Friday, February 13, 2015

ஐந்தாம் ஆண்டு நிறைவு - பிரபல பதிவர்களின் பார்வையில் சமைத்து அசத்தலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் சமையலறை உங்கள் பார்வைக்கு வந்தது இந்த இனிய நாளில் தான்.என்னுடைய ப்ரஃபைல் படமும்,வலைப்பூவின் பெயரும் அன்று தேர்வு செய்தது இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அதுவே தொடர்கிறது. 

படிப்படியாக வளர்ந்து இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். ஊக்கம் கொடுத்து  ஒத்துழைத்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மகிழ்ச்சி கலந்த மனமார்ந்த நன்றி.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வலைப்பூக்களை அனைவரும் பார்வையிடுவதோடு சரி.கருத்து தெரிவிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.
தற்காலம்  ஃபேஸ்புக் யுகம். ஒரு லைக் செய்வது இலகுவாகிவிட்டது. அதனால் அங்கே பகிர்ந்து ஒரு லைக் கிடைத்துவிட்டால் மனது திருப்தியாகிவிடுகிறது.
என்றாலும் என் இனிய வலைப்பூவின் ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட என் அன்பான நட்புள்ளங்களுக்கு ஃபேஸ்புக் மூலம் கருத்து தெரிவிக்குமாறு அழைப்புவிட்டிருந்தேன். பலர் மெசேஜிலும்,சிலர் மெயிலிலும் கருத்துக்களை அனுப்பித் தந்தனர். இன்று அதனை இங்கு  பகிர்வதே எனக்கு பெரிய கொண்டாட்டம்.

************************************************************************************************
என் வலைப்பூவை வழக்கமாகப் பார்வையிடும் சில நல்ல அன்புள்ளங்கள் அனுப்பிய கருத்துக்களை இங்கே உங்களுக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

முத்துச்சிதறல் -அன்பின் அக்கா  திருமதி மனோ சாமிநாதன்
ஆசியா உமர் என் தங்கையைப்போன்றவர். இன்முகத்திற்கும் அன்பான பேச்சுக்கும் சொந்தக்காரர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவரின் வலைத்தளத்தில் அசைவ, சைவ சமையல் குறிப்புக்கள் தவிர, வீடியோ சமையல், பிரபல பதிவர்களின் சமையல், இவரின் அனுபவங்கள், எண்ண‌ங்கள் என்று சிறப்புக்கள்  பலவற்றைப் பார்க்கலாம். இவரின் சுறுசுறுப்பாலும் திறமையாலும் மேலும் மேலும் அழகு கூடிக்கொண்டேயிருக்கும் இவர் வலைத்தளத்திற்கு ஐந்து வயது நிறைவடைகிறது. ஆசியா உமருக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!
http://manoskitchen.blogspot.in/


***************************************************************************************************
 சஷிகா - திருமதி மேனகா சத்யா

முதலில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

ஆசியா அக்காவை எனக்கும் அறுசுவையில் இருந்தே தெரியும்.அங்கும் அவர்கள் முடிந்தவரையில் சுவையான விளக்கபடங்களுடன் குறிப்புகள் கொடுப்பாங்க.

அவரின் சமையலில் அதிகம் நான்வெஜ் சமையல் ரொம்ப பிடிக்கும்.அவருடைய வலைப்பூவிலும் முடிந்தவரை விளக்கபடங்களுடன் குறிப்புகளை பகிர்வதால் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

குறிப்பாக அவருடைய குறிப்புகளில் நெல்லை தம் பிரியாணி மற்றும்பிரியாணி  கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடித்த‌ ஒன்று.

தாங்கள் மேலும் இந்த வலையுலகில் உலாவர வாழ்த்துக்கள் !!
******************************************************************************************

கொஞ்சம் வெட்டிப் பேச்சு - திருமதி சித்ரா சாலமன்
 அன்புள்ள ஆசியா அக்காவுக்கு,  
நம்மூர்  பாசத்துடனும்  எப்பொழுதும் ஒரு உற்சாகத்துடனும் , வலையுல நட்புக்களையும்  சகோதரிகளையும்  அன்புடன் ஆதரிக்கும் அக்காவின் வலையுலகம் , ஐந்து வருடங்கள் நிறைவு பெறுவதற்கு என் வாழ்த்துக்கள்!  மேலும் தொடர்ந்து தங்கள்  கருத்துக்களையும், நெல்லை மணம்  மாறாத  சமையல் குறிப்புகளையும் பகிர்ந்து  வெற்றி காண வாழ்த்துக்கிறேன்.


*********************************************************************************************


இன்றைய நாளில் செய்திகளுக்குப் பிறகு அதிகமாக வலையில் தேடப்பட்டு வருபவை சமையல் குறிப்புகளே. அன்றாட வாழ்வில் அவசியமானதும் ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியமானதாகவும் இருக்கிறது. மக்களின் இந்தத் தேவையை உணர்ந்து, பிரதிபலன் பாராமல் சிரத்தையுடன், தான் தேர்ச்சி பெற்ற சமையல் கலையின் நுணுக்கங்களை வலையில் பகிர்ந்து வருகிறவர்களில் முக்கியமான இடம் உண்டு தோழி ஆசியா ஓமருக்கு. “சமைத்து அசத்தலாம்” என நம்பிக்கை தருகிற இவரது வலைப்பூ, ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. செய்முறையின் படிப்படியான புகைப்படங்களைப் பகிர்ந்து, வாசிப்பவர் பக்குவத்தை சரிவர புரிந்து கொள்ள வேண்டும் என அக்கறை காட்டுகிறவர். சமீபமாக குறிப்புகளை காணொளியாகவும் தர ஆரம்பித்திருப்பது சிறப்பு. அத்துடன் இலக்கியம், சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வுகள் என மிளிரும் இந்த வலைப்பூவின் பயணம் தொடர என் நல்வாழ்த்துகள்! 

அன்புடன்
ராமலக்ஷ்மி
http://tamilamudam.blogspot.in/  -வலைப்பூ முத்துச்சரம்
http://photography-in-tamil.blogspot.in/ - தமிழில் புகைப்படக்கலை
http://www.atheetham.com/  - அதீதம் மின்னிதழ்

***********************************************************************************************
2008 -2009.. அறுசுவையில் கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் தொடங்கி:), இப்போ தனிகுடித்தனம்(Blog)  வந்தும் தொடருது ஆசியாவுக்கும் எனக்குமிடையேயான நட்பு.

 தன் வலைப்பூவுக்கு - “சமைத்து அசத்தலாம்” எனத் தலைப்பிட்டிருந்தாலும், சமையல் தாண்டி வேறு விஷயங்களையும் அப்பப்ப போட்ட வண்ணமிருப்பா.

ஆனாலும் இங்கு சமையலுக்கே முதலிடம் என்பதால், சமையல் குறிப்புப் பற்றி சொல்லாமல் போக முடியவில்லை, ஆசியாவின் சமையல் குறிப்புக்கள் எப்பவும் ஈசியான முறையில் செய்யக்கூடியதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். புதிதாக சமையல் பழகுவோரிலிருந்து தனியே இருந்து சமைக்கும் ஆண்கள் வரை, பார்த்துச் செய்ய ஈசியாக இருக்கும்.

அழகிய பெயரிட்டு அழகாக்கி, அழகழகாய் பதிவுகள் போட்டு, ஐந்து ஆண்டுகளைத் தொட்டுவிட்டமைக்கும்.. இன்னும் பல ஆண்டுகள் இதே துடிப்போடு பதிவுகள் போடவும் மனதார வாழ்த்துகிறேன்.

அன்புடன் அதிரா.
***********************************************************************************************

நட்புக்கும் இனிமையாக பழகுவதற்கும் இலக்கணமாகத்  திகழும் ஆசியா உமர் அக்காவை பார்த்து நான் நிறைய முறை வியந்திருக்கிறேன். சமையலில் கூட ஒருவர் இவ்வளவு ஆர்வம் காட்ட முடியுமா என்று நான் ஆச்சரியப்படுவேன் ஆசியா அக்கா  ப்ளாகை பார்க்கும் போது. அவங்க எப்படித்தான் சிரத்தையுடன் படங்கள் எடுத்து வெட்டி ஒட்டி இணைக்கிறாங்களோன்னு நினைப்பேன். நிச்சயமாக குடும்பத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை. மாஷா அல்லாஹ். சமையலே தெரியாதவங்க கூட தைரியமாக சமைக்கலாம் இவங்க ப்ளாக் பார்த்தால். விரைவில் அனைத்து சமையல் குறிப்புகளையும் தொகுத்து அழகிய புத்தகமாக வெளியிட வேண்டும்
என்ற வாழ்த்துக்களுடன்  சுஹைனா மஜ்ஹர்.

*********************************************************************************************

திரு.திண்டுக்கல் தனபாலன் 

உறவினர்களிடம் கொடுக்க வேண்டி இருப்பதால், எனது வீட்டில் அதிகம் பிரிண்ட் எடுத்த வலைத்தள பக்கங்கள் எது தெரியுமா...? 

சில சந்தேகம் வந்தால் உடனே தீர்வு கிடைப்பது எங்கே தெரியுமா...?

சில பொருட்களை வாங்க கடை வீதிகளில் அலைந்த காரணம் ஏன் தெரியுமா...?

இன்னும் பல கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் உண்டு - சமைத்து அசத்தலாமில்.

எங்களது வீட்டில் அனைவரின் சார்பில் சகலகலா சமையல் வல்லவருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பற்பல...

******************************************************************************************

Priya Versatile Recipes, Cook N Click - Mrs.Priya Suresh

Hello Akka..

Here is my few lines about ur blog...

I have crossed many blogger virtually through this immense blog world, few comes and go and many rest forever in this world. One among those fabulous blogger is Asiya akka, i have been following her blog since a long and a great fan of her varieties of briyanis she have already posted in her space even i tried few of her dishes and they came out extremely prefect. She never failed to surprise me with her constant posting with many delicious traditional dishes. I came to know more Arabic dishes through reading her posts. Thanks akka for inspiring me to cook varieties of dishes and your blog is a treasure for many bloggers like me..Keep up your good work.

Happy blog anniversary.

******************************************************************************************
இவருடைய பதிவுகள் எல்லாமே அருமையாக இருக்கும். எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே இவருடைய பதிவுகள் பிடிக்கும். காரணம் என் மகள் சொல்வாங்க "நாமே நேரடியா சமைப்பது போல் இவங்க படம் போட்டிருப்பது அசத்தல்" எனும்போது  "அது தான் அவங்க பிளஸ்" என்று நான் சொல்வேன். இதையெல்லாம் சிரித்த முகமாய் ஆமோதிக்கும் என் தங்க்ஸ். இப்படியாக எங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்கள் ஆசியாக்கா.

சுருக்கமாக சொல்லவேணும் என்றால், சரித்திரத்திற்கு ஒரு "ஒமர் முக்தார்", சமையலறைக்கு ஒரு "ஆசியா ஓமர்" 

என்றென்றும் அன்புடன்
எம் அப்துல் காதர்

*****************************************************************************************

சுஜிதா ஈசி குக்கிங்  - திருமதி சுஜிதா ரூபன்
சமைத்து அசத்தலாம் வலைப்பூமூலம், நான் நிறைய அசைவ உணவுகளை கற்றுக்கொண்டேன், எளிய சுருக்கமான விளக்கம் மிகவும் பயனுள்ளது, ஆசியா அக்கா எனக்கு மிகவும் அருமையான தோழி, சமைத்து அசத்தலாம் வலைப்பூ இன்னும் பல தகவல்கள், குறிப்புகள், தந்து பல ஆண்டுகள் வலம் வர  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*********************************************************************************************
சாரதா சமையல் -திருமதி சாரதா ஜெய்
ஆசியா உங்களுடைய வலைப்பூவின் ஆறாம் ஆண்டு தொடக்கத்திற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் !

உங்களுடைய சமைத்து அசத்தலாம் வலைப்பூ எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.உங்கள் வலைப்பூவின் பெயருக்கு ஏற்ற படி உங்களுடைய எல்லா சமையல் குறிப்புகளும் நல்ல அசத்தலாக இருக்கும். எனக்கு விருப்பமுள்ள சமையலை உங்கள் குறிப்புகளிலிருந்து செய்தும் பார்த்திருக்கிறேன்.நல்ல சுவையாக இருக்கும். இன்னும் நீங்கள் நிறைய சமையல் குறிப்புகள் கொடுக்க வேண்டும். உங்களுடைய வலைப்பூ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் !
***********************************************************************************************
ரசி குரு (இளவரசி )
APPRECIATIVE ARTICLES
BEAUTIFUL  POEMS
CHARMING CLICKS
DELICIOUS RECIPES
ESTABLISHED BLOG
FABULOUS  WORK
GREAT GOING.
HATS OFF MAM

*********************************************************************************************

Assalamu alaikum Akka,
How r u?   Mabrook on your blog anniversary! Here is my review for your blog
Many wishes to my virtual sister on the anniversary of the blog... Wishing you many more years of wonderful blogging .. In Sha Allah. Akka your blog always reminds me of many traditional dishes that I had in my childhood! You have a wonderful blog with traditional and modern recipes!! Simple and easy to follow instructions.!! Akka please blog more traditional recipes thats been forgotten  in this modern world.

***********************************************************************************************
அன்பின் ஆசியா! 
உங்கள் ப்ளாக்  ''சமைத்து அசத்தலாம்''  ல் நீங்க கொடுத்திருந்த குறிப்புகளை நான் பார்த்து சமைத்து வீட்டினரையும், நண்பர்களையும் அசத்தியிருக்கேன். செய்திருந்த குறிப்புகளையும் எனது ப்ளாக் ஆன
http://piriyasaki.blogspot.de. பகிர்ந்திருந்தேன். குறிப்புகள் மிகவும் சுலபமாகவும், ஈஸியாகவும், வித்தியாசமாகவும், நல்ல விளக்கமாகவும்,படங்களுடன் பகிர்வாக தருகின்றீங்க. நீங்க சமையல் குறிப்புகளை வீடியோவா தருவதால் சமையல் இன்னும் ஈஸியாக இருக்கு. இப்படி நல்ல குறிப்புகளை தந்த நீங்க,  இனியும் தொடர்ந்து குறிப்புகள் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சமைத்து அசத்தலாம்' 5 ஆண்டுகளை நிறைவு செய்து, இப்போ 6ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. இத்தருணம் அத்தளத்தை வெற்றிகரமாக கொண்டுநடாத்தும் அன்பு ஆசியா அவர்கள், இப்படியே வெற்றிகரமாக பல ஆண்டுகள் தொடர்ந்து நடாத்தவேணுமென மனதார வாழ்த்துகின்றேன்.

-அன்புடன்
-ப்ரியஷகி அம்மு-

***********************************************************************************************
Savitha's Kitchen - Mrs.Savitha Ramesh

Hi Akka,
Have been following your blog since 2011. It's a treasure of great recipes. Each and every recipe is unique. Loved the way , you have presented it. Particularly , loved all your non veg recipes. Have watched your videos too. It will be very simple and neat. When you gave a break for blogging, we felt very bad. We need your recipes badly. Never saw these many non veg recipes in any blog. Keep up the good work. Hearty congratulation for your  blog anniversary.
                             Savitha Ramesh
                              Savitha's kitchen


************************************************************************************************
திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா
அன்புச்சகோதரி திருமதி. ஆசியா உமர்அவர்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்.
தங்களுடைய 5th anniversary celebration க்கு என்மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.  

தாங்கள் எவ்வளவோ சிறப்பான பதிவுகள்
வெளியிட்டுள்ளீர்கள். முன்பெல்லாம் என்பதிவுகளுக்கும்
எவ்வளவோ பின்னூட்டங்கள்கொடுத்து
உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.

சமீபகாலமாக தங்களை பதிவுலகில் எங்குமேகாணோமே என்ற வருத்தம் எனக்குஏற்பட்டது.

oooooooooo

என் வீட்டுத்தோட்டத்தில் ......’ என்ற தலைப்பில் என் சமீபத்திய பதிவு ஒன்றில் தங்களுக்குச் சிறப்பிடம் தந்துஎழுதியிருந்தேன். http://gopu1949.blogspot.in/2015/01/11-of-16-61-70.html அதற்கும் தாங்கள் பின்னூட்டம் அளித்திருந்தீர்கள். அப்போதுதான் தங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது என்பதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன். தங்கள் உடல்நலம் விரைவில் குணமாக என் பிரார்த்தனைகள்.
oooooooooo

என்னுடைய பழைய பதிவானஉணவே வா ... உயிரே போ’ http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html என்ற பதிவினில் தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் இதோ:

asiya omarSeptember 5, 2011 at 9:25 AM
மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.

 உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,

அவசரப்பட்டு என் வலைப்பூவிற்குசமைத்து அசத்தலாம்ன்னு பெயர் வைத்துவிட்டேனோ?

சமைக்க ஆரம்பிக்கலாம்ன்னு வைத்திருக்கனும்.

 நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க

வாழ்த்துக்கள்.

 சார் ஒரு சிறிய வேண்டுகோள்: அப்ப அப்ப உங்களைக் கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை

வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.

அதற்கான என் பதில் இதோ:


வை.கோபாலகிருஷ்ணன்September 5, 2011 at 3:37 PM
asiya omar said...


//மிக அருமையான பகிர்வு. முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.//


 மிக்க நன்றி. நானும் அவர்களுக்குத் தான், நன்றி சொல்ல வேண்டியவன். தொடர்பதிவாக

எழுத என்னை வற்புருத்தி அழைத்ததே அவர்கள் தான்.


//உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு

மூலம் தெரிஞ்சிகிட்டேன். அவசரப்பட்டு என் வலைப்பூவிற்குசமைத்து அசத்தலாம்ன்னு

பெயர் வைத்துவிட்டேனோ? ‘சமைக்க ஆரம்பிக்கலாம்ன்னு வைத்திருக்கனும்.//

 அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க. நீங்க எழுதும் புதுப்புது சமாசாரங்கள் தான் இந்த

நவீன காலத்திற்கு ஒத்துவரும்.

 நான் சொன்னதெல்லாம் பொதுவாக தமிழ்நாட்டு ஐயர் வீடுகளில் செய்யும் உணவுப் பதார்த்தங்களேயாகும். அவற்றில் புதுமை ஏதும் கிடையாது.

//நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 //சார் ஒரு சிறிய வேண்டுகோள்: அப்ப அப்ப உங்களைக் கவர்ந்த உங்க வீட்டு

ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.//

என்னைக் கவர்ந்த எங்கள் வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போடலாம் தான். ஆனால்

அதில் ஒருசில சிக்கல்கள் உள்ளனவே!

நன்றாக ருசியாக சமைக்கத் தெரிந்த என் வீட்டு நபர்களுக்கு, எப்படி சமைத்தோம்,

என்னென்ன பொருட்கள் எவ்வளவு அளவு போட்டோம், எப்படி இவ்வளவு ருசியாகச்

செய்தோம், என Sequence-wise ஆக அழகாக ஒன்றுவிடாமல் எடுத்துச்சொல்ல வராது.

 நானே அருகில் நின்று கவனித்தால் அவர்களுக்கு வேலையும் ஓடாது, சமையலும் சரிவர ருசியாக அமையாமல் போய்விடும்.

 தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிப்பதும் நான் இன்றுள்ள நிலைமையில் சரிப்பட்டு வராத காரியம்.

எனவே எனக்கு நீங்கள் சொல்வது போல பதிவிட மிகவும் ஆசையிருந்தும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
ருசியாக சாப்பிடவாவது தொடர்ந்து அதிர்ஷ்டம் இருந்தால் சரியே, என நினைக்கிறேன்.
 அன்புடன் vgk

oooooooooo

சமையல் அட்டகாசங்கள்பதிவர் திருமதி ஜலீலா கமால் அவர்கள் நடத்தியதோர் சமையல் குறிப்புகள் போட்டியில் தங்களுடனும் தங்களைப்போன்ற பிரபல பெண் பதிவர்கள் சிலருடனும் சேர்ந்து நானும் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசினை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.

இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

அதனைத் தாங்களும் தங்கள் தங்கள் வலைத்தளத்தினில் தனிப்பதிவாகவேhttp://asiyaomar.blogspot.in/2013/01/healthy-adai-awads.html வெளியிட்டுச் சிறப்பித்திருந்ததை என்னால் இன்றும் மறக்க இயலாமல் மகிழ்ச்சியாக உள்ளது.

oooooooooo

தங்களின் வலைப்பதிவுக்கு ஐந்தாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் 
கோபு [VGK]
[வை. கோபாலகிருஷ்ணன்
***********************************************************************************************

First of all I would like to congratulate you on reaching such a huge mile stone. And I am very happy to be your friend even though we haven't met in person. 
Asiya akka has been my friend since I started blogging, though we have not met in person. I love her recipes and I am so honoured to do a guest post in her blog. On completing five years of blogging, I would like to congratulate her on reaching this mile stone. Asiya akka, i wish you many more years of wonderful blogging and thousands of delicious recipes from you.

**********************************************************************************************

”சமைத்து அசத்தலாம் வலைப்பூவில் வரும் அத்தனை சைவ குறிப்புகளுக்கும் ரசிகை நான்…:) படிப்படியான செய்முறை படங்களுடன் புதிதாக சமைப்பவர்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் தருவது மிகச் சிறப்பான விஷயம். வாரம் ஒரு சிறப்பு விருந்தினரின் பகிர்வு. இவை மட்டுமல்லாது கதை, கவிதை என பல்சுவை பெட்டகமாய் விளங்கும் தங்களது வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் பல உயரத்தை தொட என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்….”

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

*******************************************************************************************************
சமையல் அட்டகாசங்கள் - திருமதி ஜலீலா கமால்
அன்பு தோழி ஆசியாவின் வலைப்பூ அவர்கள் பிலாக் பெயருக்கு ஏற்றார்போல ஓவ்வொரு குறிப்பும் அசத்தல் தான்.
படிப்படியான சமையல் குறிப்புகள் புதிதாக சமைக்க கற்று கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆசியாவின் வலைதளத்தில் கத்திரிக்காய் சமையல் குறிப்புகளும், மண்சட்டியில் செய்த மீன் குழம்பு வகைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அரபிக் ரெசிபியில் சிக்கன் மக்லூபா , மிகவும் பொறுமையாகவும் பக்குவமாகவும் செய்து இருக்கிறார்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா.

சென்னை ப்ளாசாவிற்கு மறக்காமல் விசிட் செய்யவும்.
சென்னை ப்ளாசா. 

*********************************************************************************************
மனசு - திரு.பரிவை. சே.குமார்
அக்கா....
வணக்கம்.
நலம் நலமே ஆகுக.
தாங்கள்தான் எனது கதைகளுக்கு கருத்துக்கள் சொல்லி எனது எழுத்தை மெருகேற்ற வைத்தவர்களில் தாங்களும் ஒருவர். சமீப நாட்களாக தாங்கள் அதிகம் கருத்துக்கள் சொல்வதில்லை. ஒருநாள் கொஞ்ச நாள் ஓய்வு என்று சொல்லியிருந்தீர்கள்.
உடல் நலமெல்லாம் எப்படியிருக்கிறது அக்கா... இப்போ நான் அலைனில்தான் இருக்கிறேன். இரண்டு மாத புராஜெக்ட் பணிக்காக வந்திருக்கிறேன்.
முதலில் தங்களின் சமைத்து அசத்தலாம் தளத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்காகவும் ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்க்கும் வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பாக சமையல் குறிப்புக்களை பகிரும் ஒரு சிலரில் தாங்களும் ஒருவர். அதுவும் படங்களுடன் சில சமையங்களில் அழகாக் வீடியோவும் எடுத்துப் பகிர்ந்து தங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமையல் நுணுக்கத்தை அழகாகக் கற்றுக் கொள்ளும் வகையில் பகிர்ந்து ரொம்ப சிரத்தையுடன் பதிவதில் தாங்கள் சிறப்பானர். சிறப்பு விருந்தினர் பக்கம் ஆரம்பித்து மற்றவர்களுடைய குறிப்புக்களையும் பகிர்ந்து கொண்டவர் நீங்கள். உங்கள் சமைத்து அசத்தலாம் தளத்தில் தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள் அக்கா...

************************************************************************************************
ஆசியாவின் சமையல் குறிப்புகளை வாசித்தால் சமையல் ராணிகள் மட்டுமல்ல வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்த புதுமணப்பெண்கள் கூட

குடும்பத்தினர், விருந்தினர் என்று அனைவரையும் தங்கள் சமையலால் அசத்தி விடலாம். படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்டிருக்கும் அவரது குறிப்புகளோடு முதன் முறையாக வீடியோவில் விளக்கியதாகட்டும், சமையல் பொருட்களை அவற்றின் வெவ்வேறு பெயர்களுடன் விளக்கியிருப்பதாகட்டும் மண்பாண்ட சமையலின் சிறப்பைப் பகிர்ந்ததாகட்டும் 
ஆசியாவின் சமையல் குறிப்புகளை வாசித்தால் சமையல் 
ராணிகள் மட்டுமல்ல வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்த புதுமணப்பெண்கள் கூட டும்.. இவை எல்லாமே ஆசியாவின் தனிச்சிறப்புகள். மேலும் தான் பிறந்த நெல்லை மண்ணுக்கேயுரிய உணவுகளையும் அவற்றின் ஒரிஜினல் சுவையோடு பரிமாறியிருப்பது எனக்கு இவரது தளத்தில் மிகவும் பிடித்தமான ஒன்று.
ஆசியா.. உங்கள் தளம் மேலும் பல பிறந்ததினங்களைக் கண்டு மென்மேலும் சிறப்போங்கி வளர இனிய வாழ்த்துகள்.
வலைப்பூக்கள்:

************************************************************************************************
சிரமம் பார்க்காமல் கருத்துக்களை அனுப்பிய  அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும், இந்நாள் வரை வருகை புரிந்து எனக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும்  கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த மனமார்ந்த நன்றியினை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும்  எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பகிர்வுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

23 comments:

Kousalya raj said...

சந்தோசமாக இருக்கிறது தோழி...நாம் இருவரும் ஒரே சமயத்தில் தான் எழுத வந்தோம் என நினைக்கிறேன்...வேகமாக காலம் ஓடிவிட்டது போல தோன்றுகிறது.

அசைவ சமையல் பத்தி என்கிட்ட தோழிகள்,உறவினர்கள் கேட்டால் உங்கள் தளத்தின் லிங்க் கொடுத்துவிடுவேன். அப்டி படிக்க வந்தவர்கள் செய்த புது சமையலை அவங்க வீட்டினர் பாராட்ட அதை என்னிடம் சொல்வார்கள்...அப்போது ஆசியா என் பிரெண்ட்டாக்கும்னு பெருமையா இருக்கும்.

நண்பர்களின் வாழ்த்துகள் பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. என் அன்பான வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க தோழி. :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

பதிவுலகில் வெற்றிகரமான ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு மீண்டும் என் நல்வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, தங்களைப் பாராட்டி, புகழ்ந்து, எத்தனைப் பதிவர்கள் எத்தனைக் கருத்துக்கள் எழுதி சிறப்பித்துள்ளார்கள். பார்க்கவும், படிக்கவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவரும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள் + நன்றிகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதியுள்ள குறிப்புகளையும் மறக்காமல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

அன்புடன் VGK

சாந்தி மாரியப்பன் said...

ஏவ்வ்வ்வ்வ்.. விருந்துச்சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சாச்சு. நாந்தான் மொதல்லயா? :-)

உங்கள் தளம் மேலும் பல பிறந்த நாட்களைக் காண வேண்டுமென்று இன்னொரு முறையும் வாழ்த்துகிறேன்.

Menaga sathia said...

அனைவரின் கருத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமானவை...மீண்டும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்க்கா ..6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Chitra said...

Congratulations ! Happy for you !

Nachiya Shahab said...

ஐந்தாம் ஆண்டு Congratulations ! Happy for you !Asia akkaa

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...

ADHI VENKAT said...

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் வலைப்பூவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இத்தனை பிரபலங்களுக்கு மத்தியில் என்னுடைய கருத்துக்களும் இடம்பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

தங்களின் உடல் நலம் பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

ராமலக்ஷ்மி said...

அனைவரது வாழ்த்துகளுடனும் தொடர்ந்து அசத்துங்கள் ஆசியா!

Savitha Ganesan said...

It's a great way to celebrate your anniversary. It's like a auto graph akka. Congrats.

Jaleela Kamal said...

இப்ப தான் பிளாக் ஆரம்பித்த மாதிரி இருக்கு அதற்குள் ஐந்தாண்டுகள் முடிவடைந்து விட்டன காலம் மிக விரைவாக ஓடுகிறது ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்கள் சமைத்து அசத்தலாமுக்கு என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இனி மேல் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Congrats akka...wishing u many more and beautiful years of blogging...super post akka..

Saratha J said...

ஆறாம் ஆண்டு தொடக்கத்துக்கு மீண்டும் வாழ்த்துக்கள்! என்னுடைய குறிப்பையும் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

பரிவை சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...
ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது உங்களைத் தொடரும் பலரில் என்னையும் தம்பியெனப் பாவித்து எனது கருத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

தொடர்ந்து எழுதுங்க... இன்னும் சுவையான சமையல் குறிப்புக்களைத் தாருங்கள்...

Kolly wood said...

6 ஆம் ஆண்டு துவக்கவிழா நல் வாழ்த்துகள். இனிமேலும் நிறைய சமைத்து அசத்திக்கொண்டே இருக்க வாழ்த்துக்கிறேன்

Mahi said...

Congrats on your milestone akka!

// பிரபல பதிவர்களின் பார்வையில்// - good idea! :)

happy blogging asiya akka!

athira said...

ஆஹா அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள் ஆசியா. பிரபல பதிவர் வரிசையில் என்னையும் இணைச்சிட்டீங்களே.. நன்றி.

இரு வரியில் கேட்டதற்கு ஒரு போஸ்ட்டே போட்டிட்டார் கோபு அண்ணன்:) என்று நான் சொல்லவில்லை:).

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஆஆஆஆ ... அதிரா ...
நீங்க வந்துட்டீங்களா !

உடனே ஓடியாங்கோ, ஓடியாங்கோ:

http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html

http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html

மிகவும் அரியதொரு வாய்ப்பு. நழுவ விடாதீங்கோ. ஜொள்ளிட்டேன்.

அன்புடன் கோபு அண்ணன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

athira said...

// பிரபல பதிவர் வரிசையில் என்னையும் இணைச்சிட்டீங்களே.. நன்றி.//

உங்களோடு என்னையும்கூட இணைச்சுட்டாங்க ... அதிரா.

அதிரடி, அலம்பல், அட்டகாச, ஸ்வீட் சிக்ஸ்டீன், பிரித்தானியா இளவரசி அதிராவால் நானும்
பிரபலமாயிட்டேன். :)

//இரு வரியில் கேட்டதற்கு ஒரு போஸ்ட்டே போட்டிட்டார் கோபு அண்ணன்:) என்று நான் சொல்லவில்லை:).//

நிறைய எடிட் செய்து சுருக்கி வெளியிடப்போவதாகச் சொன்னாங்க அதிரா. அதனால் நானே மிகவும் குறைச்சுக்கிட்டேன்.....

உடனே புறப்பட்டு என் வலைப்பக்கம் வாங்கோ. மிகப்பெரிய விருந்தே 6 பந்திகளுடன் உங்களுக்காகக் காத்துள்ளது.

பிரியமுள்ள கோபு அண்ணன்.

வெங்கட் நாகராஜ் said...

ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

balkkisrani said...

வாழ்த்துக்கள் அக்கா