளகாய் - 2  நீள்வாக்கில் நறுக்கியது.
நறுக்கிய மல்லி புதினா சிறிது -
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய் -1- 2  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரிசியை ஊற வைக்கவும்.காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பிரியாணி செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.


நறுக்கி தயாராக உள்ள காய்கறிகள் போடவும்.
ஒரு சேர பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
பாதி வெந்து வரும் பொழுது பிரியாணி மசாலா சேர்க்கவும்.
நன்கு கொதிக்கட்டும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
தண்ணீர் வடித்து விட்டு ஊறிய அரிசி சேர்த்து நன்கு பிரட்டவும்.
அரிசி அளவிற்கு இரண்டு அளவு கொதி நீர் விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
மூடி மீடியமாக நெருப்பை எரிய விடவும்.அரிசி மலர்ந்து தண்ணீர் வற்றி வரும்.எலுமிச்சை பிழியவும்.
நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
மேலே நெய் சேர்க்கவும்.

மூடி 10 நிமிடம் சிம்மில் தம் செய்யவும். அடுப்பை அணைக்கவும்.

மீண்டும் 10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.உடனே திறக்கக் கூடாது.

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெடி. ஜம்மென்று இருக்கும்.

என்னோட படங்கள் எல்லாம் மொபைலில் எடுப்பது,அவசர அவசரமாக் கிளிக்குவேன். ஒரு சில படங்கள் தெளிவில்லாமல் இருக்கலாம், எனக்கு என்னவோ சமைக்கும் பொழுது கேமராவில் எடுக்க வசதிப்பட மாட்டேங்குது. முடிந்தளவு தெளிவாக கொடுக்க முயற்சிக்கிறேன்.
இனி மீண்டும் சந்திப்போம் !

7 comments:

Saratha said...

வெஜிட்டபிள் பிரியாணி செய் முறையும்,இறுதியில் பிரியாணியுடன் நிறைய அயிட்டங்களுடன் பரிமாறி இருப்பது மிக அருமை.உங்கள் சிறிய தவறையும் சுட்டி காட்டி இருப்பதும் அருமை.

-'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் செய்முறை விளக்கம் - அருமை அக்கா...

Mahi said...

எப்பவுமே பிரியாணி மசாலா பொடி சேர்த்து குக்கர்ல தாளிச்சு விடறதுதான் வழக்கம் ஆசியாக்கா..10 நிமிஷத்தில் வேலை முடிஞ்சுரும். ஹிஹி...

நீங்க செய்து காட்டியிருப்பதை பார்க்கவே நல்லா இருக்கு. இப்படி யாராவது செய்து கொடுத்தா நல்லா ரவுண்டு கட்டி சாப்பிடலாம்! ;) :)

ஒரு முறையாவது இப்படி செய்ய முயற்சிக்கிறேன்ன்ன்ன்ன்ன்...

Vijiskitchencreations said...

My favorite. I will try your style. Thanks for posting veg item,

Vijiskitchencreations said...

Very nice biriyani recipe. I want try.

sunil kumar said...

Super recipe..

sunil kumar said...

Nice recipe..thank you 😊